சற்று முன்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |   

சினிமா செய்திகள்

அஜித் மிகவும் நல்ல மற்றும் அன்பான மனிதர் - ஜெகபதி பாபு
Updated on : 08 January 2019

மிகவும் ஸ்டைலான மற்றும் மக்களை கவரும் தோற்றத்துடன் கூடிய ஒரு சிறந்த நடிகரை கண்டுபிடிப்பது மிகவும் அபூர்வமானது. ஜெகபதி பாபு இந்த குணங்களை கணிசமாக வைத்திருப்பதால் தான், மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு நடிகராக இருக்கிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சென்னையுடன் ஒரு பிரிக்க முடியாத பந்தத்தை கொண்டிருக்கும் அவர் "விஸ்வாசம்" படம் அவரை தமிழ்நாட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்கும் என நம்புகிறார். இது குறித்து அவர் கூறும்போது, "வெளிப்படையாக சொல்வதென்றால் குழந்தை பருவத்தில் இருந்தே இந்த மண்ணில் ஒரு ஹிட் திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன். நிச்சயமாக, இந்த படம் என் நீண்ட கால கனவை நிறைவேறற போகிறது" என்றார்.



"விஸ்வாசம்" குழுவில் பணிபுரிந்த அவரது அழகான நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்போது, "அஜித் சார் போன்ற ஒரு நபர் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அவர் மிகவும் நல்ல மற்றும் அன்பான மனிதர். மக்களுக்கு பல நல்ல விஷயங்களை நிறைய செய்திருக்கிறார். மற்ற நபரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் அஜித் சார் போன்ற ஒரு நடிகர், அவர் ரசிகர்களிடம் இருந்து பெறும் மரியாதை மற்றும் ஆராதனைக்கு தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்.



தொடர்ந்து அவர் கூறும்போது, "விஸ்வாஸம்" படத்தில் ஹீரோ, வில்லன் என இருவருமே "சால்ட் 'என்' பெப்பர்" தோற்றத்தில் தோன்றுவதால், ஆரம்பத்தில் இருந்து நேர்மறையாக அதை உணர்ந்தேன். அஜித்தை ரசிகர்கள் அத்தகைய நம்பிக்கையுடன் பார்ப்பார்கள். இந்த படத்தில் அவர் கதாபாத்திரம் மாஸ் மற்றும் கிளாஸ் என ஒரு கலவையை கொண்டிருக்கும். குறிப்பாக மாஸ் காட்சிகளை, அவரது அலப்பறையை, அப்பாவிதனத்தை அவருடைய ரசிகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் நன்றாக அனுபவிப்பார்கள். உண்மையில், என்னுடைய சிந்தனையுடன் அந்த கதாப்பாத்திரம் ஒத்துப் போனதால், அவரது கதாபாத்திரத்தை நான் தனிப்பட்ட முறையில் விரும்பினேன்.



குறிப்பாக இந்த படத்தில் ஹீரோ, வில்லன் மோதல் மிக முக்கியமாக, அவர்களின் வித்தியாசமான, வேறுபட்ட  சிந்தனைகளால் நடப்பது தான். நான் என்ன நினைக்கிறேனோ, என்ன செய்கிறேனோ அது தான் சரி என  நம்புகிறவன் நான். அதனால் தான் "என் கதையில நான் ஹீரோ டா" என்று வசனம் பேசுகிறேன்.



இயக்குனர் சிவா பற்றி அவர் கூறும்போது, "சிவா மிகவும் இனிமையானவர், அவரது புன்னகை எப்போதும் உண்மையானது. சில சமயங்களில், அவர் உணர்வுகளை தனக்குள்ளே மறைத்துவிட்டு வெளியில்  பாஸிட்டிவாக நடந்துகொள்கிறாரா என நான் சந்தேகத்துடன் கேட்டிருக்கிறேன். இருப்பினும், அவரது மனது மிகவும் தூய்மையானது. அது தான் அவர் செய்யும் படங்களில் பிரதிபலிக்கிறது. நயன்தாரா ஒரு அழகிய பெண்,  எப்போதும் எளிமையாக இருப்பவர். எனக்கு 'விஸ்வாசம்' அணியுடன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வேலை செய்யும் வாய்ப்பு வந்தால் நான்  ஆசீர்வதிக்கப் பட்டவனாக உணர்வேன். இந்த குழுவில் உள்ள எல்லோரும், நேர்மறையான, தூய்மையான, நல்ல இயல்பை பகிர்ந்து கொள்கிறார்கள்.



சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் பற்றி அவர் கூறும்போது, "அவர்கள் எல்லோரையும் சமமாக மதிக்கின்ற,  தொழில்முறை தயாரிப்பாளர்கள். என் தந்தை தயாரிப்பாளராக இருந்த  நாட்களிலிருந்தே அவர்கள் புகழ்பெற்ற பிராண்ட் என்று நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் தயாரித்த இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் என்னை அன்போடும், பாசத்தோடும் நடத்தியது அவர்கள் மீதான மரியாதையை மேலும்  அதிகரித்தது" என்றார்.



ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்திருக்கிறார்கள். டி.இமானின் பட்டையை கிளப்பும் பாடல்களும், வெற்றியின் வணணமயமான ஒளிப்பதிவும், ட்ரைலரில் பார்த்த ரூபனின் வேகமான எடிட்டிங்கும், தமிழகத்தின் நகரங்கள் மற்றும் கிராமங்கள் முழுவதும் திருவிழாவை துவக்கி வைத்திருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா