சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

ஜனவரி மாதம் வெளியாகிறது ரங்கா படத்தின் இசை
Updated on : 31 December 2018

நடிகர் சிபிராஜ் தற்போது தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அவரது கேரியரின் பெருமைக்குரிய படமான 'மாயோன்' படத்தில் நடித்து வரும் அதே வேளையில், வினோத் டி.எல் இயக்கியுள்ள 'ரங்கா' படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார். 



படம் மிகச்சிறப்பாக வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா கூறும்போது, "இயக்குனர் சொன்ன கதையை அப்படியே திரையில் பார்க்கும்போது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் உண்மையான மகிழ்ச்சியே. குறிப்பாக, ஒரு சரியான நேரத்தில் படத்தை முடித்துக் கொடுக்கும் இயக்குனர் கிடைப்பது வரம். படத்தின் இறுதி வடிவம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, அதை பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் இறுதி வடிவத்தை பார்க்கும்போது ஒரு பார்வையாளராக எனக்கும் ஆர்வம் இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் படத்தின் முன்னேற்றத்திற்கு மிகுந்த கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்த இயக்குனர் வினோத்துக்கு தான் எல்லா பாராட்டுக்களும் சாரும்" என்றார்.



படத்தின் ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் படப்பிடிப்பு முழுவதும் ஆதரவாக இருந்தனர் என ஒப்புக்கொள்கிறார் தயாரிப்பாளர். "திறமையான நடிகர்கள் என்பதை தாண்டி, தயாரிப்பாளர்களின் முதலீடுகளை மனதில் வைத்து நடிக்கும் நடிகர்களுடன் பணியாற்றுவது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு நல்லது. இந்த முறையில், 'ரங்கா' படக்குழு என் நலனையும் கருத்தில் கொண்டது. குறிப்பாக, சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் காஷ்மீரின் கடுமையான பனிப்பொழிவு சூழலிலும், படப்பிடிப்பு குறித்த நேரத்தில் முடிவடைய தங்களால் முடிந்ததை செய்தனர்" என்றார்.



சிபிராஜ் உட்பட ஒட்டுமொத்த குழுவும் தங்கள் பகுதிகளை டப்பிங் செய்து முடித்துள்ளனர். ஜனவரி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இசையை வெளியிடவும், பிப்ரவரியில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா