சற்று முன்
சினிமா செய்திகள்
தமிழில் நமது 'சகாவு' நிவின் பாலி!
Updated on : 28 April 2017
தமிழில் நிவின் பாலி நாயகனா நடிக்கும் 'ரிச்சி' படத்தின் முதல் டீஸர் நாளை வெளியாகிறது.
தமிழில் 'நேரம்' படத்தில் தொடங்கி மலையாளத்தில் 'பிரேமம்', தற்போது 'சகாவு' வரை பட்டையை கிளப்புகிறார்.
இதற்கிடையில் அவர் நேரடியாக தமிழில் நடிக்கும் 'ரிச்சி' முன்னதாக தொடங்கியது. இது கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'Ulidavaru Kandanthe' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கெளதம் ராமச்சந்திரன் இதனை இயக்குகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் முதல் டீஸர் நாளை வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்
இனி யார் படம் எடுத்தாலும் 'பாட்டல் ராதா' படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது - இயக்குனர் அமீர்
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஸ்கின் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய லிங்குசாமி
இந்த படம் தமிழில் மிகச்சிறந்தபடமாக இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒருபடமாக வந்திருக்கிறது. ஜனரஞ்சகமாக அதேசமயம் கருத்துள்ள படமாக இருக்கிறது.
இந்தப்படம் அரசாங்கத்திற்கு போடும் மனு போல . அவசியமானதொரு படம்.
இந்தப்படம் பெரும்வெற்றியடையும் என்றார்.
விழாவில் பேசிய அமீர்
இந்த கதையைப்போல குடி நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றி நான் ஒரு படம் இயக்குவதாக இருந்தேன் அதற்காக கள ஆய்வுகள் செய்தும் வைத்திருந்தேன். பாட்டல் ராதாவை பார்த்தபிறகு இனி அந்த படம் செய்தால் பாட்டல்ராதா பார்த்து எடுத்ததைபோல இருக்கும். எனவே அதை எடுக்கப்போவதில்லை. குடி நோயாளிகளைப்பற்றி இவ்வளவு சிறப்பாக இனி யார் படம் எடுத்தாலும் அது பாட்டல்ராதா படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது. இந்தப்படம் தமிழில் மிகச்சிறந்தபடம் என்றார்.
நிகழ்வில் பேசிய மிஸ்கின்
பாட்டல் ராதா திரைகதை எழுதப்பட்ட விதம் மிகச்சிறப்பானது.
முதல் படத்திலேயே இவ்வளவு சிறப்பாக எழுதி எடுத்திருக்கும் இயக்குனர் தினகரன் சிவலிங்கத்திற்கு பாராட்டுக்கள். அதுவும் இப்படி ஒரு கதைகளத்தை எழுதியதற்கு என் பாராட்டுக்கள்.
இந்தப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிப்பை பார்த்து வியந்துவிட்டேன் குறிப்பாக குருசோமசுந்தரம் நடிப்பில் மிரட்டிவிட்டார். மொத்தமாக படக்குழுவுக்கு என் அன்பும் பாராட்டும். இப்படிப்பட்ட படங்களை தயாரிக்கும் ரஞ்சித்துக்கு என் அன்புகள் என்றார்.
நிகழ்வில் பேசிய வெற்றிமாறன்
பாட்டல் ராதா திரைப்படம் நன்றாக எழுது மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டபடம் , இந்தப்படத்தின் முதல் பாதி சிரிக்கவும், இரண்டாம் பாதி சிந்திக்கவும் வைக்கும். கூடவே இந்த சமூகத்திற்கு இப்போதைய காலகட்டத்திற்கு அதுவும் அடிக்சனுக்கு ஆளாகியிருக்கும் இந்த சமூகத்திற்கு மிக அவசியமான படமாக வந்திருக்கிறது.
இந்தப்படம் உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் என்று பேசினார்.
நிகழ்வில் பேசிய பா.இரஞ்சித்
குடியால் பல குடும்பங்கள் அழிந்துபோனதை நான் கண்டிருக்கிறேன். இந்த கதையை என்னிடம் தினகர் தரும்பொழுது அதிலிருந்த உண்மைத்தன்மை என்னை வெகுவாக ஆட்கொண்டது.
வசனங்களும், வாழ்வும் , நமக்கு நெருக்கமான ஒரு உணர்வை தந்தது.
தினகர் மிக அருமையாக இயக்கியிருக்கிறார். தொடர்ந்து இந்த தமிழ்சினிமாவில் அவசியமான படங்களை தரவேண்டும் என்பது நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் விருப்பம். இன்னும் நல்ல படங்கள் , பொழுதுபோக்கோடு சமூகக்கருத்துள்ளபடங்கள் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டேயிருப்போம்.
பாட்டல் ராதா உங்களை ரசிக்கவைப்பதோடு உங்களுக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக் இருக்கும் என்றார்.
கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம் - நடிகர் சரத்குமார்
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
பரச்சூரி கோபால கிருஷ்ணா, ஈஸ்வர் ரெட்டி, ஜி.நாகேஸ்வர ரெட்டி, தோட்டா பிரசாத் ஆகியோர் கதை எழுத, விஷ்ணு மஞ்சு திரைக்கதை எழுதியிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். ஸ்டீபன் தேவசி இசையமைக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். பிரபு தேவா மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.
வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஜனவரி 18 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழு கலந்துக்கொண்டு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
நடிகர் விஷ்ணு மஞ்சு பேசுகையில்,
“அனைவருக்கும் வணக்கம், எனக்கு மீடியா முன்பு பேசுவதற்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கும். இது என் முதல் தமிழ் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, பெருமையாக இருக்கிறது, கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான், தமிழ் நன்றாக பேசுவேன். ரொம்ப நாளாக தமிழ் பேசாததால் கொஞ்சம் பிழை இருக்கலாம், மன்னித்துக் கொள்ளுங்கள். 15 வருடங்களுக்கு முன்பு நான் நடிகனாக தொடங்கினேன். அன்று முதல் தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன், இன்று சிவன் அருளால் என் ஆசை நிறைவேறியிருக்கிறது, அதுவும் கண்ணப்பா மூலம் நிறைவேறியது பெருமையாக இருக்கிறது.
15 வருடங்களுக்கு முன்பு இருந்தே சரத்குமார் அங்கிளுடன் படம் பண்ண வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்ட்டு இருந்தேன், இப்போது அது நடந்திருக்கிறது. என் அப்பா மீது உள்ள மரியாதை காரணமாக தான் அவர் நடித்தார். காலையில் 7 மணிக்கு மேக்கப்போடு படப்பிடிப்பில் பங்கேற்போம், என்று அவர் சொன்னார். அந்த நேரத்தை நிர்ணயம் செய்ததே அவர் தான். அவர் நினைத்திருந்தால், அந்த கடும் குளிரில் 9 மணிக்கு வருகிறேன், என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அதை செய்யாமல் 7 மணிக்கு மேக்கப் உடன் படப்பிடிப்பு தளத்தில் வருவார், அவரைப் பார்த்து மற்ற கலைஞர்களும் அதே நேரத்திற்கு, சிலர் அதற்கு முன்பாகவும் வந்துவிடுவார்கள், அவருக்கு என் நன்றி. பிரபு அண்ணா, அவர் என் அப்பாவை அண்ணா என்று அழைப்பார், நான் அவரை அண்ணா என்று அழைக்கிறேன். நான் சிறு வயதில் அவரது வீட்டுக்கு சென்று நடனம் கூட கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது குறைவாக தான் இருக்கும். அவர் நடன இயக்குநராக பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் கேட்டுக்கொண்டதற்காக அவர் எங்கள் படத்தில் பணியாற்றினார். இரண்டு முறை நியூசிலாந்துக்கு அவர் வந்தார், அவருக்கு நன்றி. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும், நான் பிரபு அண்ணா தான் நடனம் அமைக்க வேண்டும், என்று முடிவு செய்தேன் என்று. இயக்குநர் முகேஷ் சார், படம் இயக்குவது இது தான் முதல் முறை. அவர் நிறைய டிவி தொடர்கள் இயக்கியிருக்கிறார். நான் பல முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றியிருக்கிறேன், முகேஷ் சார் உடனான என் உறவு ரொம்பவே ஸ்பெஷல். நான் படம் தொடர்பாக குழப்பமாக இருக்கும் போது, எனக்கு பெரும் உதவியாக இருந்தார். படத்தொகுப்பாளர் ஆண்டனி, ’காக்க காக்க’ படம் பார்த்தது முதல் அவருடைய ரசிகனாகி விட்டேன். அவர் ஒரு வாரத்தில் முழு படத்தையும் எடிட் செய்துவிடுவார், ஆனால் என் படத்தை ஒரு வருடமாக எடிட் செய்துக் கொண்டிருக்கிறார். கேமரா மேன் சித்தார்த், என் சகோதரர். அவர் எனக்காக இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தியை நாங்கள் தான் அறிமுகப்படுத்த இருந்தோம், ஆனால் அதற்கு முன்பாகவே அவர் அறிமுகமாகி விட்டார். அவர் சிறப்பாக நடித்திருக்கிறார், நிச்சயம் பெரிய நடிகையாக வருவார். கண்ணப்பா பற்றி அனைவருக்கும் தெரிந்தது தான், நாங்கள் அதிகம் கஷ்ட்டப்பட்டிருக்கிறோம், அனைவரும் கஷ்ட்டப்பட்டு தான் படம் எடுக்கிறார்கள். கண்ணப்பா ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகிறது. நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும், எங்களுக்கு உங்கள் ஆதரவு வேண்டும். நன்றி.” என்றார்.
இயக்குநர் முகேஷ் குமார் சிங் பேசுகையில்,
“எங்கள் கண்ணப்பா படத்தின் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. மேடையில் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என ‘கண்ணப்பா’ படக்குழுவினர் அனைவரும் கடவுள் சிவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக நான் கடவுள் சிவனால் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். அதனால், தான் என் முதல் படத்திலேயே இந்திய திரையுலகின் முன்னணி கலைஞர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கண்ணப்பா பிரமாண்டமான திரை காவியம் மட்டும் அல்ல தற்போதைய தலைமுறையினர் அறிந்துக் கொள்ள வேண்டிய வரலாறு. நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும். நன்றி.” என்றார்.
படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசுகையில்,
“மோகன் பாபு சார், விஷ்ணு சார் அனைவருக்கும் நன்றி. ‘கண்ணப்பா’ படத்திற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. 100 பேருக்கும் மேற்பட்ட ஒரு பெரும் குழுவை நியூசிலாந்து நாட்டுக்கு அழைத்துச் சென்று இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். நான் ஒரு முறை அங்கு சென்றிருந்த போது, மூன்று கேமராக்கள் வைத்துக்கொண்டு விஷ்ணு சார் சில காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார். மற்றொரு பக்கம் அதேபோல் மூன்று கேமராக்கள் வைத்துக் கொண்டு ஒரு குழு இருந்தது, அது யார்? என்று கேட்டேன், அதுவும் நம்ம படம் தான், மதுபாலா மேடம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது, என்று விஷ்ணு சொன்னார். மற்றொரு பக்கம் மூன்று கேமராக்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள், அங்கு என்ன நடக்கிறது? என்றால், சரத்குமார் சாரின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது, என்றார். இப்படி மிகப்பெரிய குழுவுடன் ஏகப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது, எடிட் செய்வதற்கும் சவாலாக இருக்கிறது. படம் சூப்பராக வந்திருக்கிறது. படத்தொகுப்பு செய்ய உதவிய இணை இயக்குநருக்கு நன்றி. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேசுகையில்,
“பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு இந்த படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த விஷ்ணு சாருக்கு நன்றி. இந்த படத்தின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ஷெல்டன். அமெரிக்க ஒளிப்பதிவாளர் அவர். நான் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக தான் பணியாற்றியிருக்கிறேன். விஷ்ணு சார் என் குடும்ப நபர் போன்றவர், அவர் தான் என்னை தெலுங்கு திரையுலகில் அறிமுகப்படுத்தினார். விஷுவலாக படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. சண்டைக்காட்சிகளும் மிக சிறப்பாக வந்திருக்கிறது. கண்ணப்பாவின் முக்கியமான கதை, அவர் யார்?, அவர் எப்படிப்பட்ட சிவ பக்தர் போன்றவற்றை தாண்டி, படத்தின் மற்ற அம்சங்கள் அனைத்தும் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் வந்திருக்கிறது. விஷ்ணு சாருக்கு என் வாழ்த்துகள். பிரபு மாஸ்டர், சரத்குமார் சார் ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி, நன்றி.” என்றார்.
நாயகி ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில்,
“அனைவருக்கும் வணக்கம், புது வருடத்தில் உங்களை தான் முதல் முறையாக சந்திக்கிறேன், அதுவும் ‘கண்ணப்பா’ போன்ற பிரமாண்டமான படத்திற்காக சந்திப்பது மகிழ்ச்சி. இவ்வளவு பெரிய படத்தில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு கொடுத்ததற்காக நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கிறேன். விஷ்ணு சார், மோகன் பாபு சார், இயக்குநருக்கு நன்றி. இந்த குழு ஒரு குடும்பம் போல் இருந்தது, என்னை ரொம்ப நன்றாக பார்த்துக் கொண்டார்கள். இந்த படம் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் நடிப்பதற்காக தான் திரையுலகிற்கு வந்தேன், ஆனால் இந்த படத்தில் பணியாற்றும் போது, ஒரு காட்சிக்காக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள், ஒரு காட்சியை கூட்டு முயற்சியின் மூலம் எப்படி அழகாக கொண்டு வருகிறார்கள், என்பதை பார்த்து எனக்கு பிலிம் மேக்கிங் மீது ஃபேஷன் வந்துவிட்டது. இந்த படத்தில் கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. உண்மையாகவே படக்குழுவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களது பெரும் முயற்சியினால் படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும். நன்றி.” என்றார்.
நடிகர் சரத்குமார் பேசுகையில்,
பத்திரிகை நண்பர்கள், ஊடக நண்பர்களுக்கு காலை வணக்கம். இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சொல்லலாம். பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இந்த காலக்கட்ட தலைமுறைக்கு சரித்திரம், இதிகாசங்களை நினைவுப்படுத்த வேண்டும், கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம், அதைப் பற்றி நிச்சயம் நாம் மக்களுக்கு சொல்ல வேண்டும், என்று இயக்குநர் சொன்னார். அது தான் இந்த படத்திற்கும், தற்போதைய தலைமுறையினருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். மோகன் பாபு சார், விஷ்ணு இருவருக்கும் வாழ்த்துகள், இந்த படத்தை உருவாக்கியதற்கு. கடுமையாக உழைத்திருக்கிறார்கள், உண்மையாக, நேர்மையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களது உண்மையான உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்க வேண்டும், என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். கண்ணப்பா ஒரு வரிக் கதை தான், கண்ணப்பா யார் என்பது தெரியும், அவர் என்ன செய்தார் என்பது தெரியும். கண்ணப்பா தான் கண் தானத்திற்கு முதலில் வித்திட்டவர், என்று தொகுப்பாளினி சொன்னார்கள், அதுவும் உண்மை தானே. ஆனால் அதை எல்லாம் தாண்டி, கண்ணப்பா கதையை, உண்மை சரித்திரத்தை மிக பிரமாண்டமான முறையில் விஷ்ணு கொடுத்திருக்கிறார். இந்த படத்திற்காக விஷ்ணு நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார். இந்த படத்திற்காக எதை செய்தாலும், அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் என்னை வியக்க வைத்தது. மிகப்பெரிய குழுவை நியூசிலாந்துக்கு அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது சாதாரண விசயம் இல்லை. பொருளாதார ரீதியாகவும், மெனக்கெடல் ரீதியாகவும் சாதாரன விசயம் இல்லை, அதை விஷ்ணு மிக சிறப்பாக செய்திருக்கிறார். அதிகமான குளிர் இருந்தாலும் மேக்கப் போட்டு 7 மணிக்கு அனைவரும் படப்பிடிப்பில் பங்கேற்பது சாதாரண விசயம் இல்லை. சிவன் மீது பக்தி இருக்கிறதோ, இல்லையோ அவரைப் பற்றிய படத்தில் மிகவும் பயபக்தியுடன் ஒட்டுமொத்த படக்குழுவும் பணியாற்றினார்கள்.
என்னை பொறுத்தவரை பிரமாண்டம் ஒரு பக்கம், நடித்தவர்கள் அனைவரும் முன்னணி கலைஞர்கள். அக்ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், மோகன் பாபு சார் என பெரிய பெரிய நட்சத்திரங்கள் இருக்கும் படம். அதே சமயம், பெரிய நட்சத்திரங்களுக்காக எடுக்கப்பட்ட படம் இல்லை, அந்த அந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். இயக்குநர் முகேஷ் குமார் சிங் பிரமாண்டமாக படத்தை எடுத்திருக்கிறார். அவருக்கு இந்தி, ஆங்கிலம் தெரிகிறது, ஆனால் தெலுங்கு திரைப்படத்தை, பான் இந்தியா அளவில் கொண்டு செல்வதற்கான நுணுக்கங்களுடன் இந்த படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். முன்னணி கலைஞர்களுடன் பணியாற்றியது பெருமை என்கிறார், அவருடன் பணியாற்றியதை நானும் பெருமையாக கருதுகிறேன். படத்தொகுப்பாளர் ஆண்டனி, பிரபு தேவா ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ப்ரீத்தி முகுந்தன் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் அழகாக இருக்கிறார், இங்கேயும் அழகாக இருக்கிறார். மோகன் பாபு சார், விஷ்ணு அதிகமாக மெனக்கெட்டிருக்கிறார்கள். பிரபு தேவாவின் நடனக் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. மிக சிறப்பான படம், உணர்வோடு அனைவரும் நடித்திருக்கிறோம். ஏப்ரல் 25 ஆம் தேதி படம் வெளியாகிறது, படத்தை போல் வெற்றியும் பிரமாண்டமாக அமைய வேண்டும், என்று கடவுளை வேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.
பிரபு தேவா பேசுகையில்,
“இந்த படத்திற்காக மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறேன். மோகன் பாபு சார் எனக்கு போன் பண்ணி என்னை வர வேண்டும் என்று சொன்னார். நான் வரணுமா சார், என்றேன், ”நீ வரலனா நான் உன் வீட்டுக்கு வந்துடுவேன்” என்றார். நானே வந்துட்றேன் சார், என்றேன். மூன்று பாடல்களிலும் நடனம் பெரிதாக இருக்காது, ஆனால் எமோஷனல் இருக்கும். அதேபோல் கிளைமாக்ஸ் பாடல் மிகவும் முக்கியமானது, அதில் நீ முக்கியமாக இருக்க வேண்டும், என்று சொன்னார். எனக்கும், கிளைமாக்ஸில் பாடல் என்பது இது தான் முதல் முறை. அதேபோல் அதில் நடனத்தை விட எமோஷனலை கொண்டு வர வேண்டும் என்பது சவலாக இருந்தது, அதனால் பணியாற்றவும் ஆர்வமாகவும் இருந்தது. இயக்குநர் முகேஷ் குமார் சிங் என்றதும், அவர் இந்தி அவருக்கு எப்படி நமது கலாச்சாரம் தெரியும், என்று நான் யோசித்தேன். ஆனால், அவருக்கு சிவனைப் பற்றி நிறைய தெரிந்திருக்கிறது. எங்க அனைவரையும் விட அவருக்கு தான் அதிகம் தெரிந்திருக்கிறது. இந்த படத்தை இயக்குவதற்கு அவர் தான் சரியான நபர், சிறந்த இயக்குநர். அமெரிக்கன் ஒளிப்பதிவாளர் பணியாற்றியிருக்கிறார். அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். விஷ்ணு எனக்கு தம்பி போல, மோகன் பாபு சார் எனக்கு பெரிய அண்ணன். அவருக்கு என் வாழ்த்துகள். படப்பிடிப்பு தளத்தில் விஷ்ணு ஒரு தயாரிப்பாளர் போல் இருக்க மாட்டார், ஒரு உதவி இயக்குநர் போல், புரொடக்ஷன் உதவியாளர் போல தான் இருப்பார். தயாரிப்பாளர் பக்கம் நிற்காமல், தொழில்நுட்ப கலைஞர்கள் பக்கம் இருப்பார், அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தன் நன்றாக நடித்திருக்கிறார், அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் சித்தார்த் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
கண்ணப்பா படத்தை நியூசிலாந்தில் படமாக்க காரணம் என்ன? என்ற பத்திரிகையாளர்கள் கேள்வ
சந்தானத்தின் பிறந்த நாளான இன்று 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை!
சந்தானம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை சந்தானத்தின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது. ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் முதல் பார்வை உள்ளது.
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ஷோ பீப்பிள் நிறுவனங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த், 'டிடி நெக்ஸ்ட் லெவெல்' திரைப்படத்தையும் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த்,
'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு பெரும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ஒரு வருடமாக தொடர்ந்து செய்து முடித்தோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் திரைப்படமாக இதுவும் இருக்கும்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மிக அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைத்தோம். இப்படத்தை தயாரிப்பதற்காக நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை விட அதிக குதூகலத்தையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் வழங்கும்," என்று கூறினார்.
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் ஒளிப்பதிவை தீபக் குமார் பதி கையாள, ஆஃப்ரோ இசையமைக்கிறார். பரத் படத்தொகுப்புக்கும் ஏ ஆர் மோகன் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்றுள்ளனர்.
யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல - இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்
தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' வரும் ஜனவரி 24 ஆம் தேதி, இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என். இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி பேசியதாவது…,
இயக்குநர் அருண் இந்தக்கதையைப் பலமுறை எங்களிடம் சொல்லி, இறுதியாக முடிவு செய்து தயாரித்துள்ளோம். இப்படத்தை உருவாக்கும்போதே இந்தக்கால டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு இருப்பதுடன், குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். ஹரி பாஸ்கர், லாஸ்லியா, ரயான் என எல்லோரும் இளமையானவர்கள். புதிய இளைஞர்கள் எப்போதும் சாதிக்கும் ஆரவத்துடன் இருப்பார்கள், அவர்களுக்கு வாய்ப்பு வரும் போது கண்டிப்பாகப் பன்மடங்கு உழைப்பார்கள் என்பது, என் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது. இயக்குநர் வாசு சாரிடம் இருந்து வந்தவர் அருண், மிக நன்றாகப் படத்தை உருவாக்கியுள்ளார். நிதின் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளோம். படம் நன்றாக வந்துள்ளது, உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் .
தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது…
இந்தப் படக்குழுவினர் மிகத் திறமையானவர்கள். இரண்டு நாட்கள் முன் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய காலகட்டத்தில், சின்னத்திரை, பிக்பாஸ், யூடியூப் மூலம் பல கலைஞர்கள் வந்து அசத்துகிறார்கள். இந்த இளைஞர்களிடம் நல்ல திறமை இருக்கிறது. நண்பர் இளவரசு இந்த படக்குழுவினர் மிகச்சிறப்பாக உழைத்துள்ளதாக என்னிடம் கூறினார். அவர் ஒரு சிறந்த விமர்சகர். படக்குழுவினர் மிகத் தெளிவுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படத்தைத் தயாரித்திருக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கு என் வாழ்த்துகள். இந்த காலத்திற்கு ஏற்ற ஒரு படத்தைத் தந்துள்ளார். கண்டிப்பாக இப்படம் பெரிய வெற்றி பெறும் வாழ்த்துகள்.
பிக்பாஸ் புகழ் ரயான் பேசியதாவது..
இந்த வாய்ப்பை எனக்கு அளித்த முரளி சார், நிதின் சாருக்கு நன்றி. வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிற நேரத்தில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. அருண் நிறையச் சொல்லித் தந்தார். என் கதாபாத்திரத்தை மெருகேற்ற நிறைய உழைத்திருக்கிறேன். இப்படத்தில் நிறையக் கற்றுக்கொண்டேன். லாஸ்லியா உடன் நடித்தது மகிழ்ச்சி. அவரும் பிக்பாஸில் இருந்து வந்தவர். நிறைய அதைப்பற்றிப் பேசினோம். ஷூட் மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள்.
நடிகர் சாரா பேசியதாவது…
என் அப்பா நான் தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தில் நடிக்கிறேன் என்றவுடன் மிகவும் சந்தோசப்பட்டார் அவருக்குப் பிடித்த நிறுவனம் இது. இயக்குநர் அருண் ஹீரோவாக நடிக்கத் தகுதியானவர், நான் வேலை செய்த இயக்குநர்களில் மிகவும் பிடித்தவர். நல்ல ரைட்டர். ஹரிபாஸ்கருடன் நடித்தது மிக ஜாலியாக இருந்தது. சமீபத்தில் மிகவும் ரசித்து நடித்த படம் இது தான். லாஸ்லியாவுடன் எனக்குக் காட்சிகள் இல்லை, மிக நன்றாக நடித்துள்ளார். படம் எல்லோருக்கும் பிடிக்கும். 2 மணி நேரம் எல்லோரையும் சந்தோசப்படுத்தும் படமாக இருக்கும்.
நடிகர் இளவரசு பேசியதாவது…
தேனாண்டாள் பிலிம்ஸ் 100 படம் முடித்து, 101வது படமாக இதனை தயாரித்திருக்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் 100 ஐ கடப்பது அத்தனை சாதாரண விசயமல்ல. இந்தக் கம்பெனியில் வேலை பார்த்தது எனக்குப் பெருமை. ராமநாரயணன் சார் மிகப்பெரிய தயாரிப்பாளராகப் புகழ் பெற்றவர். விஜயகாந்த்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். அப்படியான கம்பெனியில் பி வாசு பள்ளியிலிருந்து வந்த அருண் இப்படத்தை இயக்கியுள்ளார். அவர் எனக்கு அப்பா பாத்திரம் எனச் சொன்னபோது, எனக்கு எல்லாம் அப்பாவாகத்தான் வருகிறது. இதைச்செய்ய வேண்டுமா? எனத் தயங்கினேன். ஆனால் அருண் கதையையே ஷாட் ஆர்டராகத் தான் சொன்னார். அவரிடம் இருந்த தெளிவு எனக்கு பிடித்திருந்தது. இன்றைக்குத் திட்டமிட்டு ஷூட் முடித்தால் அதுவே சாதனை தான். அந்த வகையில் அருண் மிக அருமையாகத் திட்டமிட்டு எடுத்தார். வாசு சார் அந்த வகையில் ஜாம்பவான். அவரிடமிருந்த திறமை இந்த தலைமுறைக்கு வரவேண்டும். இந்தப்படத்தில் ஹரிபாஸ்கர் நாயகன் அவர் ஒரு யூடுபர் ஆனால், படத்தில் நடிக்க கேமராவை அணுகி நடிப்பதில், திறமை வேண்டும். முதல் நாளிலேயே ஹரிபாஸ்கர் வெகு இயல்பாக நடித்தார். களவாணியில் விமலிடம் நான் பார்த்த திறமையை ஹரிபாஸ்கரிடம் பார்த்தேன் அவருக்கு வாழ்த்துகள். தமிழ் பேசத்தெரிந்த மேற்கத்திய அழகி லாஸ்லியா. நல்ல கதாப்பாத்திரம் நன்றாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட் ரொம்ப சின்னப்பையன் அருமையான பாடல்கள் தந்துள்ளார். கேமராமேன் மிக அருமையாகச் செய்துள்ளார். இந்தப்படம் எல்லோருக்கும் பெரிய திருப்பத்தைத் தர வேண்டும் வாழ்த்துகள்.
இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட் பேசியதாவது…
எனக்கு இந்தப்படத்தில் 6 பாடல்கள். பாட்டே இல்லாமல் படம் வரும் காலத்தில், எனக்கு இந்தப்பட வாய்ப்பை தந்து, என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அருண் மிகச் சுறுசுறுப்பானவர். அவர் தந்த ஆதரவிற்கு நன்றி. லாஸ்லியா என் முதல் ஆல்பத்தில் நடித்திருந்தார் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கேட்ட அனைத்தையும் தந்து, முழு ஆதரவு தந்த நிதின் சார், முரளி சாருக்கு நன்றி. ஹரி பாஸ்கர் யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல, அவர் இந்த இடத்திற்கு வர நிறையக் கஷ்டப்பட்டுள்ளார். அவர் இந்தப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். அவர் என் நண்பர். படம் செய்ய வேண்டுமென்பது எங்கள் கனவு. அது இப்படத்தில் நிறைவேறியுள்ளது. அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் பேசியதாவது…
இது என் முதல் மேடை, 12 வது படிக்கும் போது பாலா சாரின் தாரை தப்பட்டை ஷூட்டிங் நடந்தது. அதை வேடிக்கை பார்த்தபோது அங்கு அவ்ளோ பேர் கூடியிருந்தார்கள். வெற்றியைத் தாண்டி, அந்த கூட்டமே தனியாகத் தெரிந்தது. அன்று என்னிடம் இருந்த கோனார் தமிழ் உரையில் எழுத்து இயக்கம் என என் பெயரை எழுதினேன். 10 வருடத்தில் இந்த இடத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி. வாசு சாரின் கோ டைரக்டர் சுகுமார் அண்ணன் ஒரு ஷூட்டிங்கில் எனக்கு அறிமுகமானார். அவர் மூலம் தான் இதெல்லாம் நடந்தது. அவர் தான் வாசு சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவரிடம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். முரளி சாரிடம் இந்தக்கதை சொன்ன போது அவர் ரியாக்ட் செய்யவே இல்லை சைலண்டாகவே இருந்தார். எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் இந்தப்படத்தை நாம் செய்யலாம் என்றார். இவ்வளவு பெரிய வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி. நிதின் சாரை முதன் முதலில் வீடியோ காலில் தான் பார்த்தேன். கதை அவருக்கும் பிடித்திருந்தது. இந்தப்படம் செய்ய எனக்கு சப்போர்ட் தேவைப்பட்டது. சுகுமார் அண்ணாவிடம் கேட்டேன் அவர் முழுமையாக வந்து வேலை பார்த்துத் தந்தார். லாஸ்லியா இன்ஸ்டா போஸ்ட் பார்த்துத் தான் இந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என அவரைத் தேர்ந்தெடுத்தோம். மிக நன்றாக நடித்துள்ளார். இளவரசு சார் இந்தப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். அவருடன் வேலை பார்த்தது பெருமை. இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப்படத்தின் ரீரெக்கார்டிங் வந்த பிறகு கண்டிப்பாக இசையமைப்பாளர் பெரிய ஹீரோ படத்தில் வேலை செய்வார். ஹரி பாஸ்கர் என் நண்பர் அவர் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். வரும் 24 ஆம் தேதி படம் வருகிறது அனைவரும் படம் பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் .
நடிகை லாஸ்லியா பேசியதாவது…
இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த முரளி சார், நிதின் சாருக்கு நன்றி. இப்படி ஒரு கதாப்பாத்திரம் தந்த அருணுக்கு நன்றி. ஒஷா 6 நல்ல பாடல்கள் தந்துள்ளார். அவரை வாழ்த்துங்கள். ரயான் பிக்பாஸ் முடிந்து வந்துள்ளார். அவருக்கு இன்னும் நிறையப் படங்கள் கிடைக்க வாழ்த்துகள். இளவரசு சார், சாரா போன்ற நடிகர்கள் நடிக்கும் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. ஹரியும் இயக்குநரும் பயங்கர குளோஸ், என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். ஹரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வரும் 24 ஆம் தேதி படம் வருகிறது அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் ஹரிபாஸ்கர் பேசியதாவது…,
இந்த திரைப்படம் மிக அற்புதமான பயணம், எங்கிருந்து ஆரம்பித்தது என்று நினைத்தால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. கனவு பலித்த தருணமாக உள்ளது. வரும் 24 ஆம் தேதி படம் வருகிறது. என்னை அறிமுகப்படுத்தும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி சாருக்கு வாழ்த்துகள். முரளி சார் அறிமுகமானதிலிருந்து, 1 வருடமாக தொடர்ந்து ஃபாலோ செய்தேன். அருணும் நானும் நண்பர்கள், அவர் சொன்ன லைனை முரளி சாரிடம் சொன்னோம். அவருக்குப் பிடித்திருந்தது. நிதின் சாரும் எங்களுடன் இணைந்து பயணித்தார். அவர் டெக்னிகலாக எல்லாவற்றையும் பிரித்து அலசி விடுவார். அவரிடம் அடுத்துச் சிக்கும் இயக்குநர் தான் பாவம். எல்லோரும் இணைந்து அர்ப்பணிப்போடு இப்படத்தை எடுத்துள்ளோம். லாஸ்லியா ஃபர்ஸ்ட் இரண்டு நாள் அமைதியாக இருந்தார் ஆனால் இரண்டாவது நாளிலிருந்து செம்ம கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார். மிக அருமையாக நடித்துள்ளார். சாரா அண்ணன் யூடுப்பில் கலக்கிவிட்டு இப்போது சினிமாவில் கலக்குகிறார். அவர் என் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. இளவரசு ஒரு லெஜெண்ட், அவர் எங்களுக்கு காட்ஃபாதர் மாதிரி, அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. அருண் என் நண்பர் எல்லாவற்றையும் மிகத் தெளிவாக அணுகுவார், சுகுமார் அண்ணன், இப்படத்தை மிகச் சரியாகத் திட்டமிட்டது அவர் தான். அவருக்கு நன்றி. கேமரா மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். ஒஷா அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். படத்தில் உழைத்த அத்தனை பேரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் வாசு பேசியதாவது..
அருண் என் உதவியாளர், அவர் படம் செய்கிறேன் என்றவுடன் யார் புரோடியூசர் எனது கேட்டேன், தேனாண்டாள் பிலிம்ஸ் என்றார். அந்தக்கம்பெனியில் படம் செய்வது பெரிய விசயம், இதுவே பெரிய வெற்றி என்றேன். தேனாண்டாள் பிலிம்ஸ் இராம நாராயணன் மிகப்பெரிய ஆளுமை, அவரிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். ரஜினி, விஜயகாந்த் எல்லாம் அவரைப்பற்றி அவ்வளவு சொல்வார்கள். அவரின் மகன் தான் முரளி. அப்படிப்பட்ட கம்பெனியில் அருண் படம் செய்வது மகிழ்ச்சி. நான் பாடல்கள் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது, இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் கமர்ஷியல் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பல வருடம் கழித்து வந்த மதகஜராஜா ஜெயித்துள்ளது. நடிகர் விஜய் என்னுடைய நடிகன் படம் நடிக்க ஆசைப்பட்டார். அது மிகச்சிறந்த கமர்ஷியல் படம். ஆனால் கவுண்டமணி, மனோரமா இல்லாமல் இப்போது அந்தப்படத்தை எடுக்க முடியாது. இந்தப்படத்திற்கு வருவோம். லாஸ்லியா தமிழ் பேசும் நடிகை, அவர் இன்னும் உயரம் தொட வாழ்த்துகள். ரயானிடம் நல்ல திறமை உள்ளது. ஹரி பாஸ்கருக்கு வாழ்த்துகள். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
தயாரிப்பாளர் நிதின் பேசியதாவது…
ஒரு அருமையான படத்தில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி. இங்குள்ள இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. எதிர்கால ஏ ஆர் ரஹ்மான், ரஜினி, நயன்தாரா எல்லோரும் உள்ளனர். எல்லோருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. படம் பார்த்து, அனைவரும் ஆதரவு தாருங்கள்.
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர், இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இளம் நடிகையாக இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த லாஸ்லியா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க ரசிகர்களைச் சிரிக்க வைக்கும்படியான கதைக்களத்தில், கலக்கலான கமர்ஷியல் படமாக, அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படத்துக்கு விருது!
திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படமான 'கைக்குட்டை ராணி' 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைபப்ட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது.
டி ஃபிலிம்ஸ் பேனரில் தேவயானி தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள 'கைக்குட்டை ராணி' திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எடிட்டர் பி. லெனின் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவையும், லட்சுமி நாராயாணன் ஏ.எஸ். ஒலி வடிவமைப்பையும் கையாண்டுள்ளனர்.
சுமார் இருபது நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை திரையில் சொல்கிறது. தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியுள்ளது.
'கைக்குட்டை ராணி' குறும்படத்தை பார்த்த 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நடுவர் குழுவினர் குழந்தைகளுக்கான சிறந்த குறும்படத்திற்கான விருதுக்கு இதை தேர்ந்தெடுத்திருப்பதோடு தேவயானி மற்றும் குழுவினரை வெகுவாக பாராட்டினர்.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தேவயானி, "எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்த போதிலும், முதன்முறையாக நான் இயக்கிய குறும்படம் சர்வதேச அளவில் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சையையும் பெருமையையும் அளிக்கிறது. இதில் பங்காற்றியுள்ள மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இதர சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்," என்றார்.
'கைக்குட்டை ராணி' குறும்படத்தில் நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன் என் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சவுண்ட் எஃபெக்ட்ஸ் வடிவமைப்பு: சி., சேது, டிஐ கலரிஸ்ட்: ஆன்டனி பேபின் ஏ. திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்லும் பணியை உலக சினிமா பாஸ்கரன் ஏற்றுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவு, உற்சாகத்தில் 'நிறம் மாறும் உலகில்' படக்குழுவினர்!
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகி வரும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர் , விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், 'ஆடுகளம்' நரேன், மைம் கோபி , வடிவுக்கரசி , விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், கனிகா, ஆதிரா, காவ்யா அறிவுமணி ,துளசி, ஐரா கிருஷ்ணன் , லிசி ஆண்டனி, நமோ நாராயணன் , சுரேஷ் சக்கரவர்த்தி , ஏகன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மல்லிகா அர்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் -தினேஷ் - சுபேந்தர் -ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் ஏற்றிருக்கிறார். ஹைபர் லிங்க் பாணியிலான இந்த திரைப்படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
நான்கு விதமான வாழ்க்கை - நான்கு கதைகள் - அதை இணைக்கும் ஒரு புள்ளி - என நம் வாழ்வில் உறவுகளின் அவசியத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. மும்பை - வேளாங்கண்ணி - சென்னை- திருத்தணி - என நான்கு வெவ்வேறு களங்களில் இப்படத்தின் கதை நடைபெறுகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது என பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளனர். இந்த காணொளி மூலம் படத்தின் தரம் சர்வதேச அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது என்றும், விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தனித்துவமான கதை சொல்லும் பாணியில் உருவாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் படைப்பில் பாரதிராஜா -நட்டி -ரியோ ராஜ் -சாண்டி மாஸ்டர்- ஆகிய திறமைசாலிகள் ஒன்றிணைந்திருப்பதால் .. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
சிறு இடைவேளைக்குப் பிறகு, முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம் நடிக்கும் 'சூக்ஷ்மதர்ஷினி'
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த "சூக்ஷ்மதர்ஷினி" எனும் அட்டகாசமான ஃபேமிலி டிராமா திரில்லரை, கடந்த ஜனவரி 11 முதல் ஸ்ட்ரீம் செய்து வருகிறது. நஸ்ரியா நடிப்பில், இந்த மிஸ்டரி த்ரில்லர் திரைப்படத்தினை, அதுல் ராமச்சந்திரன் மற்றும் லிபின் டி.பி. எழுத்தில், எம்.சி. ஜித்தின் இயக்கத்தில், ஹாப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஏவிஏ புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம், சிறு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இப்படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்றுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. பாசில் ஜோசப், அகிலா பார்கவன், மெரின் பிலிப், பூஜா மோகன்ராஜ், சித்தார்த் பரதன், தீபக் பரம்போல், மனோஹரி ஜாய், அபிராம் ராதாகிருஷ்ணன், ஜனனி ராம் (டயானாவாக), ஹெஸ்ஸா மேஹக் மற்றும் சரஸ்வதி மேனன் உட்பட ஒரு பெரும் நட்சத்திரம் கூட்டம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
கிறிஸ்டோ சேவியரின் இசையில், சமன் சாக்கோவின் படத்தொகுப்பில், சூக்ஷ்மதர்ஷினி ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்த பரபரப்பான ஃபேமிலி டிராமா திரில்லரைத் தவறவிடாதீர்கள். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் சூக்ஷ்மதர்ஷினி பார்த்துக் கொண்டாடுங்கள் !
முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'!
மீனாக்ஷி அம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் தயாள்.N இயக்கத்தில், குழந்தை நட்சத்திரங்களுடன்,யோகிபாபு மற்றும் செந்தில் இணைந்து நடிக்க, கலக்கலான பொலிடிகல் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் "குழந்தைகள் முன்னேற்றக் கழகம்". இப்படம் வரும் 2025 ஜனவரி 24 ஆம் தேதி, உலகமெங்கும் திரைக்கு வருகிறது.
சமீபத்தில் மறைந்த, சகுனி படப்புகழ் இயக்குநர் ஷங்கர் தயாள் . N குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, செந்தில் மற்றும் யோகிபாபு நடிப்பில், இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இப்படம் திரைக்கு கொண்டுவரப்படுகிறது.
திரையுலகில் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து இதுவரை உருவான படங்கள் யாவும், பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்லும் படமாகவும், ஃபேன்டஸி, காமெடி, ஹாரர் என பொதுவான ஜானரில் மட்டுமே வந்துள்ளது. முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் பார்வையைச் சொல்லும் பொலிடிகல் காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
நீ என்னவாக ஆசைப்படுகிறாய் எனும் கேள்விக்கு, அரசியல்வாதியாக ஆசைப்படுகிறேன் எனும் ஒரு பள்ளி மாணவனின் பதிலும், அதைத்தொடர்ந்த நிகழ்வுகளும் தான் இப்படத்தின் மையம். குழந்தைகளின் உலகின் வழியே, அரசியலை அணுகும் இப்படம், ஒரு மாறுபட்ட அனுபவம் தரும் படைப்பாக இருக்கும்.
இப்படத்தின் முதன்மை பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்களான, இமயவர்மன் மற்றும் இயக்குநர் ஷங்கர் தயாள் அவர்களின் மகன் அத்வைத், ‘அன்டே சுந்தரனிகி’ படப்புகழ் ஹரிகா படேடா, மாஸ்டர் பவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் படத்தின் திருப்புமுனை பாத்திரத்தில் செந்தில் மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர். முக்கிய பாத்திரங்களில் பருத்திவீரன் சரவணன், சுப்பு பஞ்சு, லிஸி ஆண்டனி, பிராங்க்ஸ்டர் ராகுல், அர்ஜுனன், பிச்சைக்காரன் படப்புகழ் இயக்குநர் மூர்த்தி, சித்ரா லக்ஷ்மன், மயில்சாமி, வையாபுரி, கம்பம் மீனா, கும்கி அஸ்வின், அஷ்மிதா சிங், வைகா ரோஸ், சோனியா போஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
மீனாக்ஷி அம்மன் மூவிஸ் சார்பில் அருண்குமார் சம்பந்தம் மற்றும் இயக்குநர் ஷங்கர் தயாள் .N பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் நடத்தி முடிக்கப்பட்டது.
பண்டிகைக் கொண்டாட்டமாக இப்படம் வரும் 2025 ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்
'கள்ள நோட்டு 'படத்தின் நாயகனாக எம்.ஜி .ராயன், நாயகியாக மது,வில்லன்களாக குமார், மிப்புசாமி, வில்லியாக சுமதி, நாயகனின் நண்பனாக நா. ரஞ்சித்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் N.ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப் படத்தினை எம்.ஜி. ராயன் எழுதி இயக்கியுள்ளார். சம்பத்குமார் ஏ ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்து கொடப்பா படத்தொகுப்பு செய்துள்ளார் .எம் ஜி ரா ஃபிலிம் பேக்டரி சார்பில் எம்.ஜி .ராஜேந்திரன் தயாரித்துள்ளார்.
வறுமையால் துரத்தப்பட்டவர்கள், பணத்தாசை பிடித்தவர்கள் இருவருமே கள்ள நோட்டு என்ற கறுப்புச் சகதிக்குள் சிக்கிக் கொள்வதுண்டு.அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதுண்டு. அப்படிச் சிக்கிக் கொண்ட ஒருவனின் கதை தான் கள்ள நோட்டு என்கிற திரைப்படம்.
கள்ள நோட்டு படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் திரைப்படத்தினை இயக்கி உள்ள எம் ஜி. ராயன் பேசும்போது,
"கள்ள நோட்டு பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இது நிச்சயமாக வித்தியாசமான கதைக்களம் என்று நம்புகிறேன்.
இதில் கள்ள நோட்டு என்பதை விட நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு என்கிற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் படம் பாருங்கள் புரியும்.இதில் நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை, ஆனால் நாட்டு நடப்பைக் காட்டி இருக்கிறோம். சர்ச்சைகள் எதுவும் எழுப்பவில்லை, ஆனால் உண்மையைக் கூறியிருக்கிறோம் "என்றார்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடத்துள்ள நடிகை சுமதி பேசும் போது,
'நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் .எனக்கு மறக்க முடியாத ஒரு படம் கள்ள நோட்டு. இதில ஒரு கதாநாயகிக்குரிய முக்கியத்துவத்தோடு என் பாத்திரம் அமைந்துள்ளது.
இயக்குநர் தனக்குத் திருப்தியான வகையில் காட்சிகள் வரும் வரை மீண்டும் மீண்டும் எடுத்தார்.ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து இந்தப் படத்தை செதுக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் வசனம் பேசப்படும். இந்த படத்தில் நான் கருங்காலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.அது ஒரு கொடூரமான பாத்திரம். நடித்து முடித்து விட்டுப் பார்த்தபோது எனக்கே பயமாக இருந்தது . படத்தில் நான் சுருட்டு பிடித்து நடித்துள்ளேன் .அதற்காக நான் சிகரெட் பிடித்துப் பழகினேன்.அப்போது புகை மூக்கில் ஏறி ரொம்பவும் சிரமப்பட்டேன். ஆனால் அந்தக் கதாபாத்திரத்திற்காக நடித்துள்ளேன். படத்தை திரையரங்கு சென்று அனைவரும் பார்க்க வேண்டும்" என்றார்.
விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கல்லூரூம்..' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன்- பார்ட் 2' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி.கே. பிரசன்னா கவனிக்க, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ' கல்லூரூம்..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன் மற்றும் பின்னணி பாடகர் ஹரிசரண் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக உருவாகி இருக்கும் இந்த பாடலுக்கு இசை ரசிகர்களிடத்தில் ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா