சற்று முன்

‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |    துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு   |    சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!   |    “டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்   |    “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு   |    கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்   |    ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!   |    அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!   |    திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!   |    மணல் கொள்ளையை மையமாகக் கொண்ட சமூகப் படம் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் வெளியீடு!   |    வெற்றிமாறன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்ட ராதிகாவின் “காலனி” ஃபர்ஸ்ட் லுக்!   |    கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் 'தீயோர் கூடம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ டீசர், காதல் உணர்வுகளை நெகிழச் செய்யும் கம்பேக் முயற்சி!   |    பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'   |    இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

ஜோதிகா -இயக்குனர் ராதா மோகன் கூட்டணியில் காற்றின் மொழி
Updated on : 23 August 2018

36 வயதினிலே ,மகளீர் மட்டும் , நாச்சியார்   படங்கள் மூலம் ஹாட்ரிக்  அடித்த  ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்ச்சியில்  'துமாரி சுலு' என்ற  சூப்பர் ஹிட் இந்தி  படத்தின் தமிழ்  ரீமேக்கான "காற்றின் மொழி "படத்தில் நடித்து வருகிறார். இப்படம்  அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது .மொழி படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட அதே இயக்குனர் ராதா மோகன் மற்றும் ஜோதிகா கூட்டணி  காற்றின் மொழி-யில் மீண்டும் இணைந்து  களமிறங்கியுள்ளனர் .அதுவே இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . விதார்த் ஜோதிகாவின் கணவனாக நடிக்கிறார் .



மொழியில் ஊமையாக கண்களாலும் செய்கையாலும் நடித்து அசத்திய ஜோதிகா "காற்றின் மொழி"யில் அதற்கு நேர் மாறான  வாயாடி ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,  தமிழ் கலாச்சாரத்துக்கு  ஏற்றவாறு திரைக்கதை அமைத்து புதிதாக சில கதாபாத்திரங்களையும் சேர்த்து புதுமையான  பல  விஷயங்களோடு   இப்படத்தை   இயக்கியுள்ளார்,ராதா மோகன் .பெண்ணை மையப்படுத்திய படம் என்றாலும் ,அனைத்து தரப்பினரையும் கவரும் விதமான  ஜாலியாக குடும்பத்துடன் மனம் விட்டு சிரித்து மகிழக்கூடிய படமாக இருக்கும் காற்றின் மொழி  என்றார் ராதா மோகன் . 



விதார்த் கூறுகையில் " ஜோதிகாவின் கணவராக நான் இதில் நடிக்கிறேன் .கணவன் மனைவிக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை .இது மாதிரியான கதாபாத்திரத்தில் இதுவரை நான் நடித்ததில்லை. அழகான ,அன்பான கணவராக நடித்துள்ளேன்.   விதார்த் நல்ல நடிகன்   என்று இந்த குடும்பப்பாங்கான கதை  எனக்கு  மீண்டும் ஒரு அடயாளத்தை கண்டிப்பாக  கொடுக்கும். " 



லட்சுமி மஞ்சு மற்றுமொரு  முக்கிய கதாபாத்திரமாக நடிக்க, சிம்பு "காற்றின் மொழி"யில் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார் . குமாரவேல் , பாஸ்கர் ,மனோபாலா ,மோகன் ராமன் ,உமா பத்மநாபன்  மற்றும்  பலர் நடித்துள்ளனர் .மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவை செய்து  A.H. காஷிஃப் இசையமைதுள்ளார் . பாப்ட்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (BOFTA MEDIA WORKS INDIA PVT. LTD.,) க்காக G.தனஞ்ஜயன் , S.விக்ரம் குமார், மற்றும் லலிதா  தனஞ்ஜயன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா