சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

சீதக்காதி மேடை நாடக உலகம் மற்றும் அதன் கலைஞர்களுக்கு அர்ப்பணம்
Updated on : 26 December 2018

சீதக்காதி படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பால் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். படக்குழுவின் முக்கிய நோக்கமே 'மேடை நாடக உலகம்' மற்றும் அதன் கலைஞர்களுக்கு அர்ப்பணம் செய்வது தான். யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்களை சென்று சேர்ந்திருக்கிறது படம். எனினும், அவர்கள் தனித்துவமான கருத்துடைய ஒரு திரைப்படத்தை தயாரிக்க கிடைத்த  அதிர்ஷ்டத்தையே முழுமையான மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள். ஹாலிவுட்டுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய கதையை எடுத்தது பெருமை. இந்த அற்புதமான படைப்பை உருவாக்கிய இயக்குனர் பாலாஜி தரணீதரன் மற்றும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய, நாடக கலைஞர்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ள, அதன் வழியாக இன்று தமிழ் சினிமாவில் "மக்கள் செல்வன்" ஆக மாறியுள்ள விஜய் சேதுபதி ஆகியோர் மீது மிகுந்த மரியாதையில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.



75 வயதுள்ள நாடக கலைஞராக விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி டிசம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. கோவிந்த் வசந்தா இசையமைக்க, சரஸ்காந்த் டி.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார்.



விஜய் சேதுபதி "சீதக்காதி"யில் தான் வெறும் 40 நிமிடங்கள் தான் தோன்றுவேன் என வெளிப்படையாக அறிவித்திருந்தது பார்வையாளர்களை துல்லியமான மனநிலையுடன் தயார்படுத்தியிருந்தது என தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே இத்தகைய வழிகாட்டும் நடைமுறைகள் தூய சினிமாவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா