சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

சென்னை கிளாம்பாக்கத்தில் ‘கலர் பென்சில்’ அனுபவ கல்வி மையம் தொடக்கம்
Updated on : 16 February 2026

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றும் நோக்கில் ‘கலர் பென்சில்’ கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வகை அனுபவ அடிப்படையிலான கல்வி ஸ்டோர் அறிமுகமாகுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



 



நிறுவனர் நாராயணன் நிகழ்வில் பேசியபோது, “கல்வி என்பது திணிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல; அது ஒரு கலை. குழந்தைகள் ‘ஏன்?’ என்று கேள்வி கேட்கும் மனப்பாங்கை ஊக்குவிக்க வேண்டும். அதற்காகவே ‘Joy of Y’ என்ற கருத்தை உருவாக்கியுள்ளோம். இங்கு படிப்பதால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் அல்லது ஐஐடி சேர்க்கை என எதையும் நாங்கள் உறுதி செய்யவில்லை. ஆனால் குழந்தைகளின் அடிப்படை அறிவு வலுவாக உருவாகும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்றார்.



 



தலைமை செயல் அதிகாரி மீனா சப்ரியா, “கோடைக்கால சிறப்பு வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ஜப்பான் மொழி, ஆரிகாமி போன்ற பாடங்கள் டிப்ளமோ வகுப்புகளாக, குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக நடத்தப்படும். தனி கட்டணம் எதுவும் இல்லை; சுமார் ரூ.400 மதிப்புள்ள புத்தகத்தை வாங்கி அதில் பயிற்சி பெறலாம். 34-க்கும் அதிகமான புத்தகங்களும், சிறப்பு பயிற்சி மாடலும் இங்கு உள்ளது. 3300 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஸ்டோர், குழந்தைகளின் கல்விக்கான பொருட்கள் விற்பனையாகும் இந்தியாவின் முதல் முயற்சி. அடுத்த ஆண்டு இந்தியாவில் மேலும் ஐந்து கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.



 



நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வாணி போஜன், குழந்தைகள் உற்சாகமாக ஈடுபட்டதை பாராட்டி, இந்த முயற்சி தொடர்ந்து வளர வேண்டும் என வாழ்த்தினார்.



 



மேலும், பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்ட மைக்செட் ஸ்ரீராம், “அறிவும் மொழியும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அடிப்படை. அனுபவத்தின் மூலம் கற்றல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று தெரிவித்தார்.



 



கற்றலும் மகிழ்ச்சியும் ஒன்றிணையும் புதிய கல்வி அனுபவ மையமாக ‘கலர் பென்சில்’ உருவெடுத்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா