சற்று முன்

150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |    பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!   |    'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |   

சினிமா செய்திகள்

'பார்ச்டு' பட காட்சி குறித்த கேள்விக்கு ராதிகா ஆப்தே பதிலடி!
Updated on : 05 October 2016

பார்ச்டு படத்தில் இடம்பெற்ற காட்சி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வியெழுப்பிய பத்திரிக்கையாளருக்கு ராதிகா ஆப்தே அளித்த பதில், அனைவரிடத்திலும் கவனம் பெற்றுள்ளது.



 



தமிழில் ரஜினிகாந்துடன் 'கபாலி' படத்தில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது இந்தியில் 'பார்ச்டு' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் வரும் படுக்கையறை காட்சி குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, ராதிகா ஆப்தே சரியான விளக்கம் அளித்தார்.



 



பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளித்த ராதிகா ஆப்தே, "மன்னிக்கவும். உங்களது கேள்வியே அபத்தமாக உள்ளது. நீங்கள் அந்த வீடியோவைப் பார்த்து பிறருக்கு பகிர்ந்திருப்பீர்கள். உங்களை போன்றவர்களால்தான் இது சர்ச்சை ஆக்கப்படுகிறது.



 



நான் ஒரு நடிகை. எனக்கு அளிக்கப்பட வேலையை நான் செய்கிறேன். இதுபோன்ற காட்சிகளை வெளிநாட்டு படங்களில் மிகச்சிறப்பாக கட்டமைக்கின்றனர், அவைகளை பாருங்கள். அப்படி பார்த்து உணர்ந்தால் இத்தகைய கேள்விகளை கேட்கமாட்டீர்கள்.



 



தங்கள் உடலை அவமானமாக கருதுபவர்களே பிறரின் உடலை காண நினைப்பார்கள். உங்களுக்கு நிர்வாண உடலை பார்க்க வேண்டுமென்றால், முதலில் உங்களது உடலை கண்ணாடியில் பாருங்கள்" என தைரியமாக கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா