சற்று முன்

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |    மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |   

சினிமா செய்திகள்

தமிழக மீனவர் பிரிட்ஜோ படுகொலைக்கு வைரமுத்து கண்டனம்
Updated on : 08 March 2017

இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த தமிழக மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



 



தமிழக மக்கள், அரசியல் இயக்கத்தினர் என அனைவரும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவும் தமிழக மீனவர் பிரிட்ஜோ படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.



 



"தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளில் 730 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.



 



மத்திய அரசு இனிமேலாவது தன் மெளனத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டும். இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும். மீன்கள்தான் உண்பதற்கு; மீனவர்கள் அல்லர்" என்று வைரமுத்து கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா