சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

கனா எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது - தினேஷ் கிருஷ்ணன்
Updated on : 14 December 2018

ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் பல்வேறு வகையான படங்களை எடுத்து ரசிகர்களை மிரள வைத்தாலும், அதில் மிகப்பெரிய பாராட்டு ஒளிப்பதிவாளர்களையே சாரும். குறிப்பாக, தினேஷ் கிருஷ்ணன் போன்ற ஒரு மாயாஜால வித்தைக்காரர், பல்வேறு வகை திரைப்படங்களில் வெவ்வேறு வகையிலான வண்ணங்களை சிறப்பாக கையாண்டு, தன் தனித்துவமான திறன்களை நிரூபித்தவர், கனா எனக்கு  மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று கூறுகிறார். குறிப்பாக, கனாவின் காட்சி விளம்பரங்களில் கேமரா கோணங்கள் மற்றும் டோன்களின் மாறுபாடுகளை பார்க்கலாம். இந்த படத்தின் கதையே இரண்டு வெவ்வேறு பின்னணிகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று கிராமப்புற பின்னணி, மற்றொரு கிரிக்கெட் மைதானம் இவை இரண்டுமே ஒளிப்பதிவாளருக்கு வேலைப்பளுவை அதிகமாக்கியிருக்கிறது. கிரிக்கெட் ஸ்டேடிய காட்சிகள் தொழில்முறை கேமரா குழுவினர் உதவியுடன் மல்ட்டி கேமரா செட் அப் மூலம் படமாக்கப்பட்டது. கிரிக்கெட் பந்தின் சின்ன அசைவுகளை கூட மிக துல்லியமாக படம் பிடித்திருக்கிறது. ஆனாலும், தினேஷ் கிருஷ்ணனுக்கு இது ஒரு இரட்டை சுமையாக இருந்தது.



ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் கூறும்போது, "இந்த பெருமை எல்லாம் அருண்ராஜா காமராஜ், அவரது உதவி இயக்குனர்கள் மற்றும் ஸ்டோரிபோர்டு கலைஞர்களையே சாரும். படப்பிடிப்பின் சவால்களையும் அழுத்தங்களையும் நான் உணரும் முன்பே, அவர்கள் என்னென்ன  படம்பிடிக்க வேண்டும், எது தேவை என்பதை தெளிவாக்கி உதவினார்கள். இது கிரிக்கெட் போட்டிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.



கானா ஒரு எமோஷனல் திரைப்படம் மட்டுமல்ல, ஏராளமான துணிச்சலான தருணங்களும் உள்ளன. வழக்கமாக, உணர்வுப்பூர்வமான காட்சிகள் க்ளோஸ் அப் ஷாட்களை கோரும். மிக வேகமாக நடக்கும் கிரிக்கெட் போட்டிகளிடையே  உணர்வுகளை படம் பிடிக்க, சமநிலையை பேண கஷ்டமாக இருந்தது. மேலும், சத்யராஜ் சார், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற பிரம்மாண்டமான, சிறந்த நடிகர்கள் நடிக்கும்போது, எனது பொறுப்பு அதிகமானது.  இருப்பினும், ஒரு திறமையான குழுவின் முயற்சியாலும், ஒரு தெளிவான நுண்ணறிவாலும் எங்கள் வேலை எளிதானது. 



எனது கருத்துக்களுக்கு முழுமையாக மதிப்பளித்து, வேண்டியதை செய்து கொடுத்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. அவர் எதற்க தயங்கவே இல்லை. அவரது ஒரே நோக்கம் நல்ல தரமான படத்தினை வழங்குவது தான். அதனால் செலவழிக்க ஆர்வமாக இருந்தார். நான் எப்போதும் அவரது தோற்றத்தை திரையில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது புதிய தோற்றத்தை ரசித்துக் கொண்டே இருக்கலாம். 



சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்து, அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள கனா, வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா