சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

சினிமா செய்திகள்

25வது படத்தை நெருங்கும் நடிகர் கருணாகரன்
Updated on : 12 May 2015

எனது முதல் படமான கலகலப்பு வெளியாகி மூன்று வருடங்கள் ஆகின்றது. முதல் படத்திலேயே பேசப்படக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சுந்தர்.சி சார் என்னை நடிக்க வைத்தார். என்னை நடிக்க வைத்தது மட்டும் அல்லாமல் திரைக்கதை எழுதவும் வைத்தவர். அவரது ஆசிகளுடன் 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.


திரு.கார்த்திக் சுப்புராஜ் மற்றும் திரு.நலன் குமாரசாமி தனிப்பட்ட கதாபாத்திரத்திற்க்கு என்னை மனதில் வைத்தே திரைக்கதை எழுதினர். எனக்கும் ரசிகர்களுக்கும் மன நிறைவான கதாபாத்திரங்கள் அவை. என்னை செதுக்கிய இவர்களுக்கும், எனது சினிமா பாதையில் ஊன்றுகோலாக எனக்கு உதவி புரிந்த அனைவருக்கும் இத்தருணத்தில மனதார நான் நன்றி தெரிவிக்கிறேன்.

லிங்கா படத்தில் எனக்கு நடிக்க வாய்பளித்த திரு.கே.எஸ். ரவிகுமார் அவர்களுக்கும், திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் எதிர்பாராத மகிழ்ச்சியான வாய்ப்பு.


 இந்த மூன்று வருடங்களில் நான் நடித்த இருபது படங்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனித்தன்மையுடனும் வித்தியாசமாகவும் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.


இதற்கு முதன்மை காரணமான அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


எனது 25வது படத்தை நெருங்கும் இந்த நேரத்தில் எனது வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளித்த பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது நிறைகளை பாராட்டியும் குறைகளை எடுத்துக் கூறியும் என்னை வளர்த்ததற்கு நன்றி.



படங்களில் எனது நடிப்பை பாராட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் இத்தருணத்தில் என் நன்றியும் தெரிவித்து கொள்கிறேன்.


 


 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா