சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

கனா எல்லோராலும் பாராட்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது - இணை தயாரிப்பாளர் கலையரசு
Updated on : 26 December 2018

சினிமாவில் "இன்ஸ்பிரேஷன்ஸ்" என்பதே ஒரு தனி ஜானர். அந்த விஷயங்களை கொண்டிருக்கும் எந்த ஒரு படமும் மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் என நான் சொல்வேன். எங்கள் தயாரிப்பான "கனா" எல்லோராலும் பாராட்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. வணிக வெற்றியை விட, தியேட்டர்களில் தங்கள் படங்களை ரசிகர்கள் முழுமையாக அனுபவிப்பதை பார்ப்பது தான் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். ரசிகர்களின் பல்ஸை அருண்ராஜா  காமராஜ் கச்சிதமாக தெரிந்து வைத்திருக்கிறார். திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு என் எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டன" என்கிறார் இணை தயாரிப்பாளர் கலையரசு.



அவர் தற்போது அனுபவிக்கும் ஒரு எதிர்பாராத ஆச்சரியம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அவத் கூறும்போது, "ஒரு திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடும்போது, வர்த்தக ரீதியாக வெற்றிகரமாக கருதப்படும். ஆனால் பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சிறப்பு திரையிடலுக்காக எங்களை அணுகுவதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. மேலும், ரசிகர்களின் வாய்வழி செய்தி மூலம் மிகப்பெரிய விளம்பரமாகி, திரையரங்குகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இன்னும் நல்ல தரமான  பொழுதுபோக்கு படங்களை வழங்க இது ஊக்கமாக இருக்கிறது" என்றார்.



மேலும், மொத்த குழுவுக்கும் நன்றி தெரிவித்து பேசும்போது, "ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் ஒரு பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்பதை கனா மறுபடியும் நிரூபித்திருக்கிறது. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் எப்போதும் யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக இருக்கிறதுது. 'கனா' மூலம் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார். அறிமுக திரைப்படம் என்றாலும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் தர்ஷன். மேலும் அவருடைய காட்சிகளை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதை பார்க்க  இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யராஜ் சார் பற்றி நான் வேறு என்ன சொல்ல முடியும்? தன் மாயாஜால நடிப்பால் படத்தின் முதுகெலும்பாக இருந்து படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறார். கனாவில் தன் இசையால் ரசிகர்களிம் கவனத்தை ஆரம்பம் முதலே ஈர்த்திருந்தார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் அனுபவத்தை வழங்கிய ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் மிக வேகமாக படத்தை தொகுத்த ரூபன் ஆகியோரை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இந்த திரைப்படத்தை சிறப்பாக உருவாக்க நிபந்தனையற்ற ஈடுபாட்டுடன் அவர்கள் கொடுத்த உழைப்பு தான் இப்போது அழகான படத்தை கொடுத்திருக்கிறது" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா