சற்று முன்

‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!   |    “நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு   |    ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!   |    ‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு   |    ‘வித் லவ்’ வெற்றி கொண்டாட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு!   |    விஜய் சேதுபதியுடன் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணைவு! ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்   |    சென்னை கிளாம்பாக்கத்தில் ‘கலர் பென்சில்’ அனுபவ கல்வி மையம் தொடக்கம்   |    'அரிசி என்பது உணவு மட்டுமல்ல, உரிமையும் கூட' – உதயநிதி ஸ்டாலின் உணர்வுபூர்வப் பேச்சு   |    டீசர் வெளியீட்டில் கவனம் ஈர்த்த ‘காதல் ரீசெட் ரிபீட்’ – மார்ச் 6 உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    ‘நாக பந்தம்’ டீசர் வெளியீடு: மகா சிவராத்திரியில் தொடங்கிய காவியப் பயணம்   |    இன்றைய தலைமுறைக்கான பாடல் எழுதுவது எனக்கு பெருமை - இயக்குநர் சரண்   |    10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |   

சினிமா செய்திகள்

‘வித் லவ்’ வெற்றி கொண்டாட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு!
Updated on : 18 February 2026

திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இன்று மரியாதை நிமித்தமாக மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.



 



Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில், தயாரிப்பாளர்கள் முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.



 



முதல்வர் மு.க. ஸ்டாலின், படக்குழுவினருடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இன்றைய தலைமுறையின் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தியதற்காக படக்குழுவினரை பாராட்டினார். இந்த சந்திப்பு, படத்தினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



 



டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’, 2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படம், ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டும் படமாக அமைந்துள்ளது.



 



லவ்வர் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தனது நேர்த்தியான கதை சொல்லல் மூலம் கவனம் பெற்றுள்ளார்.



 



இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், K. சுரேஷ் குமார் எடிட்டிங் செய்துள்ளார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளதுடன், ப்ரியா ரவி உடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.



 



திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றி நடைபோடும் ‘வித் லவ்’, இன்றைய இளைஞர்களின் மனதை தொட்ட காதல் கதையாக திகழ்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா