சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

23 நாட்களில் படமான அங்காடிதெரு மகேஷ் - ஷாலு நடிக்கும் என் காதலி சீன் போடுறா
Updated on : 27 December 2018

சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என்  காதலி சீன் போடுறா “என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.



இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர், தியா, தென்னவன்,வையாபுரி,  ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.  முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்.   



கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ராம்சேவா.  இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது...



ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும்...சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லா விட்டால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது. இதை காமெடியாக வும் கமர்ஷியலாகவும் சொல்லி இருக்கிறோம். மனோபாலா  காமெடியில்  கலக்கி இருக்கிறார். 



நான்கு பாடல்களும் வெவ்வேறு விதமாக கொடுத்திருக்கிறார் இசைமைப்பாளர் அம்ரிஷ். சின்னமச்சான் பாடலை தொடர்ந்து செந்தில்கணேஷ் -  ராஜலக்ஷ்மி இருவரும் இந்த படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள்.  “ நிலா கல்லுல செதுக்கிய சிலையா “   என்று துவங்கும் அந்த பாடல் மிகப் பெரியஹிட்டாகும் என்பதில் எந்த  ஒரு ஐயமும் இல்லை. வெறும் 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம். அதற்கு பக்க பலமாக இருந்த என்னுடைய ஒளிப்பதிவாளர் வெங்கட்மற்றும் படக்குழு அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்றது.  படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் ராம்சேவா. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா