சற்று முன்

சைஜு ஸ்ரீதரனின் 'ஃபுட்டேஜ்' டிரெய்லர் வெளியாகியுள்ளது !   |    'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தயாராகிறது   |    கதாநாயகன் தமன் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது! - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் 'வல்லவன் வகுத்ததடா' - இயக்குநர் விநாயக் துரை   |    மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ படக்குழுவினர்!   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |    'எனக்கொரு wife வேணுமடா' குறும்படத்தை பார்த்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்   |    மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் கூட்டணியில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

தமிழ் திரையுலக இயக்குனர்களின் கதை கனவுகளை நிஜங்களாக்கும் “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்”
Updated on : 17 February 2015

தமிழ் திரையுலகின் இன்று உடனடி தேவையை புரிந்து கொண்ட திரு ஆதித்யராம் அவர்கள், “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்” என்னும் படப்பிடிப்பு தளத்தை சென்னை அருகே ஈ.சி.ஆர் சாலையில் நிறுவி நடத்தி வருகிறார்.
தமிழ் திரையுலக இயக்குனர்களின் கதை கனவுகளை நிஜங்களாக்கும் இடமாக தற்போது இவரின் “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்” திகழ்ந்துவருகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு புகாத படப்பிடிப்புதளமாக இருப்பது ஆதித்யாராம் ஸ்டுடியோஸீற்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறது.
இருபத்தைந்து ஏக்கரில் மிகப் பிரம்மாண்டமாக ஈ.சி.ஆர் சாலையில் அமைந்திருக்கிறது. இரண்டு பகுதிகளாக மொத்தம் இருபத்தைந்து ஏக்கரை உள்ளடக்கியது ஆதித்யாராம் ஸ்டூடியோஸ்.
இங்குதான் தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட படங்களான உலகநாயகன் கமல் ஹாசனின் “தசவதாரம்” மற்றும் கார்த்தி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்”  படங்களுக்கான அரங்குகள் அமைக்கபெற்று படப்பிடிப்புகள் மேற்கொள்ள பட்டன.
தற்போது இளையதளபதி விஜய், ஹன்சிகா மொத்வானி, ஸ்ருதிஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில், பிரபல இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில பெரும்பொருட்செலவில் தயாராகிவரும் “புலி” படத்தின் பிரத்யேகமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. படப்பிடிப்பு வளாகத்தின் முதல் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் புலி படத்தின் பாடலுக்கான அரங்குகள் அமைக்கபட்டு படபிடிப்பு நடைப்பெற்று வந்தன.
ஆதித்யாராம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. ஆதித்யாராம் அவர்கள் ஒரு வெற்றி படத்தயாரிப்பாளர். இவர் தயாரித்த “ஏக் நிரஞ்சன்”, “குஷி குஷிகா”, “ஸ்வக்தம்”, “சண்டதே சண்டதே” படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது படங்களை தயாரித்து வருகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா