சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

வெறி - திமிரு 2
Updated on : 01 June 2015

திமிரு, காளை போன்ற வெற்றி படங்களை இயக்கிய தருண்கோபி இயக்கி நாயகனாக நடிக்கும் படம் “ வெறி “ (திமிரு – 2 ) இந்த படத்தை கோயம்பேடு மார்கெட் மு.வெள்ளைப் பாண்டி ஆசியுடன்  S.S. PRODUCTION என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.சரவணன் தயாரிக்கிறார்.        




இன்னொரு நாயகனாக ரமணா நடிக்கிறார். கதாநாயகியாக காதல் சந்தியா, ஒரு புதுமுக நடிகை ஒருவரும் நடிக்கிறார். மற்றும் சுஜாதா, காதல்சுகுமார், முத்துராமன், பரதேசி பாட்டி, கும்கி பாட்டி, மனோஜ், தவசி, ராம்சிங், விருமாண்டி, சேரன்ராஜ், விசித்திரன், தீப்பெட்டி கணேஷன்,வைரவன், ரேவதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.  படத்தில் திருப்பு முனை கதாப்பாத்திரத்தில் பங்களா மூர்த்தி நடித்திருக்கிறார்.




ஒளிப்பதிவு    -  சேவிலோராஜா


இசை      -  ஸ்ரீகாந்த்தேவா


பாடல்கள்    -  நா.முத்துகுமார், தருண்கோபி, ஸ்ரீகாந்த்தேவா.


எடிட்டிங்     -    எல்.வி.கே.தாஸ்   /  ஸ்டன்ட்     -     டி.ரமேஷ்   /  கலை        -   மணிகார்த்திக்


நடனம்       -   சுஜாதா, காதல்கந்தாஸ்.


தயாரிப்பு நிர்வாகம்   -  எம்.ஜி.சிவகுமார்


தயாரிப்பு     -     எஸ்.சரவணன்


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  தருண்கோபி.




படம் பற்றி இயக்குனர் கூறியது...




முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடக்கும் பக்கா கமர்ஷியல் படம். திமிரு படத்தை போலவே இந்த படத்திலும் விறுவிறுப்பான திரைக்கதை இருக்கும். படத்தில் எமோஷனல்,காதல் மோதல் என படம் முழுக்க அதிரடியாக இருக்கும். மதுரை, திண்டுக்கல், வத்தலகுண்டு, உசிலம்பட்டி போன்ற ஊர்களில்  சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படும் சம்பவங்கள் தான் படத்தின் திரைக்கதை.




படத்திற்காக 35 நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம். சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக இந்த படத்தில் நாற்பது பாட்டிகள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படம் தயாராகி வருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் தருண்கோபி.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா