சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

SP சினிமாஸ் தயாரிக்கும் K13
Updated on : 04 January 2019

சில நேரங்களில், சில திரைப்படங்கள் தொடர்ந்து நேர்மறை அதிர்வுகளை பரப்பி பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும். அதற்கு சரியான உதாரணமாக பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கும் படத்தை சொல்லலாம். அது நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பற்றிய அறிவிப்பாக இருக்கட்டும் அல்லது படம் தயாரிப்பில் இருந்தபோது வந்த முக்கியமான தருணங்களாக இருக்கட்டும், நம் கவனத்தை அதிக அளவில் ஈர்த்துள்ளது. தற்போது K13 என்ற படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



படத்தின் தலைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி இயக்குனர் பரத் கூறும்போது, "K13 ஒரு வீட்டின் முகவரி, அது இந்த படத்தின் கதையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை உடையது. சில வரம்புகளுக்கு உட்பட்டு, படத்தை பற்றி நாங்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாது, பார்வையாளர்களே படத்தை பார்த்து அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்றார். 



K13 ஒரு இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்து பார்க்கும் வகையிலான ஒரு திரில்லர் படமாக இருக்கும். நாயகன், நாயகி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அவர்களை இதில் நடிக்க தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அவர்கள் இருவருமே சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். மேலும் தங்கள் படம் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், உடனடியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவசரம் காட்டாதவர்கள். நல்ல கதைக்காக எவ்வளவு காலமும் காத்திருப்பவர்கள்" என்றார். 



இந்த K13 படத்தை SP சினிமாஸ் சார்பில் SP ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா தயாரிக்கிறார்கள். கிஷோர் சம்பத் மற்றும் டெஸாஸ்ரீ டி இணை தயாரிப்பு. தர்புகா சிவா இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சுதேஷ் வடிவமைத்திருக்கும் அதிரடி  சண்டைக்காட்சிகள் இந்த படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா