சற்று முன்

15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |   

சினிமா செய்திகள்

இயக்குனர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் My Karma App என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிற
Updated on : 10 December 2018

இயக்குனர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் My Karma App என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறா. அதனை பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சுரேஷ் சந்திர மேனன் கலந்து கொண்டு ஆப்பை அறிமுகப்படுத்தி, விளக்கினார். 



அவர் பேசும்போது, "என்னை ஒரு ஒளிப்பதிவாளராக, இயக்குனராக, நடிகராக  பார்த்திருப்பீர்கள். 40 வருடமாக இந்த துறையில் இருந்து வருகிறேன். சினிமா இயக்கியிருக்கிறேன், டிவி சீரியல்கள், பல்வேறு டாகுமெண்டரிகள் எடுத்திருக்கிறேன். தற்போது லூசிஃபர், அடங்க மறு, காளிதாஸ், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். 



நடிப்பதை தாண்டி பல்வேறு சமூக வளர்ச்சி திட்டங்களை செய்ல்படுத்துவதில் ஆர்வம் உண்டு. மக்கள் பயன்பெறும் நிறைய திட்டங்களை வடிவமைத்து தந்திருக்கிறேன். கண்டெய்னர் மூலம் பெண்களுக்கு கழிப்பிடம் கட்டி கொடுத்திருக்கிறேன். சென்னை காவல்துறைக்கு பல ட்ராஃபிக் கண்ட்ரோல் ஐடியாக்கள் செய்து கொடுத்திருக்கிறேன். ஒரு குடிமகனாக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன். 



மை கர்மா ஆப்பை உருவாக்க முக்கிய காரணம் இந்த தலைமுறைக்கு பொது அறிவை பற்றிய புரிதலோ, ஈடுபாடோ இல்லை. அவர்களை ஈர்க்க மொபைலில் இந்த மாதிரி ஒரு ஆப் உருவாக்க நினைத்தேன். முழுக்க முழுக்க இது மொபைல் யுகம். ஆப் தான் எதிர்காலம். அதனால் தான் இதை தேர்ந்தெடுத்தேன். இதில் எனக்கும் பயனாளிக்கும் மட்டுமே நேரடி தொடர்பு. நடுவில் எந்த ஏஜண்டும் கிடையாது. மக்கள் டிஜிட்டல் மணியை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மொபைலை மட்டுமே உலகம் என நினைத்திருக்கிறார்கள். கர்மா என்பது தேசிய அளவில் தெரிந்த ஒரு வார்த்தை. அதனால் இந்த அப்ளிகேஷனுக்கு அந்த பெயரை வைத்திருக்கிறோம்.



இந்த க்விஸ் விளையாட்டில் கேள்விக்கு 4 சாய்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இதை விளையாடுவதன் மூலம் தெரியாத விஷயங்களை கூட தெரிந்து கொள்ளலாம். Learn, Earn, Return என்பது தான் இந்த ஆப்பின் டேக்லைன். இரவு 7 முதல் 9 மணி வரை தினமும் இந்த விளையாட்டை விளையாடலாம்.



இதில் விளையாடி பொது அறிவை வளர்க்கலாம், பணம் சம்பாதிக்கலாம், பொது சேவை செய்யும் NGO அமைப்புகளுக்கு நீங்கள் உதவலாம். முதல் கட்டமாக அருணோதயா சேவை  அமைப்புக்கு நாங்கள் உதவியிருக்கிறோம்.



90% கேள்விகள் இந்தியாவை பற்றியது தான். இதுவரை 4000 பேர் இந்த ஆப்பை டவுன்லோடு செய்திருக்கிறார்கள். ஒரு சில நண்பர்களின் பொருளாதார பங்களிப்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம். ஒரு சில இளைஞர்கள் என்னுடன் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறோம்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா