சற்று முன்

'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |   

சினிமா செய்திகள்

'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு
Updated on : 09 April 2026

தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த தருணத்தில் தமிழக மக்களுக்கு அரசியல் ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர் ரவி மரியா கதையின் நாயகனாக நடிக்கும் 'மக்கள் தலைவா' திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் தீவிர விசுவாசியும், சீடருமான தமிழருவி மணியன் வெளியிட்டு , படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.



 



'பழகிய நாட்கள்', ' மூன்றாம் மனிதன் ' என சமூக வலைதள உலகத்தில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தும் கன்டென்டுகளை உருவாக்கும் படைப்பாளியான ராம் தேவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மக்கள் தலைவா'. இதில் ரவி மரியா,  அக்ஷரா விஜய், ராதா ரவி, பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, பயில்வான் ரங்கநாதன், இயக்குனர் ரங்கநாதன், கவிதாலயா சரவணன்,அக்னி S வருண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை எஸ் எம் பிரதாப் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை துர்காஸ் மேற்கொண்டிருக்கிறார். கற்பனையான கதையுடன் நிகழ்கால அரசியலை காமெடியாக சொல்லும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கவிதாலயா சரவணன் மற்றும் ஆர். சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 



 



படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சி அதிகாரத்திற்காக மக்கள் வாக்கு செலுத்துவதற்கு தயாராக இருக்கும் இந்த நிலையில் அவர்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சர்ச்சைக்குரிய.. ஆனால் அர்த்தமுள்ள டைட்டில் போஸ்டரை வெளியிடுகிறோம்.  ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரான 'பழகிய நாட்கள்' மற்றும் 'மூன்றாம் மனிதன்' ஆகிய படைப்புகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி பேராதரவை பெற்றது. அந்த வகையில் 'மக்கள் தலைவா' திரைப்படமும் சமூக வலைதளங்களில் அதிர்வை ஏற்படுத்தும். மேலும் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் பிரபலமான நடிகர் ரவி மரியா இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். கற்பனைக் கதையோடு சமகால அரசியலை நகைச்சுவையுடனும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியிடப்படும்'' என்றார். 



 



தமிழகம் முழுவதும் தேர்தல் ஜுரம் அனலாக தகித்துக் கொண்டிருக்கும் நிலையில்.. தமிழகத்தின் வரைபடமும், அதன் மீது 'மக்கள் தலைவா' என்ற  டைட்டிலும், ஃபார் சேல் ( FOR SALE) என்ற டேக் லைனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதுடன் இதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா