சற்று முன்

காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |    “சாத்தியமற்றதை மேடையில் சாத்தியமாக்கிய முரளிதரன்” - இயக்குநர் K. பாக்யராஜ்   |    எல்லைகளை கடந்த மாஸ் - ஜப்பானில் ‘புஷ்பா 2’ 14 நாளில் ரூ.6.1 கோடி வசூல்!   |    Hotstar Specials-ஆக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'லக்கி' திரைப்படம் JioHotstar-ல்   |   

சினிமா செய்திகள்

நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு
Updated on : 08 February 2026

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மை லார்ட்’ (My Lord). இந்த படத்தில் நட்சத்திர நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக, அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார்.



 



வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



 



பட வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.



 



இந்நிகழ்வினில்



குரு சோமசுந்தரம் பேசியதாவது..,



இயக்குநர் ராஜு முருகன் அவர்களை நான் முதலில் குக்கூ படத்தில்  ஒரு கதாபாத்திரத்திற்காகத் தான் சந்தித்தேன். அவர் எழுத்துக்களை முன்பே படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் கொண்ட அனுபவம், சமூகத்தின் மீது கொண்ட அக்கறை — அதெல்லாம் அவரது படைப்புகளில் தெளிவாக தெரிகிறது. ஜோக்கர் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு பெருமை. இந்த படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. சசி சார் உடன் நடித்தது ரொம்ப சந்தோஷம். குறிப்பாக சைத்ரா — தமிழ் சினிமாவுக்கு தேவையான நடிகை,  அவருடைய நடிப்பு மிகவும் சிறப்பு. இந்த படம் ஒரு வாழ்க்கையை முழுமையாக பார்த்து, அதன் சுக–துக்கங்களை நேர்மையாக பேசும் படம். அதுதான் நல்ல, மக்களுக்கான சினிமாவை உருவாக்குகிறது.



 



இப்படிப்பட்ட படங்களை தயங்காமல் தயாரிக்கும் ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் அவர்களுக்கு என் நன்றி. கமர்ஷியல் கணக்கை மட்டும் பார்க்காமல்,மக்களுக்கான சினிமாவை ஆதரிப்பது பாராட்டுக்குரியது. இசை பற்றியும் சொல்ல வேண்டும். ஷான் ரோல்ட் இசையில் வந்த என் படங்கள் எப்போதும் தனித்துவமாக இருந்துள்ளன. இந்த படத்திலும் இசை ஒரு முக்கிய பலமாக இருக்கும். இந்த படம் பிப்ரவரி 13 அன்று வெளியாகிறது. ஊடக நண்பர்கள் இதைப் பற்றி எழுதி மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி



 



இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது..,



சினிமாவிலிருந்து சில பேர் கண்டிப்பாக ஜெயிக்கணும் என்று நம்ம மனசார ஆசைப்படுவோம். அந்த வகையில் எனக்கு மிகவும் முக்கியமானவர் ராஜு முருகன். சும்மா ஒரு கதையை சொல்லி சம்பளம் வாங்கி போகாமல், ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் இருக்கும் மாதிரி, ஒரு கருத்தோடு படம் பண்ணிக்கிட்டே இருக்கிறவர். இப்போ இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் ரொம்பக் குறைவு. இங்கே இவ்வளோ பேர் கூடிவந்திருக்கிறதுக்கே காரணம் அவருடைய எழுத்து தான். இந்த படம் பார்த்த பிறகு உறுதியாக சொல்ல முடியும், ராஜுமுருகனுக்கு இது இன்னொரு பெரிய அடையாளம். படம் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது.



 



இப்படிப்பட்ட கதைகளை படம் ஆக்குறது சவாலான விஷயம். அதற்கு ஒரு துணிச்சலான தயாரிப்பாளர், அதை நம்பி நடிக்கிற நடிகர் தேவை. அந்த துணிச்சலை காட்டி இந்த படத்திற்கு ஓகே சொன்ன சசிகுமார் சாருக்கு மிகப் பெரிய நன்றி. அவர் இந்த மாதிரி மனிதநேயமான, கருத்துள்ள படங்களை தொடர்ந்து ஆதரிப்பது ரொம்ப முக்கியம். அதனால்தான் இந்த படம் இவ்வளவு நேர்மையாக வந்திருக்கிறது. மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால், இது கமர்ஷியலாகவும், கருத்து ரீதியாகவும் மக்களிடம் பேசக்கூடிய ஒரு நல்ல படம். ஜோக்கர், குக்கூ மாதிரி இந்த வருடத்தில் நினைவில் நிற்கும் படமாக இது இருக்கும்.



 



இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது..,



நேற்று நான் தொடர்ந்து இரண்டு படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று இந்த ‘மை லார்ட்’. இந்த படம் முடிந்த பிறகு, என்னோட அசிஸ்டன்ட்ஸோட சேர்ந்து அதிக நேரம் விவாதம் பண்ண வைத்த படம் இது. இந்த படம் ஒரு விஷயத்தை தெளிவாக கேட்கிறது – எளிய மனிதன் எல்லாத்தையும் இழந்த பிறகு, அவனிடம் மீதமிருக்கும் கடைசி ஆயுதம் என்ன? அந்த கேள்வியையே இந்த படம் ரொம்ப ஆழமாக முன்வைக்கிறது.



 



சசிகுமார் சார் கேரக்டர், ஒரு எறும்பு, ஒரு எலி, ஒரு பூனை வரை காப்பாற்றுற மனிதன், ஆனா “ஒரு மனிதனை விட்டுவிடலாமா?”ன்னு கேள்வி எழுப்பும் இடத்துல எனக்கு உண்மையிலேயே ஒரு ஷாக் இருந்தது. இது சரி–தவறு என்று தீர்ப்பளிக்குற படம் இல்லை. நம்ம மனசுக்குள்ள இருக்குற நியாயம், மனிதத்தன்மை, அறம்

இதையெல்லாம் நம்மையே யோசிக்க வைக்குற படம்.



 



ராஜுமுருகன் தொடர்ந்து இப்படிப்பட்ட சினிமாவை உறுதியோட செய்து வருவார். தான் எழுத்தாளனாக இருந்த போது சந்தித்த அத்தனை மனிதர்களையும் திரையில் கொண்டு வரத் துடிப்பவர்  அதுக்காக தமிழ் சினிமா அவருக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்.



 



ஷான் ரோல்டன்  இசை, நடிகர்களின் இயல்பான நடிப்பு, அம்பேத்கர் சார் மாதிரி தயாரிப்பாளர்கள் – இந்த எல்லாமே இந்த படத்தை ஒரு முக்கியமான படமாக மாற்றியிருக்கிறது. மை லார்ட்  என்னை யோசிக்க வைத்த, உள்ளுக்குள் உலுக்கிய படம். படக்குழுவிற்கு பெரிய வாழ்த்துக்கள்.



 





 



இயக்குநர் பாலா பேசியதாவது..,



தயாரிப்பாளர் அம்பேத்கர் குமார் மிக நல்ல  கதைகளை மிகத் தேர்ந்தெடுத்து, இப்படிப்பட்ட அர்த்தமுள்ள படங்களை தயாரிப்பது பெரிய விஷயம். இன்னும் இரண்டு படங்கள் இதே ராஜு முருகனுக்கு செய்துவிடுங்கள் நீங்கள் கண்டிப்பாக மந்திரியாகிவிடலாம்.



 



“‘குக்கூ’, ‘ஜோக்கர்’, இப்போது ‘மை லார்ட்’ – டைட்டிலிலேயே நக்கலையும் கருத்தையும் சேர்த்து வைக்கும் தைரியம் ராஜுமுருகனுக்கே உரியது. அவர் சந்தித்த மனிதர்களையும், வாழ்க்கையையும் கதாபாத்திரங்களாக மாற்றும் திறமை இந்த படத்திலும் தெளிவாக தெரிகிறது” படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றாலும், “நிகழ்வில் பேசியவர்களின் கருத்துகளையும், படம் குறித்து வந்துள்ள எதிர்வினைகளையும் பார்த்தால், இது மரியாதைக்குரிய, தரமான படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை”



 



“சசிகுமார் எந்த படமாக இருந்தாலும் முழுமையாக தன்னை ஒப்படைக்கும் நடிகர். இந்த படத்தில் அவருடைய ஈடுபாடும், நடிப்பும் இன்னும் அதிகமாக தெரிகிறது. குறிப்பாக நடனக் காட்சிகள் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. நடிகை சைத்ரா  “உண்மையாக நல்ல நடிகை. சில காட்சிகளில் அவருடைய ஆக்ரோஷமான, ஆழமான நடிப்பு பார்ப்பவர்களை கட்டிப்போடும். தமிழ் சினிமா இப்படிப்பட்ட நடிகைகளை பாதுகாத்து, அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்”.



 



“‘மை லார்ட்’ நல்ல படம் மட்டுமல்ல, நம்பிக்கையை தரும் படம். படம் கண்டிப்பாக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் வாழ்த்துக்கள்.



 



தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது..,



ஒலிம்பியா மூவிஸ் சார்பில் வாழ்த்த வந்த அனைவருக்கும் என் நன்றிகள்.



 



ராஜுமுருகன் எழுத்தாளராக இருந்த போதே தெரியும். அவர் என்னை சந்தித்து  ஜிப்சி கதை சொன்னார். அந்தப் படம் எனக்கு வெற்றிப்படம் தான். அவர் இந்த கதையை சொன்ன போது சின்ன படமாக எடுக்கலாம் என்றார். அடுத்து நீரவ் ஷா, ஷான் ரோல்டன் என்றேல்லாம் சொன்னார். இறுதியாக சசிக்குமார் நடிக்க வைக்கலாம் என்றார். அப்போது தான் எனக்கு நம்பிக்கை வந்தது. இம்மாதிரியான படத்தை மக்களிடம் சேர்க்க அவர் மாதிரி ஒரு நடிகர் கண்டிப்பாக வேண்டும். நடிகை சைத்ரா அவர்களும் அற்புதமாக நடித்துள்ளார். ஷான் மிக அற்புதமான இசையை தந்துள்ளார்.



 



நான் இனி எத்தனை படங்கள் தயாரித்தாலும் மை லார்ட் மாதிரி ஒரு படம் செய்வேனா எனத் தெரியாது அந்தளவு இது மிகச்சிறந்த படம் அனைவருக்கும் நன்றி.



 



நடிகை சைத்ரா பேசியதாவது..,

 

“இங்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ராஜு சார் மற்றும் எங்கள் சினிமாவுக்காக நீங்கள் இங்கு வந்து பேசியது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. என் நடிப்பைப் பற்றியும், படத்தைப் பற்றியும் நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுத்தது”



 



“தமிழ் மொழி எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தமானது. இந்தப் படத்தின் மூலம் அந்த விருப்பம் இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழ் மொழியை மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அனுபவம் எனக்குள் உருவாக்கியுள்ளது”



 



இயக்குநர் ராஜு சார் குறித்து சொல்ல வேண்டும் அவருடைய படங்களை நான் முன்பே அறிந்திருந்தாலும், அவருடைய மனிதநேயமும் நம்பிக்கையும் இந்தப் படத்தின் போது எனக்கு நெருக்கமாக தெரிந்தது. ஆரம்பத்தில் எனக்கு சிறிது பயம் இருந்தது. ஆனால் அவர் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் தான் இந்தப் பயணத்தை எனக்கு எளிதாக்கியது.  சசிக்குமார் மிகப்பெரிய இயக்குநர் நடிகர் அவருடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம் அவர் எனக்கு நிறைய சொல்லித்தந்தார்.



 



“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக என்னை இணைத்துக்கொண்ட ஒலிம்பியா பிலிம்ஸ்  நிறுவனத்திற்கும், முழு படக்குழுவிற்கும் மனப்பூர்வமான நன்றி. இந்த அனுபவம் என் வாழ்க்கையிலும், கலைப் பயணத்திலும் என்றும் நினைவில் இருக்கும்” நன்றி.



 



இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,



இந்த படம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியமானதாக தெரிகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதில் சொல்லப்படும் கருத்தும், அதை அணுகிய விதமும் நேர்மையானது. சமூக உணர்வோடு சொல்லப்படும் விஷயங்கள் எளிதானவை அல்ல. ஆனால் அவை மனிதர்களை மையமாக வைத்து பேசும்போது தான் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும்.



 



ராஜுமுருகன் இந்தப்படத்தின் கதை சொன்னபோது இது சமூகம் சார்ந்த படமாக இருக்குமென்று நினைத்தேன் ஆனால் இது ஜனரஞ்சக படமாகவும் இருந்தது.  இசை, காட்சி அமைப்பு, பாடல்கள் – அனைத்தும் கதைக்கு ஆதரவாக, சினிமாட்டிக் அனுபவத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன. வெறும் எண்டர்டெயின்மெண்ட் மட்டுமல்ல; சிந்திக்க வைக்கும் உள்ளடக்கத்தையும் இந்த படம் வழங்குகிறது.



 



நான் அண்ணா எனச் சொல்லி பெருமைப்படும் நபர் சசிக்குமார் அவரிடம் எந்த ஈகோவும் இல்லை. மிகச்சிறந்த மனிதர் இந்தப்படத்தை மிகச்சிறப்பாக ஆக்கியிருக்கிறார்.  சைத்ரா நடிப்பை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. கோவில்பட்டி பொண்ணாக மாறியிருக்கிறார்.



 



இந்த முயற்சி ஒரு தனித்துவமான கலை அனுபவம். இந்த படக்குழுவினரின் உழைப்புக்கும், நேர்மையான அணுகுமுறைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.



 



நடிகர் சசிக்குமார் பேசியதாவது..,



‘மை லார்ட்’ திரைப்படம் கோர்ட்டை மையமாக கொண்ட படம் அல்ல; அதிகாரம் ஒரு எளிய மனிதனின் கையில் கிடைத்தால் அவன் அதை எவ்வாறு பயன்படுத்துவான் என்பதையே மையமாகக் கொண்டது என நடிகர் சசிகுமார் தெரிவித்தார். ‘மை லார்ட்’ என்ற தலைப்பு அந்த மனிதனின் மனநிலையையும் கதாபாத்திரத்தின் தன்மையையும் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.



 



கதையில் எந்த மாற்றமும் செய்யாமல் படம் எடுக்க முழு சுதந்திரம் வழங்கிய தயாரிப்பாளர் அம்பேத்குமார்க்கு அவர் நன்றி தெரிவித்தார். இது நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் குழு வரை அனைவரின் நேர்மையான உழைப்பால் உருவான கூட்டு முயற்சி என்றும், படம் அனைவரையும் மகிழ்விக்கும். 



 



இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது..,



‘மை லார்ட்’ திரைப்படம் எந்த கணக்குப் போடலிலும் உருவானது அல்ல; தயாரிப்பாளர் அம்பேத்குமார் தன்ன்மீது வைத்த நம்பிக்கையில்தான் இந்த படம் உருவானது என இயக்குநர் ராஜு முருகன் தெரிவித்தார். எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களின் வலியையும் சினிமாவாக மாற்றும் நம்பிக்கையை பாலா, மாரி செல்வராஜ், லிங்குசாமி போன்ற இயக்குநர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.



 



இந்த படத்தின் அடிப்படை நோக்கம் மக்களுக்கு நம்பிக்கையை வழங்குவதாகும் என்றும், Think Music சந்தோஷ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நடிகை சைத்ரா, நடிகர் சசிக்குமார் உள்ளிட்ட அனைவரின் ஆதரவு இல்லையென்றால் இந்த படம் சாத்தியமாகியிருக்காது. நன்றி



 



ஏழை, எளிய மக்கள்மீது நடைபெறும் அதிகார அத்துமீறல்களை அரசியல் நையாண்டி பாணியில் சொல்லும் இப்படம், அதே நேரத்தில் குடும்பங்கள் ரசிக்கும் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாகியுள்ளது.



 



தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியிடும் ‘மை லார்ட்’, பிப்ரவரி 13 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா