சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

ரஷ்யாவில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் - விஸ்வாஸம்
Updated on : 27 December 2018

அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாஸம் வர்த்தக வட்டாரங்களில் மிகவும்  சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. 2019ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றான, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு மிகப்பெரிய வணிக சந்தையை கொண்டுள்ளது. தற்போது ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் திரைப்படத்தை வெளியிடும் செவன்த் சென்ஸ் சினிமேடிக்ஸின் பிரசாந்த் அவர்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.



"திரு.அஜித்குமார் அவர்களின் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் கதை தேர்வு, வெளிநாட்டு சந்தையில் அவருக்கென ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளது. செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் சார்பில் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் 'விஸ்வாஸம்' படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். உண்மையில், இந்த நாடுகளில் வெளியாகும் முதல் அஜித்குமார் படம் இது தான். ஆனால், குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் ரஷ்யாவில் 8க்கும் அதிகமான நகரங்களில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படமாக இது இருக்கப் போகிறது என்கிறார் செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் பிரசாந்த். இவர் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை ரஷ்யாவில் வெளியிட்டிருக்கிறார்.



இந்த நாடுகளில் நம் திரைப்படங்களின் வரவேற்பு குறித்து அவர் குறிப்பிடுகையில், "பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவுக்கும் இடையிலான இடைவெளி நல்ல கதையுள்ள படங்களால் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், இங்குள்ள ரசிகர்கள் தொழில்நுட்ப ரீதியான திரைப்படங்கள் மட்டுமல்லாமல், உணர்வுள்ள நல்ல குடும்பப்பாங்கான பொழுதுபோக்கு படங்களையும் கூட மிகவும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறார்கள். நிச்சயமாக, குடும்ப உணர்வுகள் உலகளாவிய பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். மேலும், தமிழ் பேசும் நாடுகளை தாண்டி, அஜித்குமாரின் பல திரைப்படங்களை ஆன்லைனில் பார்த்து, அவருக்கென ஒரு வலுவான ரசிகர் தளம் இந்த நாடுகளில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார்.



பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் இந்த விஸ்வாஸம் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரமேஷ் திலக், யோகிபாபு, ரோபோ ஷங்கர், அனிகா, கோவை சரளா மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் வெளிநாட்டு உரிமைகளை நடிகர், தயாரிப்பாளர் அருண்பாண்டியன் ஏ & பி குரூப் சார்பில் கைப்பற்றியிருக்கிறார்.



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா