சற்று முன்

'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |    தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் துருவ் விக்ரம் நடிக்கும் படம் 'பைசன் காளமடான்' வெளியாகிறது!   |    துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்   |    ஓடிடி- யில் உலகில் சாதனை படைத்து வருகிறது ZEE5-இன் 'அய்யனா மானே' சீரிஸ்!   |    'நாக் நாக்' கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது - இயக்குநர் ராகவ் ரங்கநாதன   |    பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 பூஜையுடன் துவங்கியது!   |    முன்னணி திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'மனிதர்கள்' அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடிக்கும் 'அடங்காதே'   |    உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'லெவன்' பட டிரெய்லர்!   |    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!   |    நடிகர் சூரி நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக 'மாமன்' இருக்கும்   |    ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள மக்கள் மனம் கவர்ந்த 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ!   |    வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான் - ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்!   |    என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - பேரரசு!   |    தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்   |    விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்!   |   

சினிமா செய்திகள்

கவனம் பெறும் களம் படத்தில் கபிலன் வைரமுத்து எழுதிய பாடல்!
Updated on : 08 April 2016

ராபர்ட் ராஜ் இயக்கத்தில் எதிர்வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் களம். அருள் மூவிஸ் தயாரித்து, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இப்படத்தை வெளியிடுகிறார்.



 



தயாரிப்பாளர் சுபீஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த படத்திற்கு, ரெளத்திரம் படத்திற்கு இசையமைத்த பிரகாஷ் நிக்கி இசையமைக்கிறார்.



 



இந்த படத்தில் கவிஞர் கபிலன் வைரமுத்து இரண்டு பாடல்களை எழுதியிருந்தாலும், அதில் ஒரு பாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.



 



நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் பாடலைப் போல களம் படத்திலும் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார் கபிலன் வைரமுத்து. மாயம் காண வாராயோ என்று தொடங்கும் இப்பாடல்,  பாழடைந்த ஜமீன்தாரின் வீட்டை மையமாகக்கொண்டு அந்த வீடே பாடுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது.



 



திரையில் பார்க்கும்போது புதிதாய் குடி வருகிறவர்களைப் பார்த்து அந்த ஜமீன் வீடு பாடுவது போலவும், அந்தக் காட்சிகளை மறந்துவிட்டு பாடலை மட்டும் கேட்டால் ஒரு பெண்ணுடைய காதல் ஏக்கம் போலவும் ஒரே பாட்டில் இரண்டு பொருள் வரும்படி மிகச் சிறப்பாக இந்த “மாயம் காண வாராயோ” பாடல் அமைக்கப்பட்டுள்ளது.



 



அந்த பாடலின் வரிகள்:

 



பல்லவி

 



மாயம் காண வாராயோ - உன் கண்கள் பொம்மையோ?

 



நிலா சாய்ந்த ஒரு நினைவு சுவராய்

என் மேனி ஆனதோ?

 



அறைகள் ஒவ்வொன்றாய் நான் திறந்திட

வெளிச்சம் வவ்வாலாய் சுருங்கிட

 



உள்ளே வருகவே

உன்னைத் தருகவே

 



சரணம்

 



ஜன்னல் மூடி மெளனம் கூட்டி

மெழுகைக் கொளுத்திடு மகிழ்ந்திடுவேன்

 



பிரயாணங்கள் அவை முடியும் முன்னே

பிறவி சாந்தியை பரிசளிப்பேன்

 



மன கூடத்தின் ஊடே கொலுவாய் நுழைந்தாயே

உனைக் கொண்டாடி ஓய்வேனே

 



அன்பாய்த் தொடும்

அந்நாள் வரும்…

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா