சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

அடங்க மறு படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும்- ரூபன்
Updated on : 17 December 2018

ஒரு ஒளிப்பதிவாளர் தான் ஒரு திரைப்படத்தின் முதல் பார்வையாளர்  என்று பொதுவாக கூறப்படுவதுபோல், ஒரு எடிட்டர் தான் முழுமையான விமர்சகர் ஆவார். 'எடிட்டிங்' புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி, தொலைதூரத்தில் இருந்த ஒரு துறையாக இருந்த போதிலும், அந்த இடைவெளியை இவர் மறைத்து விட்டார். ஆம், ரூபன் வெறுமனே எடிட்டிங் ட்ரான்சிஸன்ஸ் மட்டும் கவனம் செலுத்துவதற்கு மாறாக, ரசிகர்களின் துடிப்புகளை அறிந்து வைத்திருக்கிறார். ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட  திட்டமிடப்பட்டுள்ள அடங்க மறு படத்தில் ஈடுபாட்டுடன் இருக்கிறார். 



படத்தை பற்றி அவர் கூறும்போது, "அடங்க மறு' படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும். வழக்கமாக, ஒரு படத்தின் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள், எடிட்டிங் டேபிளை அடையும் போது, காட்சியிம் உண்மையான உணர்வை கொடுக்க, பல கட்ட செயல்கள் தேவைப்படும். ஆனால், அடங்க மறு படத்தில் எடிட்டிங்கின் ஆரம்ப கட்டத்திலேயே அதன் முழு உணர்வையும் கொடுத்தது. என் மனதில் தோன்றிய  முதல் மற்றும் முன்னணி விஷயம், இந்த படத்தை தீவிர அக்கறையோடு எடிட் செய்ய வேண்டும் என்பது தான். ஒட்டு மொத்த குழுவுக்கும் நன்றி, குறிப்பாக, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் படம் நன்றாக வர பொறுமையாக இருந்ததற்கு நன்றி" என்றார் ரூபன்.



மேலும், இயக்குனர் கார்த்திக் தங்கவேல் பற்றி அவர் கூறும்போது, "ஸ்கிரிப்ட் டேபிள்' அல்லது 'எடிட்டிங் டேபிள்' தான்  படத்தின் விதியை முடிவு செய்யும் என்று சொல்வார்கள். ஆனால் கார்த்திக்க்ன் சிறப்பான செயல்முறை என் வேலையை எளிதாக்கியது, அதே நேரத்தில், நல்ல அவுட்புட் கொடுக்க கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ரசிக்க வைக்கும் என வலுவாக நம்புகிறேன்" என்றார். 



கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இந்த அடங்க மறு படத்தை தயாரித்திருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா