சற்று முன்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |   

சினிமா செய்திகள்

யோகிபாபு நடிக்கும் 'தர்ம பிரபு' படத்திற்காக ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு
Updated on : 11 December 2018

ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்ட படப்பிடிப்பு தளம்



யோகிபாபு  நடிப்பில் இயக்குநர் முத்துகுமரன்  இயக்கத்தில் P. ரங்கநாதன் தயாரிக்கும் படம் 'தர்மபிரபு'.



எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படம். தற்போது, இப்படத்திற்காக AVM ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது.

சுமார் 1 ½ லட்சம் வருடங்கள் பழமையான எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும், சொர்க்கம் மற்றும் நரகம் என்று தனித்தனியாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்படவுள்ளது.



மேலும், இந்த தளம் அமைப்பதற்கு கலை இயக்குநர் பாலசந்தர் தலைமையில் ஏறக்குறைய 200 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமால் உழைத்து வருகிறார்கள்.



வருகிற டிசம்பர் 14ம் தேதி  இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், மகன் எமனாக யோகிபாபு நடிக்க, அவருக்கு அப்பா எமனாக ராதாரவி நடிக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், 'போஸ்' வெங்கட், சோனியா போஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.



இப்படத்தில் ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு நடனமாடுகிறார்.  அதற்காக பிரம்மாண்ட தளம் அமைக்கப்படுகிறது. மேலும், அவருக்கென்று பிரத்யேகமான உடைகளும், ஆபரணங்களும் தயாராகி வருகிறது.



ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத்தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்குநர் – பாலசந்தர், பாடல்கள் – யுகபாரதி, இசை – ஜஸ்டின் பிரபாகரன், தயாரிப்பு – P. ரங்கநாதன், தயாரிப்பு மேற்பார்வை - ராஜா செந்தில். இயக்கம் – முத்துகுமரன்.  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா