சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

அஜித் சொன்னது போல் STR க்கு நல்ல காலம்
Updated on : 14 May 2015











காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை  உட்பட பல வெற்றிப்படங்களைத் தந்து இளம் இயக்குநர்களில் டிரெண்ட் செட்டராக விளங்குபவர் செல்வராகவன்.

நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின்,  மிகவும் எதிர் பார்க்கப்பட்ட கூட்டணியான செல்வராகவன் - எஸ்.டி.ஆர். இருவரும் இனைந்து அதிரடியான பொழுதுபோக்குத் திரைப்படத்தை வழங்குகின்றனர்.

Glo studios  என்ற நிறுவனம்  சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன் இருவரும் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இருவரும் வகுப்பறைத் தோழர்கள் என்பது கூடுதல் தகவல்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் எஸ்.டி.ஆருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, டாப்ஸி பன்னு இருவரும் நடிக்கின்றனர்.

தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜெகதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க, முன்னாள் கதாநாயகனான சுரேஷ் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை படங்களின் வெற்றிக் கூட்டணியாக இப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். 

அரவிந்த் கிருஷ்ணா ஓளிப்பதிவு செய்கிறார்.

மதராசப்பட்டினம் படம் புகழ் செல்வகுமார் இப்படத்தில் கலை இயக்குனராகிறார். 
இப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர், ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.டி.ஆர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது.










 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா