சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால்
Updated on : 31 December 2018

புதிய பரிமாண சோதனை முயற்சிகளுடன் நிச்சயிக்கப்பட்ட வெற்றிகளை பெற்ற வெற்றியாளர் அமலா பால், பெரும் அளவிலான  பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறார். அவரின் பல அண்மைக்கால திரைப்படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், படம் எந்த மாதிரி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன. தற்போது இந்த லிஸ்டில் ஒரு புதிய படமும் இணைந்திருக்கிறது. இது அவருடைய புதிய முயற்சி மட்டுமல்ல, இந்திய சினிமாவில் முதல் முயற்சியும் கூட. அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் இயக்கும் இந்த நாயகியை மையப்படுத்திய படத்தில் தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால் நடிக்கிறார். இந்திய சினிமாவில் ஒரு நாயக கதாபாத்திரம் தடயவியல் நிபுணராக இடம்பெறும் முதல்  தடயவியல் புலனாய்வு திரில்லர் படம் இது தான். ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, அவர் கையாளும் தனித்துவமான வழிமுறைகளை சுற்றி நடக்கும் கதை.



மேலும், இந்த படம் கேரள முன்னாள் காவல்துறை மருத்துவர் டாக்டர் பி. உமாதத்தன் அவர்கள் கையாண்ட ஒரு உண்மையான வழக்கை அடிப்படையாகக் கொண்டது. அனூப் பணிக்கர் மற்றும் அபிலாஷ் பிள்ளை ஆகிய இருவரும் அவருடன் 6 மாதங்கள் ஆழமாக கலந்துரையாடி கதையை எழுதியிருக்கின்றனர். தடய அறுவை மருத்துவத்தை பற்றி அறிந்து கொள்ள பல மருத்துவ கல்லூரிகளையும் கூட இந்த இருவரும் பார்வையிட்டனர்.



சுவாரஸ்யமாக, 'ராட்சசன்' படத்தின் படத்தொகுப்பாளர், கலை இயக்குனர், சண்டைப்பயிற்சியாளர் என ஏறக்குறைய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் பணியாற்ற பிரபல நடிகர்கள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது விரைவில் இறுதி செய்யப்படும். ஏ.ஜே. ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2019ல் தொடங்குகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மொத்த படமும் படமாக்கப்பட இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா