சற்று முன்

சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா   |    சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!   |    இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!   |    பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |   

சினிமா செய்திகள்

பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை
Updated on : 16 March 2026

சென்னை, மார்ச் 16, 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு புதிதாக கட்டப்பட்ட 50 ‘ஜோய் ஹோம்ஸ்’ (Joy Homes) வீடுகளை ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



 



இந்த வீடுகளின் திறப்பு விழா மற்றும் சாவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜோய் ஆலுக்காஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்–நடிகர் தியாகராஜன், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குநர் சரண், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் எஸ்.கே. சம்பத், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர் சந்தோஷ், நடிகை சார்மி, நல்லி குப்புசாமி, கல்யாணமாலை மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



 



இந்த நிகழ்ச்சியில் டாப் ஸ்டார் பிரசாந்த் பயனாளிக் குடும்பங்களுக்கு வீடுகளின் சாவிகளை வழங்கினார்.



 



‘ஜோய் ஹோம்ஸ்’ திட்டத்தின் மூலம் பாதுகாப்பான மற்றும் நிலையான வீடுகளை வழங்கி, வறுமையில் இருக்கும் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அறக்கட்டளையின் நோக்கமாகும். சுமார் 500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த வீடுகள், குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தையும், கண்ணியமான வாழ்க்கையையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.



 



வறுமை, இயற்கை சீற்றங்கள், நீண்டநாள் நோய்கள் அல்லது மாற்றுத்திறன் காரணமாக சிரமப்படும் குடும்பங்களே இந்த திட்டத்தின் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வீடுகள் மூலம் அவர்கள் புதிய வாழ்க்கையை தொடங்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.



 



தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள இந்த 50 வீடுகளையும் சேர்த்து, கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ‘ஜோய் ஹோம்ஸ்’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை தற்போது 600-ஐ கடந்துள்ளது. அடுத்த கட்டமாக தெலங்கானாவில் மேலும் 50 வீடுகள் கட்டும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. அதேபோல் ஆந்திரப் பிரதேசத்திலும் 50 வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.



 



2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை, தனது சமூகப் பொறுப்பு பணிகளை சுகாதாரம், கல்வி, முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு போன்ற துறைகளில் தொடர்ந்து செய்து வருகிறது. டயாலிசிஸ் கருவிகள் வழங்குதல், மருத்துவ உதவிகள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் பெண்களுக்கு தொழில் பயிற்சி வழங்குதல் போன்ற பல சமூக சேவைகளையும் அறக்கட்டளை செய்து வருகிறது.



 



இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரசாந்த், “வீடு என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு உரிமை. இன்று வீடில்லாத 50 குடும்பங்களுக்கு தரமான வீடுகளை இலவசமாக வழங்கியிருப்பது மிகப் பெரிய சேவை. ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தொடர்ந்து பல சமூக உதவிகளை செய்து வருகிறது. இதற்காக அவர்களை மனமார பாராட்டுகிறேன்” என்றார்.



 



மேலும், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோய் மனிதநேயம் கொண்டவர் என்றும், சமூக நலத்திற்காக தொடர்ந்து சேவை செய்து வருபவர் என்றும் அவர் பாராட்டினார்.



 



இந்த ‘ஜோய் ஹோம்ஸ்’ திட்டம் மூலம் இன்னும் பல குடும்பங்களுக்கு எதிர்காலத்தில் வீடுகள் வழங்கப்படும் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா