சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலி தயாரிக்கும் தயாரிப்பு எண் 2
Updated on : 17 December 2018

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்கள் தற்போது மீண்டும் கைகோர்த்திருக்கிறார்கள், அதனால் சினிமா ரசிகர்கள் மிகவும்  உற்சாகமடைந்திருக்கிறார்கள். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புதிய படத்தின் படப்படப்பிடிப்பு டிசம்பர் 14, 2018 காலை தேனியில் துவங்கியது. YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படத்துக்கு 'தயாரிப்பு எண் 2' என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் முதன்முறையாக இணைந்து இந்த படத்துக்கு இசையமைப்பது மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும். 



"நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதையும் தாண்டி, மொத்த படமும் எப்படி இருக்கும் என்பது எனக்கு இப்போதே என்  கண்முன்னால் தெரிவதால், மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். பத்மவிபூசன் இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் ஒரே படத்தில் இணைந்து இசையமைப்பது இதுவே முதல் முறை, அதுவும் அது என் படத்தில் நடப்பது  எனக்கு கிடைத்த பாக்கியம். மேலும் விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இணைவது மிகவும் சிறப்பான விஷயம். குறிப்பாக, இந்த கூட்டணி தர்மதுரை மற்றும் தென்மேற்கு பருவக்காற்று போன்ற அரிய பொக்கிஷங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். YSR ஃபிலிம்ஸ் முதல் தயாரிப்பான ப்யார் பிரேமா காதல் கடந்த ஆண்டு இதே நாளில் தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது" என்கிறார் தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக்.



YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்தில் காயத்ரி நாயகியாக நடிக்கிறார். 



தர்மதுரை படத்துக்கு பிறகு சீனு ராமசாமி-விஜய் சேதுபதி-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியுடன் மீண்டும் இணைகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். 



மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா