சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

அடங்க மறு என் இதயத்துக்கு நெருக்கமான படம் - ஸ்டன்ட் சிவா
Updated on : 20 December 2018

சண்டைப்பயிற்சியாளர் ஸ்டன்ட் சிவா அடங்க மறு படத்தை பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறார். நாம் படத்தை பற்றியும், அவரது அனுபவங்களை பற்றியும் கேட்கும் முன்னரே அவரே மனம் திறந்து உற்சாகமாக பேசுகிறார். 



அவர் கூறும்போது, "ஜெயம் ரவியின் உடலமைப்பும், கோபக்கார இளைஞன் தோற்றமும் சண்டைப் பயிற்சியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இது எனக்கு மட்டுமல்ல, அவருடன் முந்தைய படங்களில் பணியாற்றிய ஒவ்வொரு சண்டைக்கலைஞருக்கும் வரம். 'ஆக்‌ஷன்' என்பது ஜெயம் ரவி திரைப்படங்களின் ஒரு இன்றியமையாத  பகுதியாக உள்ளது. இது சினிமாவில் அவருடைய ஆரம்ப கட்ட சினிமாக்களில் இருந்து எளிதாக கணக்கிட முடியும். இன்னும் குறிப்பாக, கடந்த ஒரு சில  ஆண்டுகளில் வெளியான அவர் படங்களில் வந்த ஆக்‌ஷன் காட்சிகளை சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இது அடங்க மறு படத்தின் சண்டைக்காட்சிகளில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான விஷயங்களை வழங்கியே ஆக வேண்டிய சவாலை கொடுத்துள்ளது. கார்த்திக் தங்கவேலுவின் கதை, வித்தியாசமான விஷயங்களை கொடுக்க வாய்ப்பை கொடுத்தது. படத்தின் முழு கதையும் நாயகனிம் புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப்பான செயல்களை அடிப்படையாகக் கொண்டது. எனவே நாங்கள் திட்டமிட்டு அவற்றை செயல்படுத்தினோம்" என்றார்.



ஒரு குறிப்பிடத்தக்க உண்மை  என்னவென்றால் ஸ்டன் சிவாவின் மகன்கள் - கெவின் குமார் மற்றும் இளைய மகன் ஸ்டீவன் குமார் ஆகிய இருவருமே கராத்தே சாம்பியன்கள். ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றவர்கள். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தற்காப்பு கலையை மையப்படுத்தி இருந்ததால், கெவினை அந்த காட்சிகளுக்கு உதவி  சண்டைப்பயிற்சியாராக வைத்துக் கொள்ளும் யோசனையை அவர் கொண்டு வந்தார்.



ஸ்டன் சிவா தனது மூத்த மகன் கெவின், சண்டைப்பயிற்சியாளராக  அறிமுகமாவதால் 'அடங்க மறு' அவருக்கு மிகவும் 'ஸ்பெஷல்' என கருதுகிறார். "ஆம், இது எனக்கு மிகவும் ஸ்பெஷல். என் இதயத்துக்கு நெருக்கமான படம். நானும், என் மூத்த மகன் கெவினும் இணைந்து படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு சண்டை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது" என்றார்.



டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கும் அடங்க மறு படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா