சற்று முன்

மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |    பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |    சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு   |    என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்   |    சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்   |    காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!   |    ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

நற்பணி நாயகன் விஷால்!
Updated on : 26 August 2016

முன்னணி சினிமா நட்சத்திரம் விஷாலின் பிறந்தநாள் எதிர்வரும் 29-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தொடர்ந்து ஏராளமான உதவிகளை செய்யவுள்ளார் விஷால்.



 



திரை நாயகன் என்ற அடையாளத்தையும் கடந்து நலிந்த கலைஞர்களுக்கு உதவுவது, ஏழை எளிய குழந்தைகளின் படிப்பு - மருத்துவம் போன்றவைகளுக்கு உதவுவது என தொடர்ந்து நற்பணிகளை செய்பவர் விஷால் என்பது அனைவரும் அறிந்ததே.



 



அந்த வகையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் எந்த விதத்திலும் சளைக்காமல் உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்பாக மாற்றி அமைத்துள்ள விஷால், பிறந்தநாள் கொண்டாட்ட உதவிக்கென பெரிய பட்டியலையே வைத்துள்ளார்.



 



விஷால் பிறந்தநாள் கொண்டாட்ட உதவிகள்:



 



வருகிற 29ஆம் தேதி விஷால் தனது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடுகிறார். அனாதை இல்லம் , முதியவர்கள் இல்லம் , அரசு பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை என பல இடங்களில் பல உதவிகள் செய்து பிறந்த நாளை சிறப்பிக்கிறார். பிறந்த நாளுக்கு முந்தைய தினத்தன்றும் ரசிகர் மன்றங்கள் நடத்தும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். இது தவிர தமிழ் நாடு முழுவதும் இருக்கிற ரசிகர் நற்பணி மன்றங்கள் பல்வேறு உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு 28 , 29 ஆகிய இரண்டு தினங்களிலும் உதவி செய்கிறார்கள். இதை ரசிகர் நற்பணி மன்ற தலைவர் ஜெய சீலன் செயலாளர் ஹரி உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.



 



 நாள் : 28.08.2016 – காலை 09.00மணிக்கு சென்னை மாவட்ட மகளிரணி தலைவி மஞ்சுளா அவர்களின் தலைமையில் R.K.நகர் பகுதியில் இரத்ததானம் முகாமில் கலந்துக்கொண்டு முகாமை திறந்து வைக்கிறார் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.



 



 நாள் : 28.08.2016 – காலை 11.00 திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கண்ணன் அவர்கள் தலைமையில், மணலி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.



 



 நாள் : 28.08.2016 – இரவு 07.00 சென்னை மாவட்ட தலைவர் இராபர்ட் அவர்கள் தலைமையில், இராயபுரம் பகுதியில் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.



 



நாள் : 29.08.2016 –காலை 10.00 சென்னை மாவட்ட இளைஞரணி துணை தலைவர் வேலு அவர்களின் சார்பில் கீழ்ப்பாக்கம் மெர்சி ஹோம்ல் உள்ள முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கி முதியோர்களுக்கு வேட்டி ,புடவை வழங்குகிறார்.



 



 நாள் : 29.08.2016 –காலை 11.00 சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் அவர்களின் சார்பில் இராயபுரம் RSM-அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குகிறார்.



 



 நாள் : 29.08.2016 –பகல் 12.00 தென் சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் சைதாப்பேட்டை மாநகராட்சி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குகிறார்.



 



 நாள் : 29.08.2016 – பகல் 01.00 தென் சென்னை மாவட்ட தலைவர் ராஜா அவர்களின் சார்பில் சைதாப்பேட்டை பகுதியில் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.



 



 நாள் : 29.08.2016 – பகல் 04.00 விஷால்பாபு அவர்களின் சார்பில் பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்துக்கொண்டு மற்றும் அன்னதானம் வழங்குகிறார்.



 



 நாள் : 28.08.2016 – காலை 09.00மணிக்கு R.K.நகர் பகுதியில் இரத்ததானம் முகாமில்



கலந்துக்கொண்டு முகாமை திறந்து வைக்கிறார்.



 



 நாள் : 28.08.2016 – காலை 11.00 மணலி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்



 



 நாள் : 28.08.2016 – இரவு 07.00 இராயபுரம் பகுதியில் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.



 



 நாள் : 29.08.2016 –காலை 10.00 கீழ்ப்பாக்கம் மெர்சி ஹோம்ல் உள்ள முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கி முதியோர்களுக்கு வேட்டி ,புடவை வழங்குகிறார்.



 



நாள் : 29.08.2016 –காலை 11.00 இராயபுரம் RSM-அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குகிறார்.



 



நாள் : 29.08.2016 –பகல் 12.00 சைதாப்பேட்டை மாநகராட்சி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குகிறார்.



 



 நாள் : 29.08.2016 – பகல் 01.00 சைதாப்பேட்டை பகுதியில் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்தவிகள் வழங்குகிறார்.



 



நாள் : 29.08.2016 – பகல் 04.00 வடபழனி பகுதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையில்கலந்துக்கொண்டு அன்னதானம் வழங்குகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா