சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

போத்தீஸ் பரம்பரா கிளாசிக் விருது 2018
Updated on : 25 December 2018

”போத்தீஸ் பரம்பரா கிளாசிக் விருது” 2018



”ஜீ  தமிழ்” தொலைக்காட்சியின் ஆதரவுடன் ”போத்தீஸ் பரம்பரா பட்டு” வழங்கும் ”லஷ்மன் ஸ்ருதி” யின் ”சென்னையில் திருவையாறு”  இசை விழாவில்,

உலகிலேயே  முதன்  முறையாக  கர்நாடக  சங்கீத  நாட்டிய  உலகின்  முன்னணி நட்சத்திரங்கள்  முதல் வளரும் கலைஞர்கள் அனைவரும்   பங்கேற்கும் 

”போத்தீஸ் பரம்பரா கிளாசிக் விருது” வழங்கும் விழா  25 . 12. 2018  செவ்வாய்க்கிழமை  மாலை 4 .30  மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.

"போத்தீஸ்" நிர்வாக இயக்குநர் திரு . எஸ். ரமேஷ் அவர்கள் தலைமையேற்க

 "ஜீ தமிழ்" தொலைக்காட்சியின் தென்மண்டல தலைவர் திரு . சிஜு பிரபாகர் அவர்கள் முன்னிலை வகிக்க இருக்கும்.



இந்த இனிய விழாவில்  மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ”மாண்புமிகு டி. ஜெயக்குமார்” அவர்கள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார் .



சிறப்பு விருந்தினர்களாக டிக்சாட் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி . தேவநாதன் அவர்களும், மாநில தகவல் ஆணையர் டாக்டர் ஆர். பிரதாப்குமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.. மேலும் ”போத்தீஸ் பரம்பரா கிளாசிக் விருது” வழங்கும் விழாவை அலங்கரிக்க, கர்நாடக சங்கீத நாட்டிய உலகின் ஜாம்பவான்கள், திரைப்பட நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், இசை அமைப்பாளர்கள் , பின்னணி பாடகர்கள் கலந்து கொள்கின்றனர் . ”கர்நாடிக்கா” நிறுவனத்தின் தலைவர் திரு. சசிகிரண் அவர்கள் விழா அமைப்பினை செய்து வருகிறார். . மேலும் இந்த விழாவினை ”மேக்ஸிமம் மீடியா” நிர்வாக இயக்குநர் சுபஸ்ரீ தணிகாச்சலம் அவர்களும் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் உமா பத்மநாபன் அவர்களும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள்.



உங்களுக்குப் பிடித்த அபிமான கர்நாடக சங்கீத மற்றும் நடனக்கலைஞர்களை 

போத்தீஸ் பரம்பரா க்ளாசிக் விருதுக்கு தேர்வு செய்ய ஈமெயில் மூலம் தெரிவிக்க paramparaawards.ct@gmail.com வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்க 9499908474 

நுழைவு கட்டணம் ஏதும் இன்றி அனைவரும் கலந்து கொண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விழாவிற்கு ரசிகர்கள் திரளாக வருகை தந்து விருது பெறும் கலைஞர்களை வாழ்த்த வேண்டும் என்று லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ் நிர்வாகி லஷ்மன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா