சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்த்து ஒலிக்கின்ற ஒரு படம் 'மாவீரன் கிட்டு'
Updated on : 05 December 2016

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, சூரி உட்பட பலர் நடித்துள்ள 'மாவீரன் கிட்டு' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.



 



அதுமட்டுமின்றி இந்த படத்துக்கு சமூக அரசியல் பார்வைகொண்டவர்களின் மிகப்பெரிய ஆதரவும் கிடைத்துள்ளது.



 



இந்நிலையில், மாவீரன் கிட்டு திரைப்படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்த்து ஒலிக்கின்ற ஒரு படமாக 'மாவீரன் கிட்டு' உள்ளது என பாராட்டு தெரிவித்துள்ளார்.



 



படம் பார்த்து பின்னர் தனது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட தொல்.திருமாவளவன், "அதிகாரம் எந்தளவிற்கு எளியவர்களை ஒடுக்குகின்றது எனவும் கூறும் விதத்தில் சாட்சியம்மாக அமைந்துள்ளது இப்படம். காவல் அதிகாரி, வருவாய் துறை அதிகாரி, அரசியல்வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் எந்தளவிற்கு சாதிக்கு துணை நிற்கின்றது. என்பதனை இப்படம் குறிப்பிடுகிறது.



 



மேலும் சாதி வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதத்தில் உள்ளது .அதற்கும் மேலாக காதல் என்பது மேலானது உயர்வானது அதை கட்டுப்படுத்த இயலாது என்பதனையும். மேலும் ஒடுக்கபட்டவர்களில் சிலர் விலைபோகிறவர்கள் இருப்பதால்.அந்த புரட்சிகரமான போராட்டம் தோல்வியாக அமைகிறது.



 



இருக்கமான சாதி அமைப்பினுள் மிக சிறந்த ஜனநாயகவாதிகள் இருக்கின்றார்கள் என்பதனை உணர்த்தும் விதமாக மிக சிறந்த ஜனநாயகவாதியாக கதாநாயகனின் தந்தை மிக சிறந்த முறையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும் போராடினால் ஒரு போராட்டம் வெல்லாது. அதனோடு சில ஜனநாயக மனிதர்கள் ஒன்று சேர்ந்தால்தான் ஒரு போராட்டம் வெல்லும். என்பதனை இப்படம் விவரிக்கிறது.



 



தியாகத்தினால் கிட்டு மாவீரனாக இருக்கின்றார். மக்களுடைய போராட்டம் என்பது ஒருவனை மாவீரனாகிறது. ஒரு மாவீரன் மக்கள் போராட்டத்தை கட்டமைக்கிறான் என்பதனை உணர்த்தும் விதமாக இப்படம் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா