சற்று முன்

உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |   

சினிமா செய்திகள்

தமிழர்களுக்கு எதிரான கலவரங்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு: பாரதிராஜா
Updated on : 14 September 2016

கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் செயல்பாடு கொஞ்சம் வேதனைக்குரியது என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.



 



இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், "காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழர்கள் மீதும், தமிழர்களின் உடைமைகள் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்தியும், வாகனங்களுக்குத் தீ வைத்தும், கர்நாடக அரசுடன் அரசியல் கட்சிகளும் கைகோத்துக்கொண்டு எங்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிற கர்நாடக அமைப்புகளின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது.



 



ஒருவார காலமாக தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவிய நிலையிலும், பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் செயல்பாடு கொஞ்சம் வேதனைக்குரியது. இதற்கு மேலும் தாக்குதல் நடக்காத வகையில், காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசு உடனே தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.



 



தமிழகம் இன்றுவரை வந்தாரை வாழவைக்கும் தமிழகமாகத்தான் இருக்கிறது. தமிழன் தமிழ்நாட்டிலேயே மைனாரிட்டியாக இருக்கிறானோ என்கிற சந்தேகம் எழுகிறது. கர்நாடகாவில் வாழும் பல லட்சம் தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய, மாநில அரசின் தலையாய கடமை என்பதை உணரவேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா