சற்று முன்

‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

அண்டாவ காணோம் டீஸரும் - விஜய் சேதுபதியின் குரலும்!
Updated on : 07 November 2016

JSK  பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக J.சதீஷ்குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் 'அண்டாவ காணோம்'.



 



இந்த படத்தின் டீஸர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியானது. ஷ்ரேயா ரெட்டி முதன்மையான பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை C.வேல்மதி இயக்குகிறார்.



 



வித்தியாசமான முயற்சி, மாறுபட்ட டீஸர் போன்ற வார்த்தைகளை ஒவ்வொரு படத்தின் முன்னோட்டங்களிலும் நாம் வழமையாக கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.



 



ஆனால் அதனை நாம் உண்மையில் உணர்ந்தோமா என்றால் பெரும்பான்மையான  பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும்.



 



இந்த வித்தியாசமான முயற்சி, மாறுபட்ட டீஸர் ஆகியவற்றின் அசலான ஒரு வடிவம் சமீபத்தில் வெளியான 'அண்டாவ காணோம்' டீஸரில் நிரம்பவே இருக்கின்றது.



 



காணாமல் போன அந்த அண்டாவே விஜய் சேதுபதியின் குரலில் கதை சொல்லியாக மாறி முற்றிலுமொரு புதுமையான அனுபவத்தை இந்த டீஸரில் வழங்குகிறது. அதற்கேற்றவாறு காட்சிகள், பின்னணி இசை என அனைத்தும் துல்லியமாக அதில் இணைந்திருக்கின்றன. அண்டாவாக வெறும் குரலின் மூலமே நுட்பமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.



 



இப்போதே ஆர்வத்தை ஏற்படுத்தும் 'அண்டாவ காணோம்' படத்தை திரையில் பார்க்க காத்திருக்கத்தான் வேண்டும் என்றாலும், தற்சமயம் டீஸரை கண்டு ஆறுதல் அடையலாம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா