சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

SJ சூர்யாவை இயக்குறார் கார்த்திக் சுப்புராஜ்
Updated on : 21 February 2015

 




திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக ஊடக  நண்பர்கள் எங்களுக்கு கொடுத்துவரும் பேராதரவிற்கும், ஊக்குவிப்புக்கும், எங்கள் நிறுவனத்துக்கு ஊடகம் மூலம் தொடர்ந்து கொடுத்துவரும் முக்கியத்துவத்துக்கும். மக்களிடையே எங்கள் தயாரிப்புகள் மிக விரைவில் சென்றடைய காரணகர்த்தாவாக இருந்து வரும் ஊடக நண்பர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். மேலும் எங்களின் பதினோராவது தயாரிப்பான மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் மூன்றாவது படைப்பான இறைவி திரைப்பட அறிவிப்பை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.


இப்படத்தில் விஜய் சேதுபதி-பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. 
தற்போது, இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக இப்படத்தை தயாரிக்கும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் உறுதி செய்துள்ளது. 
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டள்ள அறிக்கையில், இறைவி படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கருணாகரன் துணை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகிகள் மற்றும் பிற நடிகர்கள், நடிகைகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். 
தொழில்நுட்பத் துறையில் ஒளிப்பதிவாளராக கேவ்மிக் யு ஆரி, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பாளராக விவேக் ஹர்ஷன், கலை இயக்குனராக விஜய் முருகன் ஆகியோர் பணியாற்ற உள்ளனர். ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்புக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள் என்று கூறியுள்ளனர்.





 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா