சற்று முன்

‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |   

சினிமா செய்திகள்

மைம் நிகழ்ச்சி நடத்தி புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உதவ
Updated on : 22 December 2018

நடிகர் மைம் கோபி சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர். இவர் மைம் கலை , நடிப்பு பயிற்சி ஆசிரியராகவும் இருக்கிறார். மைம் கலை மூலமாக பல நிகழ்ச்சிகள் நடத்தியும் வருபவர். 



சென்னை எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியுடன் இணைந்து மைம் நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் நிதியை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் மைம் நிகழ்ச்சியை டான் போஸ்கோ பள்ளி கலையரங்கில் நடத்தினார்கள். 



நடிகர்களாக டான் போஸ்கோ பள்ளி மாணவர்களையே பயிற்சி கொடுத்து நடிக்கவும் வைத்துள்ளார். இது பற்றி மைம் கோபி கூறுகையில்...



குழந்தைப்பருவத்தில் நாம் சொல்லிக்கொடுக்கும் பழக்கவழக்கங்கள்தான் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது, நல்ல பழக்கங்களும், உதவும் எண்ணமும், மனிதபிமானமும் சிறு வயதிலிருந்தே நாம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும் என்கிற நோக்கில் டான் போஸ்கோ பள்ளி மாணவர்களை மைம் கலையை சொல்லிக்கொடுத்து அதை மேடையேற்றி அதில் வரும் நிதியை  புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ உதவிக்கும், ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். 



தான் நடித்த நிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாய் எங்கோ இருக்கும் ஆதரவற்றவர்களுக்கும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவ உதவிக்கும்  உதவப்போகிறது என்பதை இந்த மாணவர்களுக்கு உணர்த்தினோம். மாணவர்களும் ஆர்வத்துடன் இந்த மைம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  



இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் மத்தியில் உதவும் குணத்தை ஏறபடுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த டான் போஸ்கோ பள்ளி பங்குத்தந்தை லூயி பிலிப் மற்றும் நிற்வாகத்தினருக்கு எனது நன்றிகள்.  என்றார்.



விழாவில் தயாரிப்பாளர் நந்தகுமார், நடன இயக்குனர் சாண்டி, இமாம் அண்ணாச்சி, நடிகை அர்ச்சனா, நடிகர் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா