சற்று முன்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |   

சினிமா செய்திகள்

மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு மாபெரும் விழா, வானம் கலைத்திருவிழா!
Updated on : 19 December 2018

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பெருமளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த வருடம் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாட்களில் “வானம் கலைத்திருவிழா” நடக்க இருக்கிறது.



வானம் கலைத்திருவிழா பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவினரின் பாடல்களுடன் தொடங்கிய பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது,



கலை மக்களுக்கானது என்று மாவோ சொல்வார், அப்படியானால் யார் மக்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது. சிறுவயதில் நான் பார்த்த எத்தனையோ கலைகள் இன்று கிட்டத்தட்ட அழிந்துவிட்டன. மேடை ஏற்றப்படாத பல கலைகளைப்பற்றி நான் யோசிக்கும்போது அதெல்லாம் கலைகள் இல்லையா… என்ற ஒரு கேள்வி எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது. அப்படி நிராகரிக்கப்பட்ட, தவிர்க்கப்பட்ட, மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு விழா நடத்தவேண்டும் என்று நினைத்தோம். அதன் தொடர்ச்சியாக நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் இந்த கலைவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த கலைவிழா யாருக்கும் போட்டிக்காக நடத்தப்படும் விழா என்று நினைத்துவிடவேண்டாம். ஒற்றுமை தான் முக்கியம். கலைவழியே அதை சாத்தியப்படுத்தவே இந்த விழாவை நடத்துகிறோம். விழாவில் பறையிசை, நாடகங்கள், குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்வுகள், குழந்தைகளுக்கான மற்றும் இளைய தலைமுறைக்கான பயிலரங்கங்கள், பல்வேறு இசைப்பின்னணி கொண்ட பாடல்கள், அனைவரும் பங்கேற்று பாடும் தெருக்குரல், ஒப்பாரி, சிலம்பாட்டம், புத்தர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகம், ஆணவக்கொலையை கருப்பொருளாகக் கொண்ட நாட்டிய நிகழ்வு, மதுரை வீரன் கதை நாடகம், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைகளைப்பேசும் புத்தகங்களைக்கொண்ட மிகப்பெரிய லைப்ரரி, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் முதல் சினிமா சாராத இன்டிபென்டட் இசை ஆல்பம் “மகிழ்ச்சி” வெளியீடு, சமூக சிந்தனையுடன் கூடிய கவிதைகள், புத்தகங்கள் வெளியீடு இப்படி இன்னும் பல நிகழ்வுகளுடன் வானம் கலைத்திருவிழா நடக்க இருக்கிறது. கலைகளின் சமூகத்தில் விவாதங்களை ஏற்படுத்தி, அந்த விவாதங்களின் வழியே சமத்துவத்தையும் சமூக நீதியையும் முன்னெடுக்க வேண்டும், இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதைக்கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் இந்த வானம் கலைவிழாவின் முக்கிய நோக்கம். டிசம்பர் மாதத்தில் இதை நடத்த மிக முக்கியமான காரணம், இந்த வருடத்தின் கடைசி இரவு விடியும் போது சமூக நீதிக்கான விடியலாக அது இருக்கட்டும் என்று நினைத்தது தான் காரணம் என்று கூறினார் இயக்குநர் பா.இரஞ்சித்.



டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாள்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் நடக்கும் வானம் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கட்டணம் எதுவும் கிடையாது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.   

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா