சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

டீசர் வெளியீட்டில் கவனம் ஈர்த்த ‘காதல் ரீசெட் ரிபீட்’ – மார்ச் 6 உலகம் முழுவதும் ரிலீஸ்!
Updated on : 15 February 2026

Malali Manvi Movie Makers, D Studios மற்றும் Denvi Productions நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், இயக்குநர் விஜய் இயக்கியுள்ள இந்த படம், காதல் கதையை புதுமையான கோணத்தில் சொல்லும் முயற்சியாக உருவாகியுள்ளது.



 



முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்பே வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், டீசரும் அதே அளவிலான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘ரீசெட்’ – ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கேற்றபடி, காதல், நினைவுகள், எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவை கலந்த காட்சிகளுடன் டீசர் அமைந்துள்ளது. இது வழக்கமான காதல் கதை அல்ல என்பதைக் காட்டும் வகையில் சஸ்பென்ஸும் உணர்ச்சியும் இணைந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.



 



இப்படத்தில் மதும்கேஷ் மற்றும் ஜியா சங்கர் முதன்மை ஜோடியாக அறிமுகமாக, மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பல புதுமுகங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி வரும் இயக்குநர் விஜய், இந்தப் படத்தின் மூலம் புதிய நட்சத்திர ஜோடியை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.



 



ஒளிப்பதிவை அரவிந்த் கிருஷ்ணா கவனித்திருக்க, படத்தொகுப்பை ஆண்டனி மேற்கொண்டுள்ளார். கலை இயக்கம் – சரவணன் வசந்த், சண்டை இயக்கம் – மனோகர் வர்மா, உடை வடிவமைப்பு – ருச்சி முனோத் ஆகியோர் தொழில்நுட்ப அணியில் இணைந்துள்ளனர். பாடல் வரிகளை வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை T-Series நிறுவனம் கைப்பற்றியுள்ளது.



 



டீசர் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வைகளைப் பெற்று, ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. தற்போது படக்குழு, மார்ச் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படத்தை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக வெளியீட்டை Romeo Pictures நிறுவனம் மேற்கொள்கிறது.



 



இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. காதலின் புதிய பரிமாணத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா