சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

கொடி இசை வெளியீட்டில் அசத்திய தனுஷ்! (ட்ரைலர் இணைப்பு)
Updated on : 06 October 2016

தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் "கொடி" படத்தின் இசை இன்று வெளியிடப்பட்டது.



 



துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, இளம் ரசிகர்களின் விருப்பமான இசையமைப்பாளராக திகழும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.



 



இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தனுஷ், வெற்றிமாறன், துரை செந்தில்குமார், சந்தோஷ் நாராயணன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.



 



விழாவில் பேசிய தனுஷ், "5 அற்புதமான பாடல்களை வழங்கிய சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி. பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. உண்மையில் சந்தோஷ் நாராயணன் நாம் நினைப்பதுபோல் அமைதியானவர் இல்லை. மிகவும் ஜாலியான, கலகலப்பானவர். 



 



எதிர்நீச்சல் கதை சொல்ல வந்தே போதே துரை செந்தில்குமார் எனக்கும் ஒரு கதை சொல்லியிருந்தார். 2 படங்கள் பண்ணுங்கள் பிறகு நடிக்கிறேன் என்றேன், அந்த வார்த்தையை காப்பாற்றி விட்டேன். அவர் சொன்ன கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதன் முதலில் டபுள் ஆக்ஷன், அரசியலில் இருக்கும் ஒருவனது காதாபாத்திரம் என சிறப்பாக இருந்தது.



 



வெற்றிமாறன் குறித்து இங்கு சொல்லியே ஆகவேண்டும். என் வாழ்வின் தோல்விகளிலும், துக்கங்களிலும் நண்பனாக, சகோதரராக என்னோடு இருந்தவர். எனக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தவர் அவருக்கு எனது நன்றி" என கூறினார்.



 



கொடி பாடல்கள் மட்டுமின்றி டிரைலரும் இன்று வெளியாகியுள்ளது. பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்வதாக உள்ளது. திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா