சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்
Updated on : 09 February 2026

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மை லார்ட்’ (My Lord) திரைப்படம், பிப்ரவரி 13 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.



பட வெளியீட்டை முன்னிட்டு, நேற்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய நிகழ்வில், படக்குழுவினர் ரசிகர்களை நேரில் சந்தித்தனர். அந்தச் சந்திப்பில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததுடன், பாடல்கள் பாடியும், பட வசனங்களை பேசியும், மை லார்ட் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முழுவதும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்தது.



 



இந்நிகழ்வினில்



இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,  



மை லார்ட் ரசிகர்களுக்கு  ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இருக்கும். 

ஒரு சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு  என்ன ஒரு திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குமோ, அதுபோல தான் இந்த மை லார்ட் திரைப்படம்.  



சாப்பாட்டில் சுவை முக்கியம் தான், ஆனால் உடம்புக்கு கெடுதல் என்றால் சுவையாக இருந்தாலும் அதை சாப்பிடக் கூடாது. 



“மை லார்ட்”  படம், எல்லாருமே ரசித்து, சந்தோஷமாக, ரொம்ப என்ஜாய் பண்ணி, எண்டர்டெயின் ஆகி பார்க்குற சுவையுடன் கூடிய  படமாக இருக்கும். ஆனால்  அதே நேரத்தில்,  மனிதர்களாக நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்தும்  படமாகவும் இருக்கும். 



சசி சாருக்கு  “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்திற்கு பிறகு “மை லார்ட்”  மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும். ராஜுமுருகனுக்கு இது பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் நன்றி.



 



இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது..,  

மை லார்ட்  பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதாவது வேலண்டைன்ஸ் டே சமயத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் பலர், “வேலண்டைன்ஸ் டேக்கும் ‘மை லார்ட்’ என்ற டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார்கள். உண்மையில் இந்த படத்துக்கும் வேலண்டைன்ஸ் டேவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஏனென்றால் மை லார்ட் என்பது சசிகுமார் மற்றும் சைத்ரா (முத்துசிற்பி, சுசீலா) ஆகியோரின் காதல் நிறைந்த ஒரு தம்பதியரை மையமாக கொண்ட படம்.



ஒரு அழகான கணவன்–மனைவி.அவர்களுக்கிடையிலான அன்புதான் இந்த படத்தின் மையம். கணவன்–மனைவிக்கிடையில் இருக்கும் ஆழமான அன்புதான், உலகத்திலேயே மிகப் பெரிய காதல். அதனால் மை லார்ட்  வேலண்டைன்ஸ் டே சமயத்தில் வெளியாகிறது.  இதைவிட பொருத்தமான நேரம் இருக்க முடியாது. என்னுடைய படங்களில் பொதுவாகவே காதலுக்கு நான் மிக முக்கியத்துவம் கொடுப்பேன். காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமல்ல.

நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களை நேசிக்கும் மனநிலையே காதல் என்று நான் நம்புகிறேன். அந்த வகையில், இந்த படம் கணவன்–மனைவிக்கிடையிலான காதலை பேசுகிறது. அதே நேரத்தில், உலகம் முழுவதும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் சொல்லும் படமாக இருக்கும்.



இப்படியான அன்பையும் மனிதநேயத்தையும் பேசும் படத்தை சசிகுமார் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும் — சசிகுமார் என்றாலே அன்பும் மனிதநேயமும் கொண்டவர் அது சினிமாவில் மட்டுமல்ல; சினிமாவுக்கு வெளியிலும் அவர் அப்படியே வாழும் மனிதர். அதனால் முத்துசிற்பி கதாபாத்திரத்திற்கு அவரைவிட சிறந்த ஆள் யாரும் இல்லை.



அதேபோல் சைத்ரா இந்த படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். மை லார்ட்  மூலமாக அவரை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.கர்நாடகாவிலிருந்து ஒரு சிறந்த நடிப்புத் திறன் கொண்ட நடிகை நமக்கு கிடைத்துள்ளார். தமிழ்நாடு எப்போதுமே வந்தாரை வாழவைக்கும் பூமி. அந்த வகையில், அவரையும் தமிழ்நாடு வாழ வைக்கும்.



என்னுடைய ஆத்மார்த்தமான இசை நண்பர் ஷானுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அற்புதமான இசையைத் தந்துள்ளார். 



பெரும் உழைப்புடன், முழுக்க முழுக்க மக்களுக்கான படமாக மை லார்ட்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு நீங்கள் தரும் அன்புதான் எங்களைப் போன்ற கலைஞர்களை வாழ வைக்கும். அனைவருக்கும் நன்றி.  பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பாருங்கள்.





நடிகை சைத்ரா பேசியதாவது..,  

இந்தப்படம் மிக மிக இனிமையான அனுபவம், இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமைகள் பங்குபெற்ற படத்தில் நானும் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஷான் ரோல்டன் இசை அனைவருக்கும் பிடிக்கும். இப்பட பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப்படத்தில் காதல் இருக்கிறது. சசிகுமார் மிக ஜாலியானவர். அவர் இயக்குநர் என்பதால்,  அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் இன்னும் நிறைய படம் நடிக்க ஆசை. பொலிடிகல் டிராமாவும் இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு பயனுள்ள படமாக இருக்கும்.  

எல்லோரும் கண்டிப்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பார்த்து ஆதரவு தாருங்கள்.



நடிகர் சசிக்குமார் பேசியதாவது…,  

டூரிஸ்ட் ஃபேமிலியில் மனிதநேயத்தைப் பற்றி சொன்ன மாதிரி, இந்த படமும் உங்களுக்கு அன்பையும், மனிதநேயத்தையும் போதிக்கும் படம். என்னுடைய படங்கள் எப்போதுமே ஃபேமிலிக்கான படங்கள். உங்கள் குடும்பத்தோட, குழந்தைகளோட நிச்சயமாக வந்து பார்க்கலாம். இளம் தலைமுறைக்கும் ஏற்ற ஒரு படம். இப்போ உள்ள ஜெனரேஷன், வேகமா கோபப்படுற சூழ்நிலைக்கு நடுவில்,

“பொறுமையா இருங்க, மனிதநேயமா இருங்க” என்று சொல்கிற படம். ராஜுமுருகன் சார் ஸ்டைலில், கலகலப்பான காமெடியோட படம் நகரும். உங்களை சோகப்படுத்த மாட்டோம். அழ வைக்க மாட்டோம். சிரிக்க வைப்போம்… சிந்திக்க வைப்போம்.



 



 



கர்நாடகாவிலிருந்து தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகும் நாயகி சைத்ரா ஜே. ஆச்சார், தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கன்னடத்தில் சிறந்த நடிகையாக தன்னை நிலைநிறுத்தியுள்ள அவர், தமிழிலும் முக்கியமான நடிகையாக வளர்வார் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ‘மை லார்ட்’ திரைப்படம் அவருக்கான ஒரு சிறந்த அறிமுகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எதிர்பாராத சூழ்நிலையில் படக்குழுவில் இணைந்த அவர், எந்த தயக்கமும் இன்றி கதாபாத்திரத்திற்கு முழுமையான உயிர் கொடுத்து நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் குரலின் தனித்துவம் காதல், சோகம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைவதில் பெரும் மகிழ்ச்சி இருப்பதாகவும், பிப்ரவரி 13 அன்று வெளியாகும் ‘மை லார்ட்’ திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து கொண்டாட வேண்டும் எனவும் படக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.



ஏழை, எளிய மக்கள்மீது நடைபெறும் அதிகார அத்துமீறல்களை அரசியல் நையாண்டியுடன் சித்தரிக்கும் இப்படம், அதே சமயம் அன்பான குடும்ப உறவுகளையும் மையமாகக் கொண்டு, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் இயக்குநர் ராஜுமுருகன் எழுதி இயக்கியுள்ளார்.



இந்த திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைக்க, கலை இயக்கத்தை முனி பால்ராஜ், படத்தொகுப்பை சத்யராஜ் நடராஜன் மேற்கொண்டுள்ளனர். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை எம். ஷெரீப், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட் அமைத்துள்ளனர்.



அடித்தட்டு மக்களின் வாழ்வியலில் நிகழும் சுரண்டல்களை சட்டயர் (Satire) பாணியில் விவரிக்கும் இந்த படம், ஒரே நேரத்தில் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாகியுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்து, அம்பேத்குமார் வழங்கும் இந்த திரைப்படத்தை, ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.



‘மை லார்ட்’ திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி 13 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா