சற்று முன்

“டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |   

சினிமா செய்திகள்

“டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
Updated on : 15 April 2026

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் “டிமாண்டி காலனி” திரைப்படத்தின் மூன்றாவது பாகமான “டிமாண்டி காலனி 3 - தி எண்ட் இஸ் டூ ஃபார்” இந்த ஆண்டு கோடையில் வெளியாகவுள்ளது. அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், மனிஷ் சிங்கால் மற்றும் துர்காராம் சௌத்ரி இணைந்து தயாரித்துள்ளனர்.



 



முந்தைய இரண்டு பாகங்களும் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது பாகத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்தப் படத்திற்கு வர்த்தக வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தை, தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் கே. செந்தில் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.



 



திரையரங்கு விநியோகத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வருபவராக அறியப்படும் ஃபைவ் ஸ்டார் கே. செந்தில், ‘DD Returns’, ‘Garudan’, ‘Maharaja’, ‘Bison Kaalamadan’ போன்ற பல ஹிட் படங்களை விநியோகம் செய்துள்ளார். தற்போது “டிமாண்டி காலனி 3” படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றியிருப்பது, இப்படத்தின் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்தியுள்ளது.



 



படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் புரோமோஷன் பணிகள் தொடங்கப்படவுள்ளன. படத்திற்கான டீசர், டிரெய்லர் மற்றும் உலகளாவிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மொழி மற்றும் எல்லைகளை தாண்டி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வரவேற்பை கருத்தில் கொண்டு, புதுமையான புரோமோஷன் முயற்சிகளையும் படக்குழு திட்டமிட்டுள்ளது.



 



இந்தப் படத்தில் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜி.எம். குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்து வழங்கும் இந்தப் படம், ஆர்டிஎக்ஸ் மீடியா, ஞானமுத்து பட்டறை மற்றும் தங்கல் டிவி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.



 



மொத்தத்தில், ஹாரர் திரை உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்த “டிமாண்டி காலனி” தொடரின் மூன்றாவது பாகம், இந்த கோடையில் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா