சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

பின்னணி இசை எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது - திபு நினன் தாமஸ்
Updated on : 17 December 2018

மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் இன்ஸ்புரேஷனல் படமான 'கனா'வை பெரிய திரைகளில் பார்க்கும் முன்பே, அதன் இசையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அருமையான 'வாயாடி பெத்த புள்ள' 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. 'ஊஞ்சலா ஊஞ்சலா' மற்றும் 'சவால்' ஆகியவை எழுச்சியூட்டும் கீதமாக அமைந்துள்ளன. 



"எங்களின் முதல் யோசனை, படத்தின் கதைக்கு அப்பால் அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்பது தான். இது ஒன்றும் யாரும் சிந்திக்காத ஒரு யோசனை கிடையாது. கடந்த காலங்களில் சில ஊக்க பாடல்கள் வந்திருக்கின்றன, அந்த படத்தின் தலைப்புகள் மறந்து போன பின்னரும் கூட அத்தகைய பாடல்கள் எல்லோருடைய மனதிலும் தொடர்ந்து நிலைத்திருக்கின்றன. அந்த மாதிரி ஒரு பாடலை கொண்டு வர விரும்பினோம்" என்றார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். 



மேலும், அவர் தொடர்ந்து கூறும்போது, "ஊஞ்சலா ஊஞ்சலா' மற்றும் 'சவால்' ஆகிய பாடல்கள் அருண்ராஜா காமராஜின் சிந்தனையில் உதித்தவை. ஊஞ்சலா ஊஞ்சலா பாடல் ஒவ்வொருவரும் உணர்ச்சிபூர்வமாக தங்களுடன் தொடர்பு கொள்ளும் பாடலாக இருக்கும். முழு படத்தின் ஆன்மாவாக குறிப்பிட ஒரு பாடலை உருவாக்க நாங்கள் விரும்பினோம், அது நடந்தது. சித் ஸ்ரீராம் மற்றும் நிரஞ்சனா ரமணன் ஆகியோர் தங்கள் குரலால்  உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பாடல்களை பாடிக் கொடுக்க ஏதுவாக இருந்தனர். மாயாஜாலம் நிகழ்ந்தது. சவால் பாடலுக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுக்களும் பாடலாசிரியர் மோகன்ராஜாவின் பாடல் வரிகளையே சாரும். கூடுதலாக, அருண்ராஜாவின் ராப் பாடல் வரிகள் பாடலை மேலும் அலங்கரித்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, ராபிட் மேக் உடன் இணைந்து அருண்ராஜா பாடியிருக்கும் ராப் பகுதி தான் ரசிகர்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும், மாயாஜாலத்தை உண்டாக்கியிருக்கிறது" என்றார். 



பின்னணி இசையை பற்றி திபு கூறும்போது, "பின்னணி இசை எனக்கு  மிகப்பெரிய சவால், என்னுடைய எல்லைகளை தாண்டி மிகச்சிறந்த இசையை வழங்க வேண்டி இருக்கிறது. பின்னணி இசை இல்லாமல் காட்சிகளை பார்ப்பதே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது" என்றார்.



சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் கனா வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், இளவரசு, முனிஷ்காந்த் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா