சற்று முன்

சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா   |    சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!   |    இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!   |    பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனுடன் சினேகா! - லிஸ்டில் நயன்தாராவும் இருக்கிறார்
Updated on : 01 September 2016

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நடிகை  சினேகாவும் இணைந்துள்ளார்.



 



நாயகனாக சிவகார்த்திகேயனும், நாயகியாக நயன்தாராவும் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் முக்கிய பாத்திரத்தில் சினேகா நடிக்கிறார்.



 



24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில்  ஏற்கனவே பாஹத் பாசில், ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதில் இப்போது சினேகா இணைந்துள்ளார்.



 



இந்த படத்தில் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள சினேகா, "சினிமாவில் நான் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் படம் ஒரு  மிக பெரிய திரைப்படமாக இருக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன்...



 



ஆனால் இந்த திரைப்படமோ பிரம்மாண்டத்தின் உச்ச கட்டமாக இருக்கிறது. தயாரிப்பாளர் ராஜா சாருடன் பணியாற்றுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. இப்படிப்பட்ட ஒரு சவாலான கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு என்னை தேர்வு செய்த இயக்குனர் மோகன் ராஜா சாருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.



 



நிச்சயமாக என்னுடைய இந்த கதாப்பாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா