சற்று முன்
சினிமா செய்திகள்
சுந்தர் சி-யிடம் சிபாரிசு செய்த நடிகை
Updated on : 02 June 2015
சுந்தர் சி-யின் அமோக வசுலை குவித்த படம் அரண்மனை 1. இதனை தொடர்ந்து அரண்மனை 2 படத்தில் நடிக்க திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நடிக்க இன்னொரு ஹீரோயின் சுந்தர் சி தேடிகொண்டிருப்பதை அறிந்து பூனம் பஜ்வாவை இந்த படத்தில் நடிக்க சிபாரிசு செய்திருக்கிறார் திரிஷா.
ஒரு நடிகை இன்னொரு நடிகையை சிபாரிசு செய்வது என்பது மிகவும் பெரிய விஷயம். பூனம் பஜ்வா போகி என்ற படத்தில் தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் திரிஷாவுடன் இணைந்து நடித்துவந்தார். அந்த நட்பின் அடிப்படையில் தான் இந்த சிபாரிசாம்.
தமிழில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமான பூனம் பஜ்வா அதற்கு பின் வந்த கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்தார். இவை சரிவர ஓடாததால் நடிகர் விஷாலுடன் ஒரு பாட்டுக்கு 'ஆம்பள' படத்தில் ஆடியிருந்தார். ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட்டில் இன்னொரு நாயகியாக நடித்தார்.
தற்சமயம் கைவசம் புதிய படங்கள் எதுவும் இல்லாத நிலையில் தான் திரிஷா இந்த சிபாரிசு செய்திருக்கிறார். ஏற்கனவே ஹன்சிகா மற்றும் திரிஷா இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யபட்டிருக்கிறார்கள். தற்போது பூனம் பஜ்வா மூன்றாவது ஹீரோயினாக சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் சுந்தர்.சியின் ஆஸ்தான நாயகனான சித்தார்த் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்தில் ஹன்சிகா மீண்டும் பேயாக வருவாரா அல்லது கொழுக்மொழுக் நாயகியாக வலம் வருவாரா என்று தெரியவில்லை.
சமீபத்திய செய்திகள்
திருநங்கைகளை பற்றி அழுத்தமாக பேசும் படைப்பாக 'சைலண்ட்' படம் வந்திருப்பது அழகு
SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் இன்று தமிழகமெங்கும் வெளியாகியிருக்கும் திரைப்படம் சைலண்ட்.
முழுக்க புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தருகிறது.
ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கும் போது, மேலும் பல கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. இதன் புவனேஸ்வரி எனும் பெண் இருப்பதாக நம்புகிறார் போலீஸ் ஆனால் அது புவனேஷ் எனும் ஆண் என்பது தெரிய வருகிறது. அவனைப் போலீஸ் பிடித்ததா? அந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பது தான் சைலண்ட் திரைப்படம்.
சமூகத்தில் ஒரு பாலினம் கைவிடப்பட்டிருக்கிறதா? என்ன தான் நவீன சமூகமாக மாறினாலும், திருநங்கைகளை நாம் பார்க்கும் பார்வை பெரிதாக மாறவில்லை அதை அழுத்தமாக பேசும் படைப்பாக சைலண்ட் படம் வந்திருப்பது அழகு.
இயக்குநர் கணேஷா பாண்டி மிக அழுத்தமான களத்தை தேர்ந்தெடுத்து சுவாரஸ்யம் குறையாமல் படத்தை தந்துள்ளார். முதல் பட சிக்கல்கள் குறைகள் தாண்டி ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை படம் தருகிறது.
ஒரு கொலை அதை தொடர்ந்து விசாரணை என அடுத்தடுத்த கொலை, என விரியும் திரைக்கதையை அறிமுகப்படத்திலேயே அட்டகாசமாக எழுதி அசத்தியுள்ளார் சமய முரளி. போலீஸ் கதாப்பாத்திரத்தில் அவரது நடிப்பு அசத்தலாக உள்ளது.
இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டியே நடித்துள்ளார், இயக்கத்தை விட அவர் நடிப்பு பிரமாதம்.
மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து என எல்லோரும் கதாப்பாத்திரத்திற்கான உழைப்பத் தந்துள்ளார்கள்.
குறைந்த படெஜெட் என்றாலும் சேயோன் முரளி ஒளிப்பதிவு படத்தை ஈடு செய்கிறது. எடிட்டிங் ஓகே.
இசை சமயமுரளி செய்துள்ளார் ஆச்சரியம் முதல் படம் போல தெரியவில்லை, பாடல்கள் தேர்ந்த இசையமைப்பாளர் இசையமைத்தது போல உள்ளது. மூன்று பாடல்களுமே ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசையும் அட்டகாசம்.
படத்தில் கதை திரைக்கதையில் எந்த ஓட்டையும் இல்லை, ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் உருவாக்கத்தில் ஆரம்ப கட்ட தடுமாற்றங்கள் தெரிகிறது. அதை சரி செய்து, இன்னும் மெருகேற்றியிருக்கலாம்.
தமிழ் சினிமாவுக்கு புதிதான திரில்லர் இல்லையென்றாலும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியைத் தரும் டீசண்டான திரில்லர் படம்.
கண்டிப்பாக ரசிகர்கள் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.
நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது
பழம்பெரும் நடிகர் நந்தமுரி தாரக ராம ராவின் பேரனும், நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமுரி மோக்ஷக்யா, தனது சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹனுமான் மூலம் அறியப்பட்ட கிரியேட்டிவ் ஜெம் பிரசாந்த் வர்மா இயக்கும், ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். மோக்ஷக்யாவின் முதல் படம் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (PVCU) ஒரு பகுதியாக இருக்கும்.
மோக்ஷக்யா இப்படத்திற்காக நடிப்பு, சண்டை மற்றும் நடனம் ஆகியவற்றில் விரிவான பயிற்சியைப் பெற்று வருகிறார், இந்நிலையில் மோக்ஷக்யா, ஸ்டைலான தோற்றத்தில் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கும் புதிய ஸ்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டைலான செக்கர்ஸ் சட்டை அணிந்து, நீண்ட, கச்சிதமாக ஸ்டைல் செய்யப்பட்ட முடி மற்றும் தாடியுடன், அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். அவரது நேர்த்தியான தோற்றம் அவர் தெலுங்குத் திரையுலகில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக வலம் வருவார் என்பதைக் காட்டுகிறது.
மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை எஸ்.எல்.வி சினிமாஸின் சுதாகர் செருகூரி, லெஜண்ட் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார், M தேஜேஸ்வினி நந்தமுரி இப்படத்தை வழங்குகிறார். மோக்ஷக்யாவின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்ட இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பழங்கால புராண இதிகாசத்தின் அடிப்படையில் உருவாகும் இப்படம், தற்போது முன் தயாரிப்பு பணிகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் மற்ற விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.
கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்து பொங்கல் வெளியீடாக வரும் 'தருணம்'!
'தேஜாவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது வரும் 2025 பொங்கல் வெளியீடாக இப்படம் வெளியிடவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!
முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யாவின் அடுத்த மெகா என்டர்டெய்னர் படமான 'சூர்யா 45' படத்தின் பூஜை, இன்று ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில், இனிதே நடை பெற்றது.
அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் மற்றும் ஓக்கே ஓக்க ஜீவிதம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, நடிகர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். அனைவரும் ரசிக்கும்படியான, காமெடி கலந்த ஆக்ஷன் என்டர்டெய்னராக, இப்படம் உருவாகவுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். இது தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
இன்றைய பூஜைக்குப் பிறகு, ஆர்ஜே பாலாஜி கோயம்புத்தூரில் முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்தவுள்ளார். இப்படப்பிடிப்பில், சூர்யா மற்றும் பிற முன்னணி நடிகர்கள் இடம்பெறும் முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளனர்.
இப்பிரம்மாண்ட திரைப்படத்தை, தயாரிப்பாளர்கள் எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம்!
வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனைப் படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும், என்பதையே லட்சியமாக கொண்டு ஒருவர் பயணித்திருக்கிறார்.
ஆம், தனிமனித எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் இவ்வுலகில், மற்றவர்களைப் பற்றி சிந்தித்ததோடு, சாதனையாளர்களை அங்கீகரித்து கெளரவிக்க வேண்டும் என்பதை சிந்தித்துக்கொண்டிருந்தவர் தான் திரு.ஜான் அமலன். திரைத்துறை மட்டும் இன்றி தொழில், விளையாட்டு, அரசியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்க வேண்டும், என்பதை கனவாக கொண்டிருந்தவர், ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் ‘இந்தியன் விருதுகள் ‘ (INDIAN AWARDS) என்ற பெயரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ‘இந்தியன் விருதுகள் ’ (INDIAN AWARDS) நிகழ்ச்சியின் 3 வது சீசன் வரும் 2024, டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நிகழ்வாக, சென்னை, சேத்துபட்டில் உள்ள ‘லேடி ஆண்டாள்’ அரங்கில் நடைபெறுகிறது. இதில், சினிமாத்துறையில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட 60 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும், அரசியல், தொழில், விளையாட்டு, மருத்துவம், கல்வி, ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 30 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது.
மேலும், இறந்தும் மக்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நடிகரும், அரசியல் தலைவருமான திரு.விஜயகாந்த் அவர்களின் நினைவாக ‘கேப்டன் விஜயகாந்த்’ என்ற பெயரில் சினிமாத்துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல், சினிமாத்துறையில் கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் தொடர்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு.டைமண்ட் பாபு அவர்களின் 40 வது திரையுலக வாழ்க்கையும் கொண்டாடப்படுகிறது.
விருதுகள் வழங்குவது மட்டும் இன்றி இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஏழை எளிய சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்க இருக்கும் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம், இத்தகைய பணியை தமிழக அரசு வழிகாட்டுதல்படி செய்கிறது.
‘இந்தியன் விருதுகள் 2024 ’ (INDIAN AWARDS 2024) நடைபெறும் அதே மேடையில், இந்திய அளவில் மிக முக்கியமான அழகுப் போட்டியான ’Mr Miss & Mrs தமிழகம் 2024 - சீசன் 4’ நடைபெற உள்ளது.
3வது ஆண்டாக ‘இந்தியன் விருதுகள் 2024 ’ நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தும் ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) நிறுவனம், கடந்த மூன்று வருடங்களாக ’Mr Miss & Mrs தமிழகம்’ அழகுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், வட இந்தியாவில் இத்தகைய அழகுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்த நிலையை, தனது இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிருவனம் மூலம் மாற்றியிருக்கும் திரு.ஜான் அமலன், அவர்கள் கோவாவில் சொகுசு கப்பலில் இந்த அழகுப் போட்டியை இரண்டு முறை நடத்தி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது விழா, அழகுப் போட்டிகள் ஆகியவற்றை தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் வித்தியாசமாக நிகழ்த்தி மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையின் கவனம் ஈர்த்த திரு.ஜான் அமலன், அவர்கள் தற்போது திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் கால்பதிக்கிறார். இதற்காக ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பவர், இந்நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான திரைப்படங்களை தயாரிக்க இருக்கிறார்.
பெண் சிங்கம் மற்றும் ஆண் சிங்கம் என்ற அர்த்தம் கொண்ட ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனத்தின் அறிமுக விழா நவம்பர் 25 சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், பி.ஆர்.ஓ சங்க தலைவர் டைமண்ட் பாபு, நடிகர் செளந்தரராஜன், நடிகைகள் கோமல் சர்மா, ஷாலு ஷம்மு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனர் திரு.ஜான் அமலன், சினிமாத்துறையில் தயாரிப்பாளராக கால்பதிப்பது பற்றி பேசுகையில், “நான் கல்லூரி படிக்கும் போதே, சினிமா பிரபலங்கள் மற்றும் பிறத்துறைகளில் சாதிப்பவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அவர்களை மிகப்பெரிய அளவில் கெளரவிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. குறிப்பாக நடிகர் விஜய் அவர்களுக்கு என் கையால் விருது வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் தீவிர விஜய் ரசிகர் என்பதால் இதை என் லட்சியமாக கூட வைத்திருந்தேன். கல்லூரி முடித்த பிறகு என் ஆசை என்னை தொடர்ந்ததால், இத்துறையை என் எதிர்காலமாக எடுத்துக்கொண்டேன். அதன்படி, ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ‘இந்தியன் விருதுகள்’ என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கி வருவதோடு, அழகுப் போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வட இந்தியாவில் அழகுப் போட்டியை நடத்த முடியும் என்பதை முதலில் நிகழ்த்திக் காட்டியது நான் தான்.
விருது விழா மற்றும் அழகுப் போட்டி ஆகியவற்றுடன் நின்றுவிடாமல் இப்போது திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் கால் பதிக்கிறேன். ’லையோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனம் சார்பில் திரைப்படங்கள் தயாரிக்க இருக்கிறேன். திறமை மிகு இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதேபோல், நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் குறைந்த முதலீட்டில், தரமான மற்றும் வித்தியாசமான படைப்பாகவும் இருக்கும்.
நாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கான கதை தேர்வில் தற்போது ஈடுபட்டுள்ளோம். எங்கள் முதல் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் ஜாலியாக பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, அனைத்து வயதினரையும் தொடர்பு படுத்தும் ஒரு திரைப்படமாகவும் இருக்கும். அப்படம் பற்றிய மற்ற தகவல்கள் இந்தியன் விருதுகள் 2024 நிகழ்ச்சி மேடையில் அறிவிக்கப்படும்.” என்றார்.
நடிகர் விஜய்க்கு விருது வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள், ஆனால் அவர் நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு சென்றுவிட்டாரா..?
விஜய் அவர்கள் அரசியலுக்கு சென்றாலும், நான் அவரது ரசிகன் தான், அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் நடிகராக இருக்கும் போது அவருக்கு விருது வழங்க வேண்டும், என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை தான் என்னை இந்த துறையில் பயணிக்க வைத்திருக்கிறது. அதேபோல், அவர் சினிமாவில் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவராக அவருக்கு நான் விருது வழங்குவேன், என்று நம்புகிறேன். அதற்கான உயரத்தை அடைய நானும், என் நிறுவனமும் கடுமையாக உழைப்போம்.” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “விஜய் ரசிகராக இருந்து தற்போது தயாரிப்பாளராகியிருக்கும் ஜான் அமலன் அவருக்கு என் வாழ்த்துகள். அவர் தயாரிப்பாளராக மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் சுயநலமும் இருக்கிறது. அதற்கு காரணம், அவர் என்னுடைய ஊரைச் சேர்ந்தவர். அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகவும், விருது விழா உள்ளிட்ட நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்துவதில் கெட்டிக்காரர். அவர் சினிமாத்துறையில் நிச்சயம் வெற்றி பெறுவார், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனம் தயாரிக்க இருக்கும் முதல் திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் 2024, டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் நடைபெறும் ‘இந்தியன் விருதுகள் 2024’ நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.
விருதுக்குரியவர்களை தேர்வு செய்வதற்காக சினிமா, தொழில், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறவர்கள் பற்றிய மக்கள் கருத்து, அவர்கள் பற்றி சமூக வலைதளப்பங்களில் வெளியாகும் விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் உள்ளிட்டவைகளை வைத்து இறுதிப் பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது.
திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள 'சைலண்ட்' பட டிரெய்லர் வெளியீடு!
SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், தோ.சமயமுரளி திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகியுள்ளது.
உடை மற்றும் நடவடிக்கைகளில் பெண்ணாக தோற்றத்தை மாற்றிக்கொண்ட ஒருவன் , தன் தாயை தானே கொன்றதாக போலீஸ் அதிகாரியிடம் ஒப்புக்கொள்கிறான். அந்த கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பதை பரபரப்பாக சொல்லும் திரைப்படம் தான் சைலன்ட்.
புதுமையான டிரெய்லர் இப்படத்தின் கதையின் மையத்தை வெளிப்படுத்துவதுடன், படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.
இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டி நடித்துள்ளார்.
மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், தோ.சமயமுரளி, அறம் ராம்ஸ், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சேயோன் முரளி ஒளிப்பதிவு செய்ய, சென்னை தெற்கு மண்டல ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையர் தோ.சமயமுரளி I.R.S இசையமைத்துள்ளார்.
“சைலண்ட்” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரப்பாக நடந்து வருகிறது. படம் வரும் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
SP ராஜசேதுபதி SPR பிலிம்ஸ் சார்பில் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்.
“சைலண்ட்” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரப்பாக நடந்து வருகிறது. படத்தை வரும் 29 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
SP ராஜசேதுபதி SPR பிலிம்ஸ் சார்பில் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்.
என் படங்களில் திருநங்கைகளுக்கு மரியாதை செய்யும் காட்சிகள் வைப்பேன் - இயக்குநர் சீனு ராமசாமி
SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் இடை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
நாயகன் முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது…
ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக்கும் நன்றி. சைலண்ட் படம் மிக மிக அழகான படம். சமயமுரளி சாரை வெகு காலமாகத் தெரியும். மிக மிக நேர்மையான மனிதர். அவர் நிறையப் பேருக்கு உதவி செய்து வருகிறார். கணேஷ் சார் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. திரு நங்கைகள் பற்றி நிறையச் சர்ச்சைகள் இருக்கிறது அதைத் தெளிவாக்குவது போல் இந்தப்படம் இருக்கும். திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும். எனக்கும் நண்பியாக திருநங்கை நமீதா இங்கு இருக்கிறார். அவருக்கு நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
திருநங்கை நமீதா பேசியதாவது…
எனக்கு வாய்ப்பு தந்த சமயமுரளி சார், இயக்குநர் கணேஷா இருவருக்கும் நன்றி. திருநங்கைகள் வாழ்க்கையை எடுத்துக்கூறும் கதை என்று சொன்னார்கள். அதனால் உடனே ஒப்புக்கொண்டேன். இந்தப்படத்தின் பாடலில் நடித்தது மகிழ்ச்சி. பாடல் மிக நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் சமய முரளி பேசியதாவது…
முதல் மேடை மிக மகிழ்ச்சியாக உள்ளது. காலேஜ் காலத்தில், மியூசிக் ட்ரூப்பில் சேர்த்துக்கொள்வார்களா? என ஏங்கியிருக்கிறேன். ஆனால் இன்று இசையமைப்பாளராக இங்கு மேடையில் நிற்கிறேன். எனக்கு வாய்ப்பு தந்த கணேஷா பாண்டிக்கு நன்றி. அவர் தான் ஊக்கம் தந்தார். என் மனைவிக்கு, என் அப்பாவுக்குத் தான் முதன் முதலில் பாடல் எழுதினேன். என் அம்மாவுக்காகப் பாடல் எழுதியதில்லை. இந்தப்படத்தில் கணேஷா பாண்டி ஒரு சிச்சுவேசன் சொன்ன போது, தாய் தான் கடவுளை விட ஒரு படி மேல் எனப் பாடல் எழுதியுள்ளேன். மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் ஆனால் ராகம் கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் இசையமைத்துள்ளேன் இயக்குநர் நன்றாக இருப்பதாக பாராட்டினார். ஆண்டவனுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் கணேஷா பாண்டி பேசியதாவது…
சைலண்ட் என் முதல் குழந்தை. இந்த தலைப்புக்கும் எனக்கும் நிறையப் பந்தம் இருக்கிறது. சின்ன வயதில் அதிகம் பேச மாட்டேன், அதன் பிறகு வறுமை, அதன் பின் போராட்டம் இந்த அனைத்துக்கும் இந்த சைலண்ட் பதிலாக இருக்கும். ராம் பிரகாஷ் சார் இந்த வாய்ப்பிற்கு நன்றி சார். பத்திரிக்கையாளர்கள் இந்த சைலண்ட் படத்திற்கு ஆதரவு தந்து தூக்கி விட வேண்டும். இங்கு வந்து வாழ்த்திய பிரபலங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். என் பெற்றோர் இன்று உயிருடன் இல்லை. உங்கள் அனைவரையும் என் பெற்றோராக நினைத்து வணங்குகிறேன் நன்றி.
இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது..
உண்மையில் இது ஆச்சரியமான மேடை. ஒரு நியூஸை இரண்டு பி ஆர் ஓவிற்கு அனுப்பினால், அது பத்திரிக்கையில் வராது ஆனால், இந்த மேடையில், அனைத்து பி ஆர் ஓக்களும் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. ஹேமானந்த் அழைப்பின் பேரில் தான் இந்த விழாவிற்கு வந்தேன். என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். சைலண்ட் என ஒரு ஆங்கில படம் பார்த்தேன், அந்த மாதிரி படமாக இருக்குமென நினைத்து வந்தேன். ஆனால் இந்தப்படம் மிகப்பெரிய விசயத்தைப் பேசுகிறது. திருநங்கையை வைத்து எந்த ஒரு இயக்குநரும் இவ்வளவு தைரியமாக முதல் படம் செய்ய மாட்டார்கள். நானும் என் படங்களில் திருநங்கைகளுக்கு மரியாதை செய்யும் காட்சிகள் வைப்பேன். இவர்கள் அதே போல் மிகவும் அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள். படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். நான் சிறு வயதிலிருந்தே விமர்சனம் பார்த்து படம் பார்க்க மாட்டேன் யார் சொல்லும் விமர்சனத்தையும் கேட்க மாட்டேன். பத்திரிக்கைகள் எல்லாவற்றையும் படிப்பேன், தியேட்டரில் படம் பார்த்த பிறகு தான் விமர்சனம் படிப்பேன். ஆனால் அப்போதிலிருந்து இப்போது வரை சிறு முதலீட்டு படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான். ரிவ்யூ இல்லாததால் சின்ன படங்கள் வருவதே தெரியவில்லை. மக்கள் கருத்தை வாங்கி ஒளிபரப்ப மீடியாக்களை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து சிறு படங்களுக்கு ஆதரவு தாருங்கள். இப்படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் கணேஷ் K பாபு பேசியதாவது..
இப்படத்தை ரிலீஸ் செய்யும் ராஜா சேதுபதி என் நண்பர், அவர் சினிமாவை மிகவும் நேசிப்பவர். அவர் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் கண்டிப்பாக நல்ல படமாகத்தான் இருக்கும். இயக்குநர் கணேஷா பாண்டி மிக நன்றாக இயக்கியிருக்கிறார். மிக நன்றாக நடித்துள்ளார். பட்ஜெட் கேட்டேன் நம்ப முடியவில்லை. சின்ன பட்ஜெட்ட்டில் மிக நன்றாக எடுத்துள்ளார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது
இந்தப்படத்தை நான் பார்த்து விட்டேன். அருமையான படம். இப்படத்திற்கு இசையமைத்துள்ள சமயமுரளி எனக்கு நண்பர். அவர் ஒரு அரசு அதிகாரி. ஆனால் சினிமா இசை ஆர்வத்தில் தொடர்ந்து முயன்று, இசையமைப்பாளராக மாறியுள்ளார். வாழ்த்துக்கள். இயக்குநர் கணேஷா பாண்டி மிக நன்றாக இயக்கியுள்ளார். அதை விட நன்றாக நடித்துள்ளார். இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மிக மிகக் கடினம். அதை நன்றாகச் செய்துள்ளார். இப்போது சினிமாவில் விமர்சனம் வரக்கூடாது எனச் சொல்லி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை எப்போதும் வரவேற்பேன். இன்றைய காலகட்டத்தில் முதல் ஷோவில் கூட்டம் வரவில்லை எனும் போது அடுத்த ஷோ காலியாகி விடுகிறது. இந்த நிலையில் விமர்சனங்கள் வர வேண்டும், வர வில்லையெனில் அந்தப்படம் வருவதே தெரிவதில்லை. இந்த விசயத்தில் திரைத்துறையினர் முறையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும்.
உடலால் ஆணாகவும் உடை நடவடிக்கையில் பெண்ணாகவும் தோற்றத்தை மாற்றிக்கொண்ட ஒருவன் இருக்கும் படத்தில், தன் தாயை தானே கொன்றதாக போலீஸ் அதிகாரியிடம் ஒப்புக்கொள்கிறான். அந்த கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பதை பரபரப்பாக சொல்லும் திரைப்படம் தான் சைலன்ட்.
இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டி நடித்துள்ளார்.
மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், சமயமுரளி, அறம் ராம்ஸ், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையராக பனியாற்றி வரும் திரு T சமய முரளி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
“சைலண்ட்” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரப்பாக நடந்து வருகிறது. படத்தை வரும் 29 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
SP ராஜசேதுபதி SPR பிலிம்ஸ் சார்பில் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்.
சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட 'ஸ்வீட் ஹார்ட்' பட ஃபர்ஸ்ட் லுக்!
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் திரையில் லவ் மேஜிக் நிகழ்த்தும் இளம் காதலர்களான ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் ஆகியோரின் இளமை துள்ளலான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே 'மாடர்ன் மாஸ்ட்ரோ' யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் 183வது இசை ஆல்பம் 'ஸ்வீட் ஹார்ட்' என்பதால்.. இப்படத்தின் பாடலுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு!
பிரபல முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள, “கேம் சேஞ்சர்” திரைப்படம், இந்தியாவெங்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் தமிழ் பதிப்பினை, எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ் வழங்குகிறது. இரண்டு மெகா ஸ்டார் தயாரிப்பாளர்களான திரு.தில்ராஜு & திரு.ஆதித்யராம் இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்திய சினிமாவில் முதன்முறையாக, கேம் சேஞ்சர் திரைப்படக்குழு, அமெரிக்காவில் டிசம்பர் 21, 2024 அன்று டெக்சாஸின் கார்லண்டில் உள்ள கர்டிஸ் குல்வெல் மையத்தில், ஆடம்பரமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. கரிஸ்மா ட்ரீம்ஸின் ராஜேஷ் கல்லேபள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கொண்டாட்டம், தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவிற்கு ஒரு வரலாற்றுத் தருணமாகும். அமெரிக்காவின் டல்லாஸை தளமாகக் கொண்ட ராஜேஷ் கல்லேபள்ளி, ஒரு தொழில்முனைவோர் மற்றும் சமூகத் தலைவராக குறிப்பிடத்தக்க பாரம்பரியத்தை உருவாக்கிய ஒரு முன்மாதிரியான நபர். தகவல் தொழில்நுட்ப ஆலோசனை, உணவகச் சங்கிலிகள், ரியல் எஸ்டேட், திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகம் போன்ற பல்வேறு துறைகளைக் கொண்ட ராஜேஷ் கல்லேபள்ளி, இம்மாதிரி நிகழ்வை மிகப் பெரிய அளவில் நடத்துவதில் சிறந்தவர்.
ராம் சரண் மீதான அபிமானத்தால் ராஜேஷ் கல்லேபள்ளி இந்த மிகப்பெரிய பணியை மேற்கொண்டுள்ளார், இது திரைத்துறை எங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து ராஜேஷ் கூறுகையில்.., "இந்தியப் படமொன்றுக்கு அமெரிக்காவில் முதன்முறையாக இந்த அளவிலான ப்ரீ-ரிலீஸ் நிகழ்வை நடத்துவது பெருமையாக உள்ளது. இந்த வாய்ப்பினை வழங்கிய ராம் சரண், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோருக்கு நன்றி. இந்த நிகழ்வை மாபெரும் வெற்றியடையச் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
முன்னதாக வெளியான போஸ்டர்கள், 'ஜருகண்டி ஜருகண்டி' மற்றும் 'ரா மச்சா ரா' பாடல்கள் மற்றும் டீசர் அட்டகாசமான வரவேற்பை பெற்றுள்ளது. பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் பெற்ற ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமான புதுமையான சினிமா அனுபவத்தை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார், படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். எஸ்.எஸ்.தமனின் இசை, சாய் மாதவ் புர்ராவின் வசனங்கள் மற்றும் நட்சத்திரத் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில், படம் மிக அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும். படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்!
'ஜீப்ரா' லக்கி பாஸ்கர் சாயலில் இருந்தாலும், விமர்சகர்கள் கதை புரிந்து பாராட்டுவார்கள்!
இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜீப்ரா.
புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தயாரிப்பாளர் தினேஷ் பேசியதாவது…
பத்திரிக்கை நண்பர்களே நாங்கள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக்கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த்தேன். நான் முதன்முதலில் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் வேலை பார்த்தேன், அடுத்தடுத்து வேலை பார்த்து, இந்தப்படம் செய்துள்ளேன். இந்தப்படத்திற்காக ஐந்து படமெடுக்குமளவு திரைக்கதையைத் தந்தார் ஈஸ்வர். அவ்வளவு ஸ்டஃப் இருக்கிறது அவரிடம். இந்தியாவின் நல்ல இயக்குநர் ஆகும் திறமை அவரிடம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் பாராட்டி இருந்தீர்கள். உங்கள் ஆதரவில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. முதல் படமே மிகப்பெரிய பட்ஜெட்டில் தரலாம் என நம்பிக்கை வந்துள்ளது. அந்த நம்பிக்கை தந்ததற்கு அனைவருக்கும் நன்றிகள்.
விநியோகஸ்தர் ரகுபதி பேசியதாவது…
ஜீப்ரா டிரெய்லர் வந்தவுடனே இந்தப்படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். தீபாவளிக்கு வரவேண்டிய படத்தை, தள்ளிக் கொண்டு வந்தோம். லக்கி பாஸ்கர் சாயலில் இருந்தாலும், விமர்சகர்கள் கதை புரிந்து பாராட்டுவார்கள் என நம்பினோம். அது போல் உங்கள் ஆதரவில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இயக்குநர் மிக அருமையாகப் படத்தைத் தந்துள்ளார். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.
எடிட்டர் அனில் கிரிஷ் பேசியதாவது…
15 வருட கனவு நனவாகியுள்ளது. 15 வருடம் முன்பு கோயம்புத்தூரிலிருந்து வந்து நானாக வளர்ந்து இந்தப்படத்தில் எடிட்டராக பணியாற்றியுள்ளேன். நான் யாரிடமும் வேலை செய்ததில்லை, எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சின்ன சின்னதாக ஷார்ட் ஃபிலிம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த இடத்தை அடைந்துள்ளேன். 2018 ல் ஈஸ்வரை மீட் செய்தேன். அவருடனான டிராவல் மறக்க முடியாதது. பென்குவின் படத்தை என்னை நம்பி தந்தார். இப்போது ஜீப்ரா. பாலா சார், தினேஷ் சார் எங்களுக்கு ஆதரவு தந்ததால் தான் இந்தப்படம் உருவானது. எனக்கு இந்த வாய்ப்பை தந்த ஈஸ்வருக்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். சத்யராஜ் சார் இருந்தாலே ஷூட் கலகலப்பாக இருக்கும். அவருடன் வேலை பார்த்தது ஆசீர்வாதம். சின்ன பட்ஜெட்டில் ஆரம்பித்த படம் பாலா சாரின் விஷன் இந்தப்படத்தைப் பெரிய படமாக்கியுள்ளது. உங்கள் ஆதரவிற்கு நன்றி.
டப்பிங் ரைட்டர் அசோக் பேசியதாவது…
பாலா சார் மூலம் தான் இந்த வாய்ப்பு வந்தது. இந்தப்படம் பார்த்தேன், படம் பார்த்த போதே, இந்தப்படம் செய்ய வேண்டும் எண்ணம் வந்தது. அப்போது லக்கி பாஸ்கர் வரவில்லை மிகவும் புதிதாக இருந்தது. கதாபாத்திரங்கள் அத்தனையும் அழுத்தமாகச் சிறப்பாக இருந்தது. அதைத் தமிழில் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதைச் சரியாகச் செய்துள்ளோம் என நம்புகிறேன் நன்றி.
திரைக்கதை எழுத்தாளர் யுவா பேசியதாவது..,
ஒரு சின்னபடமாகத் தான் இதைத் தொடங்கினோம். பெரிய படமாக ஆக்கிய பாலா சார், ஈஸ்வர் மற்றும் படக்குழுவிற்கு நன்றி. இப்படத்தைப் பெரிய அளவில் ஆதரவு தந்து வெற்றி பெற வைத்த உங்களுக்கு நன்றி.
இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் பேசியதாவது..,
இங்கு தான் என் பயணம் தொடங்கியது. இங்கு நான் மற்ற படங்களின் விழாக்களை வேடிக்கை பார்த்துள்ளேன். என் முதல் படம் பென்குவின் கொஞ்சம் தவறிவிட்டது. அதன் முழுப்பொறுப்பும் எனக்குத் தான் அதை ஏற்றுக்கொள்கிறேன். அதைத் திருத்திக்கொண்டு தான், இந்தக்கதையைத் துவங்கினோம். பென்குவின் என்னை மைனஸ் 1 க்கு கொண்டு சென்று விட்டது. அதிலிருந்து மீண்டு வர ஒரே ஒரு முறை வேறு ஒரு கதை செய் என எல்லோரும் சொன்னார்கள் சரி செய்வோம் என்று தான் இந்தக்கதை ஆரம்பித்தது. பாலா சார், தினேஷ் சார் இருவரிடம் கதை சொன்ன போது, எனக்கு ரொம்பப் பயமாக இருந்தது. ஆனால் கதை கேட்டவுடன், உடனே செக் தந்தார்கள் எனக்குக் கனவு மாதிரி இருந்தது. இந்தப்படம் இங்கு தான் செய்வதாக இருந்தது. ஆனால் அப்போது ஃபினான்ஸியலாக முடியவில்லை, அதனால் தெலுங்குக்குப் போனது. அங்கிருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் செய்தோம். தியேட்டரில் எல்லோரும் கொண்டாடுவதைப் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றி உங்களால் தான் உங்கள் அனைவருக்கும் நன்றி.
நடிகர் சத்ய தேவ் பேசியதாவது…
தமிழ்நாட்டுடன் எனக்கு ஸ்பெஷல் கனக்சன் இருக்கிறது. தமிழ்ப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் படம் செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். ஜீப்ரா மூலம் அது நடந்தது மகிழ்ச்சி. இப்படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. உங்கள் பாராட்டுக்கள் பெரிய ஊக்கம் தந்துள்ளது. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. சீக்கிரம் தமிழ் கத்துக்கிறேன். இப்படத்தின் முதுகெலும்பாக இருந்த சத்யராஜ் சாருக்கு நன்றி. இயக்குநர் ஈஸ்வர் இந்தப்படத்திற்கு 800 பக்க திரைக்கதை எழுதியிருந்தார். அவர் மியூசிக், ரசிகர்கள் ரியாக்சன் முதற்கொண்டு டீடெயிலாக எழுதியிருந்தார். அவர் எழுதியது அப்படியே தியேட்டரில் நடந்தது. கண்டிப்பாக அவர் மிகப்பெரிய இயக்குநராக வருவார். அனில் எடிட்டிங் குறித்து தனியாகப் பாராட்டுகிறார்கள். ரவி பஸ்ரூர் மியூசிக் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி.
தயாரிப்பாளர் பால சுந்தரம் பேசியதாவது…
இது தான் என் முதல் மேடை. Old Town Pictures க்கு இதை முதல் படமாகச் செய்ய நினைத்தது ஏனென்றால், நான் கடலூர்க்காரன், ஓல்டவுன் எங்கள் ஊர், அதை எங்காவது கொண்டு வந்துவிடுவோம் என்று தான் இந்த டைட்டில். ஈஸ்வர் இந்தக்கதை சொன்னவுடன் கண்டிப்பாக இதை நாம் செய்துவிட வேண்டும் என்று தோன்றியது. தினேஷ் தான் புரடக்சனுக்கு என்னை இழுத்து விட்டார். இந்தக்கதை கேட்டவுடன், இதை எப்படியாவது பெரிதாக செய்ய வேண்டும் என நினைத்தோம். தமிழ் மலையாளம் எல்லாம் சேர்த்துத் தான் செய்ய நினைத்தோம். ப்ளான் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே நிறையப் பிரச்சனை, இந்தக்கதையைத் தமிழில் எல்லா நடிகர்களிடமும் சொல்லியுள்ளோம். இந்தக்கதையில் ஒரு வரி மாற்றக்கூடாது அதை ஒத்துக்கொள்பவர்கள் தான் நடிகர்கள் என முடிவு செய்தோம். சத்ய தேவ் அவ்வளவு உற்சாகமாக வேலை செய்தார். ஈஸ்வர் மாதிரி ஒரு உழைப்பாளி இருக்க முடியாது. அசுரத்தனமாக உழைத்தார். அனில் அற்புதமான எடிட்டர். பெரிய தடைகளைத் தாண்டி இந்தப்படத்தைச் செய்துள்ளோம். எங்கள் டீமில் எல்லோருக்கும் அடையாளமாக இருந்தது ரவி பஸ்ரூர் மற்றும் சத்யராஜ் சார் மட்டும் தான். இப்போது எங்கள் பெயரும் தெரியுமளவு படத்தைத் தந்துள்ளோம். இந்தக்கதை தந்த ஈஸ்வருக்கு நன்றி. சத்ய தேவ், தனஞ்சயா தந்த புரமோசன், உழைப்பு, வேறெந்த நடிகரும் தர மாட்டார்கள். அவ்வளவு உழைத்தார்கள். அவர்களுக்கு நன்றி. இக்கதையில் உழைத்த யுவாவிற்கு நன்றி. எங்களுக்கு முழு ஆதரவாக நின்ற சத்யராஜ் சாருக்கு நன்றி. எங்களுக்கு ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
நடிகர் சத்யராஜ் பேசியதாவது…
நான் இந்தளவு வெற்றியை எதிர்பார்த்து நடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பாஸிடிவ் ரிவ்யூஸ் வந்து கொண்டே இருக்கிறது. இந்தியில் ஹவுஸ்புல் ஆகிறது. எல்லாப்பக்கமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சத்யதேவை தமிழுக்கு வரவேற்கிறேன். அவர் தமிழ் கற்றுக்கொள்வதாகச் சொன்னார். நான் 15 ஆண்டுகளாகத் தெலுங்கில் நடிக்கிறேன் ஆனால் இன்னும் தெலுங்கு கற்றுக்கொள்ளவில்லை. இப்படத்தில் சத்ய தேவ் என்னை தெலுங்கில் டப் செய்ய வைத்து விட்டார். அதற்கு அவருக்கு நன்றி. இந்த டீமே அற்புதமான டீம். தமிழில் இப்போது பிஸியான ஆள் அசோக்தான். பான் இந்தியப் படங்கள் அதிகமானவுடன், இவர் வேலை அதிகமாகிவிட்டது. ஒரு படத்தில் எடிட்டர் பற்றிப் பாராட்டுகிறார்கள் என்றால், அவர் உழைப்பு அப்படிப்பட்டது. இயக்குநர் ஈஸ்வர் அற்புதமாகப் படத்தைத் தந்துள்ளார். படத்தின் மேல் சத்யா காட்டிய ஆர்வம், அர்ப்பணிப்பு பெரியது. அவ்வளவு உழைத்திருக்கிறார். படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துகள். படத்திற்கு பெரும் ஆதரவு தந்த, உங்கள் அனைவருக்கும் நன்றி.
Padmaja Films Private Ltd and Old Town Pictures, சார்பில் எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம், தினேஷ் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் ஜெனிபர் பிசினாடோ கதாநாயகிகளாக நடிக்க, மூத்த நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சத்யா, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
KGF படப்புகழ் திரு.ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் சுமன் பிரசார் பாகே இணை தயாரிப்பாளராகவும், சத்யா பொன்மர் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். மீராக் வசனம் எழுத, படத்தொகுப்பை அனில் கிரிஷ் கவனித்து இருக்கிறார்கள்.
இந்த பான் இந்திய திரைப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா