சற்று முன்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |   

சினிமா செய்திகள்

சென்னையில் 5ஆம் ஆண்டு உலகத்தமிழர் திருநாள் விழா துவக்கம்
Updated on : 07 January 2019

5ஆம் ஆண்டு உலகத்தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத்தமிழ் வம்சாவளியினர் ஒன்றுகூடல் நிகழ்வு ஜனவரி மாதம் 5, 6 ஆம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது.



மேதகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் துவக்கி வைக்க இறுதி நாளில் மேதகு கேரள ஆளுநர் தலைமை நீதியரசர் .P.சதாசிவம் அவர்கள் நிறைவு செய்து பேருரை ஆற்றினார்.



திரு ஐசரி கணேஷ், வேந்தர்- வேல்ஸ் பல்கலைகழகம், வேந்தர் கோ. விஸ்வநாதன், வி.ஐ.டி பல்கலைக்கழகம், மரு குருஷங்கர் மீனாட்சி மிஷன் – மருத்துவமனை, முனைவர். பழனி .ஜி .பெரியசாமி, முனைவர் AC. சண்முகம் - டாக்டர் MGR பல்கலைக்கழகம், மற்றும் திரு பீட்டர் அல்போன்ஸ், நடிகர் பொன்வண்ணன் மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



இம்மாநாட்டில் தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா, கலை நிகழ்ச்சிகள், தமிழர் ஆடை அலங்கார அணிவகுப்பு, பழந்தமிழர் வாழ்வியல் காட்சியரங்கு ஆகியவையும் நடைப்பெற்றது. சாதனை தமிழன் மற்றும் நல்லாசான் விருது வழங்கப்பட்டது.



அயலக அரசியலில் தமிழர்கள் என்ற தலைப்பில் திருமிகு வைகோ மற்றும் திருமிகு தொல்.திருமாவளவன் அயலக அரசியல் தமிழர்களுடன் கலந்துரையாடினர். உலக தமிழ் பல்கலைக்கழகம் -மின்னியல் லட்சிச்சினை துவக்கம் நடைப்பெற்றது.



மாநாட்டின் தீர்மானங்களாக, உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு செல்வகுமார் மாநில மத்திய அரசுகளிடம் வெளியிட்ட கோரிக்கையின் விவரம் வருமாறு:



1.தமிழக அரசு, அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் நலனுக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும்.



2.மத்திய அரசு அயலக தமிழர்களின் நலனுக்காக அவர்களின் பிரச்சினைகளை களையும் பொருட்டு நியமன ராஜ்யசபா உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்



3. உலகமக்கள் தொகையில் 2சதவிகிதம் உள்ள தமிழர்களில் அயலகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு People of Indian Origin போல் People of Tamil origin என அடையாள அட்டை வழங்கவேண்டும்



4.நம் கலை கலாச்சார பண்பாடுகளை அயலக தமிழர்கள் அறியும் வகையில், அயலக தமிழர்களை ஆண்டு தோறும் அழைத்து உலகத்தமிழர் திருநாள் விழா நடத்த மத்திய மாநில  அரசு உதவவேண்டும்.



5. அயல் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் கற்க மத்திய அரசு உதவ வேண்டும்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா