சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

நடிகர் ஷாரங்க் இயக்குனராக அறிமுகமாகும் நடுவன்
Updated on : 06 January 2019

நடிகர் பரத் எப்போதும் நடிப்பிற்கு மிகவும்  சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். முதல் முறையாக, நடிகர் ஷாரங்க் இயக்குனராக அறிமுகமாகும் 'நடுவன்' படத்தில் தந்தையாக  நடிக்கிறார். மலைப்பகுதி பின்னணியில் அமைந்திருக்கும் இந்த திரில்லர் ட்ராமா,  ஏராளமான சவால்களை கொண்டிருந்தது. இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிகர்களின் அர்ப்பணிப்பு பற்றிய சில மறக்க முடியாத தருணங்களை இயக்குனர் நம்முடன் பகிர்கிறார்.



"படத்தில் உள்ள அனைவருமே ஸ்டண்ட் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். இது பரத் மற்றும் கோகுல் மட்டுமல்லாமல் நாயகி அபர்ணா வினோத் மற்றும் குட்டிப்பெண் ஆரத்யா ஆகியோரும் சண்டைக்காட்சிகளில் அவர்களே நடித்திருந்தனர். இதை செய்ய சொல்லி யாரும் திணிக்கவில்லை, டூப் கலைஞர்கள் கூட தயாராக இருந்தனர். இருப்பினும், கதை மற்றும் சூழ்நிலையின் ஆழத்தை உணர்ந்து, கதையும் அதை கோரியதால், மழை மற்றும் மூடுபனியையும் பொருட்படுத்தாமல் அந்த சவாலான காட்சிகளில் தாங்களே முன் வந்து நடித்தனர். ஒரு ஸ்டண்ட் காட்சியின்போது  நடிகர் பரத் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. ஓய்வெடுக்க வற்புறுத்தியும், அவர் உடனடியாக படப்பிடிப்பில்  கலந்து கொண்டார். அபர்ணா வினோத் எந்தவொரு டூப்பும் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடிக்கும் அளவுக்கு தைரியமாக இருந்தார். ஒரே டேக்கில் ஒரு சண்டைக்காட்சியில் எந்த காயமும் படாமல் நடித்து எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இரவு நேரத்தில் ஒரு சண்டைக் காட்சியில், கோகுல் ஆனந்த தலையில் கடுமையாக அடிபட்டது. மிகவும் குளிராக இருந்தது, உண்மையில் யாராக இருந்தாலும் ஒரு பிரேக் கேட்டிருப்பார்கள். ஆனால் அவர் தொடர்ந்து காயத்துடன் நடித்தார்" என்றார்.



உறியடி மற்றும் ராட்சசன் போன்ற திரைப்படங்களில் அவரது சிறந்த சண்டைக் காட்சிகளை வழங்கிய சண்டைப் பயிற்சியாளர் விக்கி அவர்களுக்கு தான் அதிக நன்றியை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.



நடுவன் படத்துக்கு தரண்குமார் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கார்க்கி, டாக்டர் பர்ன் மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோர் இந்த படத்தில் பாடல் எழுதியுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா