சற்று முன்

“டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |   

சினிமா செய்திகள்

கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்
Updated on : 15 April 2026

CinemaCon 2026 விழா லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய சினிமா உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் யாஷ் தனது புதிய படம் “Toxic: A Fairy Tale for Grownups” குறித்து பகிர்ந்த கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



 



உலகளாவிய மேடையான CinemaCon-ல் இப்படம் குறித்து வெளியான இந்த தகவல், சர்வதேச ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்திய சினிமா புதிய உயரங்களை எட்டிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், “Toxic” திரைப்படம் அந்த பயணத்தில் முக்கிய இடம் பெறும் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 



படத்தைப் பற்றி யாஷ் கூறியதாவது,



“எங்கள் திரைத்துறையில் முதன்முறையாக இந்த படத்தை ஆங்கிலத்திலும் எடுத்துள்ளோம். இந்த படத்தின் கான்செப்ட் பல அடுக்குகள் கொண்டது. இது சாதாரண கேங்ஸ்டர் ஆக்ஷன் படம் அல்ல. வெளிப்படையாக பார்த்தால் இது ஒரு ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் படம் போல தோன்றும். ஆனால் இதில் ஆழமான சைக்கலாஜிகல் அம்சங்களும், மனித வாழ்க்கையின் சுவாரஸ்யமான கோணங்களும் உள்ளன. ஒரு டார்க் கதாபாத்திரத்தை மிகவும் தனித்துவமான முறையில் காட்டியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.”



 



இயக்குநர் கீது மோகன் தாஸ்  மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி அவர் கூறுகையில் :



“அது மிகவும் உற்சாகமான அனுபவமாக இருந்தது. எங்கள் இயக்குநர் கீது மோகன் தாஸ் கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு புதிய பார்வையை கொண்டு வந்துள்ளார். நான் இதை மிகவும் ரசித்தேன். இதன் காட்சி ரசிகர்களுக்கு ஒருவிருந்தாக இருப்பதோடு, பார்வையாளர்களின் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.”



 



இந்திய சினிமாவின் வளர்ச்சியைப் பற்றி பேசும்போது.., இந்தியா ஒரு தனி உலகம் போல உள்ளது — சில நூறு கிலோமீட்டர் சென்றாலே மொழியும் கலாச்சாரமும் மாறிவிடும் என்று அவர் கூறினார். டப்பிங் மற்றும் பான்-இந்தியா கதைகள் மூலம் இப்போது அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள பார்வையாளர்களை இணைக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.



 



மேலும் டாக்ஸிக் Toxic இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பாகும் — இந்திய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டாலும், உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு படம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில், அதே சமயம் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் படம் இது,” என்று அவர் முடித்தார்.



 



கீது மோகன் தாஸ் இயக்கத்தில், கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions ) மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations) தயாரிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்  -அப்ஸ்'  ( Toxic: A Fairy Tale for Grownups ) படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.



 



இந்தப் படம் உலகம் முழுவதும் 2026 ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா