சற்று முன்

தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |    பிரதமர் மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் குரலில் அரங்கேற்றப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடல்!   |    நகரின் சுழற்சியும் குடும்ப உறவுகளும் கலந்த “கான் சிட்டி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!   |    “VVVSI.com” கட்டணமில்லா வேலைவாய்ப்பு இணையதளம் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார்   |    விஜய் சேதுபதி, பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியான “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ஃபர்ஸ்ட் லுக்   |   

சினிமா செய்திகள்

நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணம்
Updated on : 14 April 2015

உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்து நடந்தார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் முன்னிலை வகித்து நடந்தார்.

இன்று உலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் பார்க்கின்சன்ஸ் நோய்இதனால் பாதிக்கப்பட்டவருக்கு முதலில் கை நடுக்கம் என்று தொடங்கி படிப்படியாக உடல் செயலிழப்பு வரை ஏற்படும். இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் 7.1மில்லியன் பேர் உள்ளனர். ஆனால் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால்தான் இந்த நடைப்பயண  ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நியூ ஹோப் ப்ரெய்ன் அண்ட் ஸ்பைன் சென்டர் மற்றும் ஆண்டனி பவுண்டேஷன் ஆகியவை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வைத் தொடங்கி வைத்த நடிகர் ஜெயம்ரவி பேசும்போது "இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருக்கும் டாக்டர் குழுவினரைப் பாராட்டுகிறேன்.அவர்களின் இம்முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன். " என்றார்.

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் பேசும்போது " நல்ல நோக்கத்தில் நடத்தப்படுகிற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் 7.1மில்லியன் பேர்  என்கிற விவரம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது பற்றிமேலும்  விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். " என்றார்.

இந்நோயால் முதலில் பாதிக்கப்பட்ட நபரான பார்க்கின்சன் பெயரையே இந்நோய்க்கு வைத்துள்ளனர். அதைக் கண்டுபிடித்தவரும் அவரே

பார்க்கின்சன்ஸ் நாளையொட்டி நரம்பியல் நிபுணர் டாக்டர் ராம் நாராயணன் பேசும்போது "பிரபல குத்துச் சண்டை வீரர் இந்த நோயால் பாதிக்கப் பட்டார். அதன் பின்னர்தான் இது வெளியே பிரபலமானது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட ஆரம்பித்தது.

சர்க்கரை நோய்வருவதற்குப் பல காரணங்கள் இருப்பது போல பார்க்கின்சன்ஸ்நோய் வரவும் பல காரணங்கள்உள்ளன. இதனால்தான் வருகிறது என்று வரையறுத்துக் கூற முடியாது.

மூளையில் செயல்களைச் செய்யத்தூண்டும் டோபமீன் என்கிற வேதிப் பொருளின் அளவு குறைவதால் இது ஏற்படுகிறது.

அசதி, மந்தம், தடுமாற்றம், பேச்சு குளறுதல், உணர்ச்சியை வெளிப்படுத்தாத முகம், நடுக்கம் என்று இதில்  பல நிலைகள் உண்டு

ஆரம்பத்தில் கண்டறிந்தால் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். முற்றினால் அறுவை சிகிச்சை தேவைப்படும். இதைச் செய்ய எங்கள் மருத்துவமனையில் சிறப்பு நிபுணர் குழு உள்ளனர்.

முதலில் பார்க்கின்சன்ஸ் நோய் பற்றிய விழிப்புணார்வே மக்களிடம் இல்லை. அதனால்தான் இதை நடத்துகிறோம். " என்றார்.

டாக்டர்கள் சைமன் ஹெர்குலிஸ், எம். அருண் மொழிராஜன், சேகர், எஸ்..பி.தம்பி, சையது, ஆனந்த் நேசமணி  ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான இளைஞர்களும் இளைஞிகளும்இந்த நடைப்பயணத்தில் பங்கு பெற்று நடந்தனர்.

இந்த நடைப்பயணம் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கத்திலிருந்து விவேகானந்தர் இல்லம் வரை அடைந்து நிறைவு பெற்றது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா