சற்று முன்

'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |   

சினிமா செய்திகள்

கோப்பெருந்தேவி பேய் வருது
Updated on : 12 May 2015

பேய்க்கும் பிசாசுக்கும் பிரண்ட் ஆகிக் கிடக்கிறது தமிழ்சினிமா! ரசிகர்களின் ரசனையும் பேய் பில்லி சூனியங்களுக்கு பழகிப் போனதால், வாரத்திற்கு ஒரு பேய் படம் வருகிறது. இருந்தாலும் காஞ்சனா போல இருந்தால், ‘கைநிறைய துட்டோடு போ… மனசு நிறைய சந்தோஷத்தோடு வா’ என்கிற அளவுக்கு காமெடி பேய்களை மட்டும் விழுந்துவிழுந்து ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள். காஞ்சனா 2 ன் கலெக்ஷனை கேட்டால், ஆவியுலகமே ஸ்தம்பிக்கிற அளவுக்கு இருக்கிறது! ஒரு கோடி பணம் போட்டவர்களுக்கெல்லாம் நாலு மடங்கு ரிட்டர்ன் என்கிறார்கள் புள்ளிவிபர புலிகள்.


இந்த நேரத்தில்தான் காஞ்சனா 1 ல் நடித்தவர்களையும், காஞ்சனா 2 ல் நடித்தவர்களையும் சமீபத்தில் வெற்றி பெற்ற அரண்மனை படத்தில் நடித்தவர்களையும் தேடி தேடி பிடித்துப் போட்டு ‘கோப்பெருந்தேவி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சங்கர் பழனிச்சாமி. கோவை சரளா, ஊர்வசி, மனோபாலா, வி.டிவி.கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இளவரசு, லொள்ளு சாமிநாதன், மனோகர், பாண்டு, வெண்ணிறாடை மூர்த்தி, வடிவுக்கரசி என்று நீண்டு கொண்டே போகிறது நட்சத்திர கூட்டம்.



காமெடி, த்ரில், ஹிஸ்டாரிக்கல், என்று சிரிக்கவும் அதிரவும் காதலிக்கவும் கவலைப்படவும் வைப்பது மாதிரி ஏகப்பட்ட வர்ணங்களை குழைத்திருக்கிறாராம் சங்கர் பழனிச்சாமி. தமிழ்சினிமா வரலாற்றில் பனி பொழியும் லடாக் பகுதியில் செட் போட்டு படமாக்கிய புண்ணியவானும் இவர்தான். கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கு. அதுக்காகவே இந்த படத் தயாரிப்புக்கு ரெண்டு வருஷம் எடுத்துகிட்டேன் என்கிறார். ஆராத்யா என்றொரு அட்டகாசமான லெக் பீஸ்சை கேரளாவிலிருந்து இறக்கியிருக்கிறார்கள். ஆரம்பகால நயன்தாராவை பார்த்த மாதிரியே இருக்கிறார் இவரும். படத்தில் இவர்தான் பேய்.


காஞ்சனா2 ன் வெற்றி ஆந்திராவிலும் தொடர்வதால், கோப்பெருந்தேவிக்கு தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் செம கிராக்கி. துட்டோடு கிளம்பி வரும் விநியோகஸ்தர்கள் துண்டு போட்டு இடம் பிடிக்கிற அளவுக்கு ஆர்வம் காட்டுவதால், படம் மே இறுதியில் வெளிவரலாம் என்கிறது கோடம்பாக்கத்து ஆவி.


தியேட்டர்ல ஒரு டிக்கெட்டோட ஒரு மந்திரிச்ச முடிகயிறையும் கொடுத்துட்டாங்கன்னா, ரசிகர்களுக்கு இன்னும் சவுரியமா இருக்கும்!

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா