சற்று முன்
சினிமா செய்திகள்
ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!
Updated on : 21 March 2026
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” (LIK) திரைப்படம் வரும் ஏப்ரல் 3 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் “தீமா தீமா”, “பட்டும்மா”, “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. டீசரும் கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியீட்டு தேதி அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்த படம் சயின்ஸ் பிக்ஷன் மற்றும் காதல் கலந்து உருவாகியுள்ளது. எதிர்காலத்தில் நடக்கும் கதையாக, ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் கதை இதில் சொல்லப்படுகிறது. காதல் அரிதாக மாறிய உலகில் நடக்கும் இந்த கதை, புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் நடித்துள்ளனர். சீமான் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.
இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையை அனிருத் அமைத்துள்ளார். எடிட்டிங்கை பிரதீப் ஈ. ராகவ் செய்துள்ளார். கலை இயக்கத்தை டி. முத்துராஜ் கவனித்துள்ளார்.
இந்த படம் ஒரு குடும்பம் முழுக்க பார்க்கும் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ். எஸ். லலித்குமார் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படம் ஏப்ரல் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும். ட்ரெய்லர் மற்றும் மற்ற அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகள்
பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!
நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா, “முதல் முதலாய்” என்ற இன்டி மியூசிக் வீடியோ ஆல்பம் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த ஆல்பத்தில் அவர் நடனமும் நடிப்பும் செய்து கவனம் பெற்றுள்ளார்.
இந்த பாடலை ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் எழுதி இசையமைத்துள்ளார். பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் பாடியுள்ளார். ரிஷி தேவாவுடன் நடிகை கைரா இணைந்து நடித்தும், நடனமாடியும் உள்ளார். மெலோடி மற்றும் ராப் கலந்த இந்த பாடலில், ராப் பகுதியை ஆதித்யா பாடியுள்ளார்.
இந்த பாடலில் காதல், இனிமையான நினைவுகள் மற்றும் இளமை உணர்வுகள் அழகாக சொல்லப்பட்டுள்ளதால், ரசிகர்கள் இதை விரும்பி வருகிறார்கள்.
இந்த பாடலை ட்ரஸ்டினா ஐசக் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை ஆர்.பி. குருதேவ் செய்துள்ளார். நடனத்தை சுரேன் அமைத்துள்ளார். ரிஷி தேவா மற்றும் கைராவின் ஸ்டைல், நடனம் ஆகியவை இளமை உணர்வுடன் இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ரிஷி தேவா – ஜி.வி. பிரகாஷ் குமார் – ரவிச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியில் உருவான “முதல் முதலாய்” ஆல்பம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், பிரபுதேவா நடனமாடி பிரபலமான “சிக்கு புக்கு ரயிலே” பாடலை சிறுவயதில் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடியிருந்தார். அதேபோல், இப்போது பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் இந்த ஆல்பத்தையும் அவர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
“முதல் முதலாய்” பாடலை சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!
இந்தியாவில் பிரபலமான ஓடிடி தளமான Prime Video, ‘Prime Video Presents’ நிகழ்ச்சியில் 55-க்கும் மேற்பட்ட புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்களை அறிவித்துள்ளது. இது இதுவரை அவர்களின் மிகப்பெரிய அறிவிப்பாகும்.
Hrithik Roshan-இன் HRX Films, Alia Bhatt-இன் Eternal Sunshine Productions போன்ற புதிய நிறுவனங்களுடன் இணைந்து, Dharmatic Entertainment, Excel Entertainment, Tiger Baby Films உள்ளிட்ட முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் Prime Video புதிய கதைகளை உருவாக்க உள்ளது.
இந்த புதிய தொகுப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் பல தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் இடம்பெறுகின்றன. The Revolutionaries, Matka King, Raakh, Lukkhe, Vansh போன்ற புதிய தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், Farzi Season 2, Panchayat Season 5, Call Me Bae Season 2, Dahaad Season 2 போன்ற பிரபல தொடர்களின் புதிய சீசன்களும் வரவிருக்கின்றன.
தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளடக்கங்களும் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளன. Vadhandhi Season 2, Inspector Rishi Season 2, Exam போன்ற படைப்புகளும் இதில் உள்ளன.
Prime Video தற்போது திரையரங்கு படங்களிலும் கவனம் செலுத்துகிறது. Amazon MGM Studios மூலம் புதிய இந்திய திரைப்படங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. Raftaar, VIBE, Dilkashi, Nayyi Navelli, Kuku Ki Kundli போன்ற படங்கள் தயாராகின்றன.
இந்தியாவில் Prime Video மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. பல மொழிகளில் உள்ள கதைகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். இந்தியாவில் தயாராகும் உள்ளடக்கங்கள் உலகளாவிய ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
Prime Video, புதிய கதைகள், பெரிய தயாரிப்புகள் மற்றும் பல்வேறு மொழிகளில் உள்ளடக்கங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கத் தயாராக உள்ளது.
“சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு
‘சம்பாலா’ படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு, அந்த படத்தை தயாரித்த Shining Pictures நிறுவனம், மீண்டும் இயக்குநர் உகந்தர் முனியுடன் இணைந்து புதிய படத்தை தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர்கள் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு, முன்னதாக ஆதி சாய்குமார் நடித்த “சம்பாலா” மூலம் வெற்றி பெற்றவர்கள்.
இந்த புதிய பட அறிவிப்புக்காக ஒரு சிறப்பான கான்செப்ட் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிங்கமும் ஓநாயும் நேருக்கு நேர் மோதுவது போல காட்டப்பட்டுள்ளது. இது அதிகாரம் மற்றும் வலிமையின் மோதலை குறிக்கிறது. நடுவில் பழமையான வாள் காட்சி இடம்பெற்றுள்ளது. “சில போர்கள் ஒருபோதும் முடிவதில்லை… சில மன்னர்கள் ஒருபோதும் இறப்பதில்லை” என்ற வரியும் இதில் இடம் பெற்றுள்ளது.
இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். அவர் இந்த படத்தில் புதிய விதமான கதாபாத்திரத்தில், மாறுபட்ட தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
“சம்பாலா” படத்தை எடுத்த அதே குழு மீண்டும் இணைவதால், இந்த படத்தை இன்னும் பெரிய அளவில், உயர்ந்த தரத்தில் உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம், சந்தீப் கிஷனின் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. காட்சி அமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கதை சொல்லல் அனைத்திலும் புதுமை இருக்கும்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பான்-இந்தியா படமாக உருவாகிறது. பல மாநில ரசிகர்களையும் கவரும் வகையில் தயாராகிறது.
Shining Pictures நிறுவனம், “சம்பாலா” படத்தில் காட்டிய தரத்தை விட இன்னும் சிறப்பாக இந்த படத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கதையை தற்போது ரகசியமாக வைத்துள்ள நிலையில், ஃபேண்டஸி மற்றும் மசாலா அம்சங்கள் கலந்து இருக்கும் படம் என்று கூறப்படுகிறது.
மேலும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள் விரைவில் வெளியாகும். தற்போது முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு 2026 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்றும், ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் படமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!
‘காளிதாஸ்’ (2019) படத்தின் வெற்றிக்கு பிறகு, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘கேம் பிளே’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதையுடன், “கதையே ஹீரோ” என்ற எண்ணத்தில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த படம் பைனான்ஸ் குற்றங்களை மையமாக கொண்டு உருவாகிறது. எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த, சஸ்பென்ஸ் மற்றும் விசாரணை கதையாக படம் இருக்கும். தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத விதமாக, புதிய களம் மற்றும் கதையுடன் இந்த படம் உருவாகியுள்ளது.
“Exit is an Illusion” என்ற வரியுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில், கண்ணாடி உடைந்த மாதிரி பின்னணியில், கதாப்பாத்திரங்கள் பல்வேறு உணர்வுகளுடன் காட்டப்பட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நடிகர்கள் கிஷோர் மற்றும் ‘HeartBeat’ சீரியல் மூலம் பிரபலமான சாருகேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷாலி நிவேகாஸ், வினோத் கிஷான், சார்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சுரேஷ் பாலா செய்துள்ளார். எடிட்டிங்கை புவன் சீனிவாசன் கவனித்துள்ளார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவுடன் படம் தயாராகி வருகிறது.
படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதி பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை
ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய காலத்தின் காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கிய திரைப்படம் “நீ Forever”. இது இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையும் காதலும் எப்படி இருக்கிறது என்பதை சொல்லும் படம். இப்படம் மார்ச் 27 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
“தருணம்” என்ற வெற்றி படத்திற்கு பிறகு, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் இணைந்து தயாரித்த இரண்டாவது படம் இதுவாகும். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினரும் பத்திரிக்கை நண்பர்களும் கலந்து கொண்ட கோலாகலமான நிகழ்ச்சியாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
எடிட்டர் எஸ்.ஏ.நாகார்ஜுன் பேசியதாவது...,
இந்த படத்துக்கு என்னை கூப்பிட்டதுக்கு இயக்குநருக்கு, டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி நல்ல ஒரு படத்தில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். முதலில் என் அப்பாவுக்கும், அடுத்ததாக எங்கள் குருவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் புகழ் சாருக்கும், என் நண்பர் மற்றும் இயக்குனர் அசோக் குமார் அவர்களுக்கும் என் பெரிய நன்றி. இந்த படத்தின் கதை உருவாக சுமார் 6 மாதங்கள் முழுக்க அசோக் உழைத்தார். நாங்கள் இந்த படத்தை ஒரு சூப்பரான கான்செப்ட்டாக உருவாக்கி, நல்ல முறையில் எடுத்திருக்கிறோம். இந்த டீம் எனக்கு ரொம்ப பெரிய ஆதரவாக இருந்தது. பல சவால்களை சமாளிக்கவும், படத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் இந்த டீம் முழுமையாக உழைத்தது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடன இயக்குநர் விஜயராணி பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் புகழ் சார், இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. 5 பாடல்களில் 3 பாடல்களை குறைந்த செலவு மற்றும் குறைந்த நேரத்தில் மிகவும் உழைத்து அழகாக படமாக்கியிருக்கிறோம். இந்த படத்தில் ஒவ்வொருவரின் உழைப்பும் திரையில் கண்டிப்பாக தெரியும். இயக்குநர் அசோக் இந்த படத்திற்காக மிகவும் பாடுபட்டு படத்தை, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இசையமைப்பாளர் அஸ்வின் வழங்கிய பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். இந்த படம் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி
இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் பேசியதாவது..,
முதலில் இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு சுமார் இரண்டு வருட பயணம். நாங்கள் ஒரு சிறிய குழுவாக பெரிய கனவுடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கோம். நான் நினைத்ததை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எடிட்டர் மற்றும் டீம் முழுவதும் சேர்ந்து வேலை செய்ததால், இசை மற்றும் காட்சிகள் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப குழுவும் மிகுந்த உழைப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறது. மார்ச் 27 அன்று படம் வெளியாகிறது. இது ஒரு புதிய கான்செப்ட்டுடன், புதிய அனுபவத்தை தரும் படம். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து, உங்கள் உண்மையான கருத்துகளை பகிருங்கள். நன்றி.
டாக்டர் வித்யா பேசியதாவது..,
இந்த படம் எனக்கு ஒரு சர்ப்ரைஸாக வந்த வாய்ப்பு. தயாரிப்பாளர் புகழ் சார் அழைத்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே ஒப்புக்கொண்டேன். பொள்ளாச்சியில் ஒரு பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனாலும் அது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இது உணர்ச்சிகள் நிறைந்த குடும்பக் கதை. இளம் தலைமுறைக்கும், பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். எல்லாரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரிக்கவும். நன்றி.
நடிகை சினேகா சக்தி பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார், ஈடன் மேம் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமான அனுபவம். இந்த படத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, பிரதோஷ் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. குறிப்பாக அர்ச்சனா எனக்கு ஒரு சகோதரி மாதிரி ஆகிவிட்டார். என்னை ஆதரித்த என் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்புக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது..,
இந்த படம் எனக்கு ஒரு சிறப்பான உணர்வு தரும் படம். முதலில் கதை கேட்டபோதே இது ஒரு இளம் தலைமுறைக்கான, புதிய கான்செப்ட் படம் என்று புரிந்தது. இசையும் பாடல்களும் மிகவும் புதுமையாகவும், ரசிக்கத்தக்க வகையிலும் அமைந்துள்ளது. பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் அசோக் முதல் படம் என்றாலும் மிகவும் சிறப்பாக காட்சிகளை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. பாடிய நிஷாந்த், விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நடிகர் பிரதோஷ் பேசியதாவது..,
நான் பிரதோஷ். இந்த படத்தில் “ராக்கி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். படத்திற்காக இயக்குநர் மிகவும் உழைத்துள்ளார். அந்த உழைப்புக்காக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா மற்றும் முழு குழுவினரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் கலந்து இருக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். எல்லா தலைமுறையினரும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி.
நடிகர் YG மகேந்திரன் பேசியதாவது..,
முதலில் இறைவனுக்கு என் நன்றி. இத்தனை ஆண்டுகளாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சமீப காலமாக எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது மிகவும் சந்தோஷம். இந்த “நீ Forever” படத்தின் குழு ஒரு வெற்றி குழு என்று நான் நம்புகிறேன். இயக்குநர் அசோக் முதலில் கதையை சொன்னபோது அவருடைய நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல கதையை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார்கள். இந்த படம் இளைஞர்களை நிச்சயமாக கவரும். பழமை மற்றும் புதுமை இரண்டையும் அழகாக இணைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்கவும். நன்றி
நடிகர் சுதர்ஷன் கோவிந்த் பேசியதாவது..,
எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது… எப்போதும் வெற்றி பெறாத ஒவ்வொருக்கும் ஒரு நாள் வாய்ப்பு வந்து சேரும். நாம் செய்யும் வேலையில் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். பல வருடங்களாக காத்திருந்த இந்த வாய்ப்பு “நீ Forever” படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. சினிமாவில் எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் வருகிறோம்; நான் மட்டும் சிறப்பானவன் இல்லை, விடாமுயற்சி செய்த ஒரு சாதாரண மனிதன் தான். 2024 பிப்ரவரியில் இந்த பயணம் தொடங்கியது. வேலைக்காக ஹைதராபாத் சென்றிருந்த போது ஒரு அழைப்பு வந்தது. ஒரு தயாரிப்பாளர் புதிய முகத்தைக் தேடுகிறார் என்று கூறினார்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் விவரத்தை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் காட்டிய கவுதம் அண்ணாவுக்கு நன்றி.
முதல் முறையாக தயாரிப்பாளர் நேரடியாக அழைத்த போது அது யாரோ கலாய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையான வாய்ப்பாக மாறியது. சென்னை வந்து கதை கேட்டேன், மிகவும் பிடித்தது. நான் செய்த ஒரு சிறிய வீடியோவிலிருந்தே என்னை தேர்வு செய்தார்கள். பின்னர் என்னை கதாபாத்திரத்திற்காக தயாரித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தினர். ஒரு நாள் அந்த தோற்றத்துடன் வீட்டிற்கு சென்றபோது என் அம்மா சிரித்தார். ஆனால் இந்த குழுவே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த வாய்ப்பை அளித்த புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் விடாமுயற்சி இருந்தால் ஒரு நாள் வாழ்க்கை நமக்காக சிரிக்கும். இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை அர்ச்சனா ரவி பேசியதாவது..,
இந்த படம் எனக்கு ஒரு கனவு மாதிரி. இந்த கதையை முதன்முதலில் கேட்டபோது மிகவும் ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. பாடல்கள், காட்சிகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தது. இயக்குநர் அசோக் எனக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் கொடுத்து, என்னை இன்னும் நன்றாக நடிக்கத் தூண்டினார். படப்பிடிப்பில் நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்தது, குறிப்பாக சுதர்ஷனுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் ஈடன் மேம் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து, சுதந்திரமாக வேலை செய்ய வைத்தார்கள். இந்த படத்தில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். குறிப்பாக சினேகா எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார். பல சவால்களை கடந்து உருவான இந்த படம், மார்ச் 27 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
இயக்குநர் அசோக்குமார் கலைவாணி பேசியதாவது..,
இங்கே வந்துள்ள பத்திரிகை, சமூக வலைத்தளம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒன்று தான் – ஒரு நல்ல விஷயம் செய்ய நினைத்தால், அது கண்டிப்பாக நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். நான் சினிமாவுக்கு ஆசைப்பட்டு சின்ன சின்ன முயற்சிகள் செய்தேன். அதன் மூலம் புகழ் சார் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் தான் இந்த வாய்பு கிடைத்தது. இந்த படத்திற்காக எங்கள் முழு குழுவும் மிகுந்த உழைப்புடன் வேலை செய்திருக்கிறோம். சுதர்ஷன் மிக நன்றாக நடித்துள்ளார். நல்ல நண்பர். அர்ச்சனா ஹீரோயின் என்பதை விட நல்ல கதாப்பாத்திரம் அவர் மிகச்சிறப்பாக செய்துள்ளார். YG மகேந்திரன் சார், நிழல்கள் ரவி சார் போன்ற ஆளுமைகளுடன் வேலை பார்த்தது, நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசை படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். எடிட்டிங், கொரியோகிராஃபி என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர். இப்படத்திற்காக புகழ் சார் என்னை முழுமையாக நம்பினார். அவர் நெட்பிளிக்ஸ் படத்தை வாங்கி விட்டார்கள் என்று சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றது. அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன். இந்த முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது..,
இங்கே வந்துள்ள பத்திரிகை நண்பர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எப்போதும் நம்புவது ஒரு விஷயம் – நல்ல எண்ணம் இருந்தா நல்ல விஷயம் நடக்கும். இந்த படம் அதற்கான ஒரு உதாரணம். கடந்த வருடம் தருணம் படத்தை வெளியிட்டேன் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும், அதை வைத்து இப்படத்தை எடுத்து முடித்து விடலாம் என திட்டமிட்டிருந்தேன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை, அதனால் இப்படத்தை முழுதாக நிறுத்த வேண்டிய சூழல். ஆனால் நாங்கள் வைத்த நம்பிக்கை, இயக்குநர் அசோக் உடைய முயற்சி, படக்குழுவினரின் கடும் உழைப்பால் இப்படம் உருவானது. இந்த படம் உருவாகும் போது எங்களுக்குள் நிறைய சவால்கள் இருந்தது. ஆனாலும் அந்த சாவால்களை கடந்து, இந்த படத்தை ஒரு நல்ல படமாக கொண்டு வந்திருக்கிறோம். முதலில் வேறு நடிகர்கள் தான் நடிப்பதாக இருந்தது பல பிரச்சனைகளுக்கு பிறகு, தர்ஷன் அர்ச்சனா நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் இந்த படத்துக்காக மனதார உழைத்திருக்கிறார்கள். YG மகேந்திரன் சார் பெரும் ஆதரவாக இருந்தார். இசையமைப்பாளருக்கு நிறைய கஷ்டம் தந்தேன், ஆனால் அவர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார். பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுதர்ஷன் தினமும் ஆபிஸ் வந்தார். அவ்வளவு ஆதரவாக இருந்தார்.நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் முழு உழைப்பை தந்துள்ளனர். இவர்கள் அனைவராலும் தான் இப்படம் இந்த இடத்திற்கு வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இன்றைய Gen-Z தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க, மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (Saregama) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"நீ Forever" படம் மார்ச் 27 முதல் உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.
‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!
பயமுறுத்தும் காட்சிகளும், தேவையில்லாத நகைச்சுவையும் இல்லாமல் உண்மையான பயத்தை தரும் ஹாரர் படங்கள் அரிதாக தான் வருகிறது. அந்த வகையில், டிமாண்டி காலனி படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி நடித்த இந்த படத்தின் முதல் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றது. இப்போது மூன்றாவது பாகம் டிமாண்டி காலனி 3 மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது ‘தி லைப்ரரியன்’ என்ற மர்மமான கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. இதில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் பின்னணி (BTS) காட்சிகளும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த படத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பலர் இதில் நடித்துள்ளனர்.
இசையை சாம் சி.எஸ் அமைக்கிறார். ஒளிப்பதிவை சிவகுமார் விஜயன் கவனிக்கிறார். எடிட்டிங்கை குமரேஷ் டி செய்கிறார்.
‘டிமாண்டி காலனி 3’ படம் இந்த கோடையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் அவரது குழு தயாரிக்கின்றனர். ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு வித்தியாசமான பய அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்
மும்பை, மார்ச் 18, 2026: சில திரைப்படங்கள் பார்த்த பிறகும் மனதில் நீண்ட நேரம் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு படமாக மேட் இன் கொரியா உலகம் முழுவதும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில், நடிகை பிரியங்கா மோகன் நடித்த இந்த படம், Netflix தளத்தில் வெளியாகி பெரிய சாதனை படைத்துள்ளது. ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களின் பட்டியலில் உலகளவில் முதலிடம் பிடித்து, 24 நாடுகளில் டிரெண்டாகி வருகிறது.
மார்ச் 12 அன்று வெளியான இந்த படம், தமிழ்நாட்டில் இருந்து சியோல் வரை செல்லும் செண்பாவின் வாழ்க்கைப் பயணத்தை சொல்லுகிறது. கதையின் உணர்வு, அழகான காட்சிகள் மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் அதிகாரி மோனிகா ஷெர்கில் கூறுகையில், “இந்த படம் உலகளவில் முதலிடம் பிடித்தது எங்களுக்கு பெருமை. இந்தியாவில் இருந்து இன்னும் பல நல்ல கதைகள் உலகத்துக்கு செல்ல வேண்டும்,” என்றார்.
இந்த வெற்றி குறித்து நடிகை பிரியங்கா மோகன் மகிழ்ச்சியுடன் கூறினார். “இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. செண்பா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
இயக்குநர் கார்த்திக் கூறுகையில், “இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெறுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது,” என்றார்.
மொத்தத்தில், ‘மேட் இன் கொரியா’ படம் தனது உணர்வுப்பூர்வமான கதையால் உலகம் முழுவதும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இது போன்ற தமிழ் கதைகள் உலக அளவில் செல்வதை இந்த படம் மீண்டும் நிரூபித்துள்ளது.
சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்
‘மோ’, ‘மாயோன்’, ‘மெட்ராஸ் மேட்னி’ மற்றும் செல்வராகவன் நடித்த படத்தை தொடர்ந்து, மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தனது ஐந்தாவது படைப்பை அறிவித்துள்ளது. இந்தப் படத்தை ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கின்றனர்.
இந்த புதிய படத்தில் நடிகர் சுந்தர் சி நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் துரை V.Z. இந்தப் படத்தை இயக்குகிறார். ‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்கு பிறகு, சுந்தர் சி – துரை V.Z. கூட்டணி மீண்டும் இணைகிறது.
இந்த படம் திகில் நிறைந்த பேய் கதையாக உருவாகிறது. ரசிகர்களை பரபரப்பாக வைத்திருக்கும் வகையில் படம் இருக்கும் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார். படப்பிடிப்பு வரும் மே மாதத்தில் தொடங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஒரு பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் சில தமிழ் நடிகர்களும் இதில் இணைகின்றனர். அவர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
ஒளிப்பதிவை சி. ராம்பிரசாத் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி.ஆர்.கே கிரண் கவனிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை
சென்னை, மார்ச் 16, 2026: தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு புதிதாக கட்டப்பட்ட 50 ‘ஜோய் ஹோம்ஸ்’ (Joy Homes) வீடுகளை ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வீடுகளின் திறப்பு விழா மற்றும் சாவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜோய் ஆலுக்காஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்–நடிகர் தியாகராஜன், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குநர் சரண், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் எஸ்.கே. சம்பத், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர் சந்தோஷ், நடிகை சார்மி, நல்லி குப்புசாமி, கல்யாணமாலை மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் டாப் ஸ்டார் பிரசாந்த் பயனாளிக் குடும்பங்களுக்கு வீடுகளின் சாவிகளை வழங்கினார்.
‘ஜோய் ஹோம்ஸ்’ திட்டத்தின் மூலம் பாதுகாப்பான மற்றும் நிலையான வீடுகளை வழங்கி, வறுமையில் இருக்கும் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அறக்கட்டளையின் நோக்கமாகும். சுமார் 500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த வீடுகள், குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தையும், கண்ணியமான வாழ்க்கையையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வறுமை, இயற்கை சீற்றங்கள், நீண்டநாள் நோய்கள் அல்லது மாற்றுத்திறன் காரணமாக சிரமப்படும் குடும்பங்களே இந்த திட்டத்தின் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வீடுகள் மூலம் அவர்கள் புதிய வாழ்க்கையை தொடங்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள இந்த 50 வீடுகளையும் சேர்த்து, கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ‘ஜோய் ஹோம்ஸ்’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை தற்போது 600-ஐ கடந்துள்ளது. அடுத்த கட்டமாக தெலங்கானாவில் மேலும் 50 வீடுகள் கட்டும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. அதேபோல் ஆந்திரப் பிரதேசத்திலும் 50 வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை, தனது சமூகப் பொறுப்பு பணிகளை சுகாதாரம், கல்வி, முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு போன்ற துறைகளில் தொடர்ந்து செய்து வருகிறது. டயாலிசிஸ் கருவிகள் வழங்குதல், மருத்துவ உதவிகள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் பெண்களுக்கு தொழில் பயிற்சி வழங்குதல் போன்ற பல சமூக சேவைகளையும் அறக்கட்டளை செய்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரசாந்த், “வீடு என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு உரிமை. இன்று வீடில்லாத 50 குடும்பங்களுக்கு தரமான வீடுகளை இலவசமாக வழங்கியிருப்பது மிகப் பெரிய சேவை. ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தொடர்ந்து பல சமூக உதவிகளை செய்து வருகிறது. இதற்காக அவர்களை மனமார பாராட்டுகிறேன்” என்றார்.
மேலும், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோய் மனிதநேயம் கொண்டவர் என்றும், சமூக நலத்திற்காக தொடர்ந்து சேவை செய்து வருபவர் என்றும் அவர் பாராட்டினார்.
இந்த ‘ஜோய் ஹோம்ஸ்’ திட்டம் மூலம் இன்னும் பல குடும்பங்களுக்கு எதிர்காலத்தில் வீடுகள் வழங்கப்படும் என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி மற்றும் சங்கீதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள ‘எஸ் கே எஸ் (S K S)’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை கல்வியாளரும் சமூக செயற்பாட்டாளருமான லதா ரஜினிகாந்த் மற்றும் தொழிலதிபரும் நடிகருமான லெஜன்ட் சரவணன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த படத்தை இயக்குநர் டாக்டர் சாய் பிரபா மீனா இயக்கியுள்ளார். இப்படத்தில் டாக்டர் சாய் பிரபா மீனா, தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா, மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ராஜ் மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் நடிகை ஷகிலா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு எம்.சி. பால்பாண்டி, ஜூஜூ மற்றும் முத்து ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். அனீஷ் மற்றும் அலெக்ஸ் இசையமைத்துள்ளனர். நந்தகுமாரன் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நவீன் குமார், எஸ்.டி. ராஜ் மற்றும் வினோத் ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து எடிட்டிங் பணிகளை செய்துள்ளனர்.
பெண்களின் சுய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை சாய் ராம் ஏவி.ஆர் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ்.பி.எம் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அன்னா ஆஷா மற்றும் சாய் ஷரண் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் எம். ரேணுகா, கே. ரமேஷ், ஆனந்தி குணா, டி.ஜே. டவுன் பிரேம், நெல்சன், சாய் தீபா மற்றும் எம்.பி. பீர் முஹமது ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் டாக்டர் சாய் பிரபா மீனா கூறுகையில், “இந்த படம் பெண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் பெண்கள் தங்களது பாதுகாப்பை பற்றி சுயமாக சிந்தித்து, தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த படம் எடுத்துக்காட்டுகிறது” என்றார்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும், கோடை விடுமுறையில் படம் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 🎬
- உலக செய்திகள்
- |
- சினிமா













