சற்று முன்

தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!   |    விஷ்ணு விஷாலுக்கு அமீர்கான் வில்லனா!   |    100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை   |    TVAGA உடன் இணைந்து பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது   |    எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட 'டஸ்வா' பிராண்ட் ஆடை திருவிழா!   |    தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!   |    மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' பட வெளியீட்டை அறிவித்தனர் படக்குழு!   |    'மூக்குத்தி அம்மன் 2', படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !   |    மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'ஆர்யன்' பட டீசர் வெளியானது!   |    'தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் உருவாகியுள்ள 'வீர தமிழச்சி'!   |   

சினிமா செய்திகள்

இந்த படத்தில் அரசியல் இல்லாமல் வேறென்ன இருக்கும்? ராஜு முருகன் கேள்வி
Updated on : 25 August 2016

ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்திரி, பாவா செல்லதுரை, மு.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் "ஜோக்கர்".



 



படம் வெளியானது முதல் பொதுவெளியில் பல்வேறு விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.



 



நேற்றும்கூட ஜோக்கர் படம் குறித்த உரையாடல் ஒன்று சென்னையில் நடைபெற்றது. படப்பெட்டி சினிமா இதழ் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உரையாடல் நிகழ்வில் இயக்குனர் ராஜுமுருகன், ஜீ.ராமகிருஷ்ணன், பாடலாசிரியர் - யுகபாரதி, திரைக் கலைஞர் - மு. ராமசாமி, இயக்குனர் - நவீன், மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார், பத்திரிகையாளர் கவின்மலர், கலை இயக்குனர் சதீஷ் குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.



 



இதில் பேசிய ராஜுமுருகன், "ஜோக்கர் படம் வெளியான இந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து இதுகுறித்து நடைபெற்றுக்கொண்டிருக்கிற விவாதங்கள் தான் இந்த படத்திற்கான வெற்றி.



 



ஒரு படைப்பானது மக்களிடையே ஒரு பொது விவாதத்தை ஏற்படுத்தவேண்டும். அந்த வகையில், ஜோக்கர் திரைப்படம் சமூகத்தில் இவ்வளவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.



 



இந்த படம் மக்களின் பிரச்சனையை பேசுகிறதே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் சட்டகத்திலும் இல்லை. இது என்னுடைய தன்னியல்புடன் உருவாக்கப்பட்டுள்ள படைப்பு. எந்த ஒரு வழக்கமான திரைப்பட பார்முலாவையும் நான் பின்பற்றவில்லை.



 



முழுக்க முழுக்க அரசியல் பேசுவதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த படத்தில், அரசியல் இல்லாமல் வேறென்ன இருக்கும்? என்று பேசினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா